163.
சிஞ்ஞாசும் இரு வகை:
பந்தமனை துறந்துசில ரதிதிகளா யிருந்தடைவர் பரம ஞானம்
அந்தணர்மன் னவர்வணிகர் சூத்திரராயிருந்து சில ரடைவர் ஞானம்
இந்தவகைச் சாத்திரத்து முலகத்து நடப்பதுகண் டிருந்து மைந்தா
சிந்தனையின் மயக்கமென்னே சுருதியுத்தி யநுபவத்தாற் தெளிந்தி டாயே
1.பந்த மனை துறந்து சிலர் அதிதிகளாய் (சன்னியாசிகளாய்) இருந்து அடைவர் பரம ஞானம். 2. அந்தணர் மன்னவர், வணிகர், சூத்திரராயிருந்து சிலர் அடைவர் ஞானம். இந்த வகை சாத்திரத்தும் உலகத்து நடப்பது கண்டு இருந்து மைந்தா, சிந்தனையின் மயக்கம் என்னே? சுருதி யுத்தி அநுபவத்தால் தெளிந்திடாயே.
--
சிஞ்ஞாசுகளிலும்..... சிலர் மனைவி, மக்கள் எல்லாம் துறந்து சன்னியாசிகளாக இருப்பர்; கிடைத்த இடத்தில் விருந்தினரா இருந்து உண்டு தவம் செய்து கொண்டு இருப்பாங்க. சிலர் வருணாசிரம தர்மப்படி இல்லறத்தில் இருந்து கொண்டே அகத்துறவு பூண்டு குருவை அடைந்து அப்பியாசம் செய்து ஞானம் அடைந்தவர்.
இப்படி சாத்திரங்களில் கூறப்பட்டு உள்ளது; பிரத்தியக்ஷ அனுபவமாயும் உள்ளது. ஆகவே சந்தேகம் வேண்டாம். மோக்ஷத்தை அடைய ஆசிரமம் காரணம் அல்ல. இல்லறத்தில் இருந்தாலும், சன்னியாசி ஆனாலும், உலகில் எந்த தொழில் செய்தாலும்; மனதில் தீவிர வைராக்கியம் அடைந்து அகத்துறவு கொண்டு அப்பியாசத்தால், ஞானத்தை பெற்று எவரும் மோக்ஷமடையலாம்.
3 comments:
JI,
இல்லறத்தில் இருந்து கொண்டே அகத்துறவு பூண்டு குருவை அடைந்து அப்பியாசம் செய்து ஞானம் அடைந்தவர்.
IF YOU GIVE EXAMPLE -READERS WILL BE
ABLE TO RETHINK OF THEIR ROUTINE LIFE
அப்பாடா, இது பரவாயில்லையே! உதாரணங்களும் கூறி இருக்கலாமோ??? பாலு சொல்றாப்போல! ஆனால் எனக்கு நிறைய நினைவில் வந்தது.
ஜனகர் முக்கியமான உதாரணம். அவர் ராஜாவா ஆட்சி செய்து அதோட தலைவலி எல்லாம் தினசரி மேனேஜ் பண்ணும்போதே ஞானியாகவும் இருந்தவர்.
ஆக முக்கியமா பாக்க வேண்டியது சன்னியாசத்திலே அகத்துறவுதான் முக்கியம். அது வேரறுத்த செடி போல; திருப்பி முளைக்காது. இலை கிளைகளை மட்டும் கழிச்சது போல அகத்துறவு இல்லாத புறத்து சன்னியாசம். திருப்பி முளைக்கும்.
கீ அக்கா, நினைவு வந்ததை பகிர்ந்துக்கலாமே!
Post a Comment