161.
தீவிரதரத்தில் இரண்டு சன்னியாசம்.
இருவகைதீ விரதரத்து மஞ்சனென்றும் பரமாஞ்ச னென்றுஞ் சொல்வார்
வருமஞ்ச னுக்குமுத்தி சத்தியலோ கத்தன்றி வாரா தென்பார்
பரமஞ்சனுக்குமுத்தி யிவ்வு லகின் ஞானத்தாற் பலிக்குமென்பார்
திரமருவும் பரமாஞ்சன் றானுமிரு வகையாகுஞ் செப்பக் கேளாய்.
இருவகை தீவிரதரத்தும் அஞ்சன் (ஹம்ஸன்) என்றும் பரமாஞ்சன் (பரம ஹம்ஸன்) என்றுஞ் சொல்வார். வரும் அஞ்சனுக்கு முத்தி சத்திய (பிரம) லோகத்து அன்றி (இம்மையில்) வாரா தென்பார். பரமஞ்சனுக்கு முத்தி இவ்வுலகில் ஞானத்தாற் பலிக்குமென்பார். ஸ்திர மருவும் (பொருந்திய) பரமாஞ்சன்தானும் இரு வகையாகும் செப்பக் கேளாய்.
--
ஹம்ஸ சன்னியாசிக்கு இந்த உலகில் முத்தி இல்லை. அவர் பிரம்ம லோகத்தில் முத்தி பெறுவார். பரமஹம்ஸ சன்னியாசி தத்துவ ஞானத்தால் இவ்வுலகிலேயே முத்தி அடைவார்.
--
162.
பரம ஹம்ஸ சன்னியாசி இருவகை:
சிஞ்ஞாசு ஞானவா னென்றிரண்டு பேர்களவ ரிற்சிஞ்ஞாசு
மெஞ்ஞான பூமியின்முன் மூன்றுபூ மியுணடக்கும் விவேகி யானோன்
சுஞ்ஞான வானென்போன் சீவன்முத்தி யடைந்திருக்குந் தூய மேலோன்
அஞ்ஞான மகலுமந்தச் சிஞ்ஞாசு மிருவகையா மதுவுங் கேளாய்
சிஞ்ஞாசு, ஞானவான் என்று இரண்டு பேர்கள். அவரில் சிஞ்ஞாசு மெஞ்ஞான [ஏழு] பூமியில் முன் மூன்று பூமியில் (சுபேச்சை, விசாரணை, தனுமானசி ஆகியவற்றில்) நடக்கும் விவேகி [அப்பியாசி] ஆனோன். சு (நல்ல) ஞானவான் என்போன் சீவன் முத்தி அடைந்திருக்கும் தூய மேலோன். [அநுபவி] அஞ்ஞானம் அகலும். அந்தச் சிஞ்ஞாசும் இரு வகையாம். அதுவுங் கேளாய்.
ஜிக்ஞாஸு என்கிறவரே ஞான வழில இறங்கிட்டவர். முதல் மூணு நிலைகள் ஏதாவதில இருப்பார். இது வரைக்கும் பாத்தவங்க சன்னியாசிகள் ஆனாலும் ஞான வழில முழுக்க இறங்கலை.
ஞானவான் சீவன் முத்தன்.
அந்தச் சிஞ்ஞாசும் இரு வகையாம். தலையை சுத்துது இல்லை?
3 comments:
// தலையை சுத்துது இல்லை? //
ஆமாம்! இது மட்டும்தான் புரிஞ்சது :)
//தலையை சுத்துது இல்லை?//
சிஞ்ஞாசுவே புரியலை, இதிலே ஜிக்ஞாசு வேறேயா! என்னவோ போங்க! :(((((((((( ம.ம. கொஞ்சம் கூட எனக்கு இல்லை!
சிஞ்ஞாசுவே புரியலை, இதிலே ஜிக்ஞாசு வேறேயா!//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
அப்பப்ப தமிழ்லேயும் அப்பப்ப தமிள்ளேயும் எழுதறதால பிரச்சினை. ரெண்டும் ஒண்ணுதான்!
@கவி :-))
Post a Comment