Pages

Friday, December 13, 2013

சிவன் 10,000


இந்த சிவபெருமான் கொஞ்ச நாளா பிடிச்சுகொண்டு ஆட்டி வைக்கிறார்! சமீபத்தில் காலை அலாரம் ஶிவாய நம ஓம் என்று மாறியது. என் ஆன்மீக வழிகாட்டி காலை மாலை இரு நேரமும் ருத்திரத்தில் ஒரு பகுதியை ஐந்து முறை கன பாடம் சொல்லச்சொன்னார்.  அத்வைத விசாரணையில் இருந்து கொண்டு இருக்கிறவனை வலுகட்டாயமாக பக்தி பக்கம் திருப்புகிற மாதிரி இருக்கு! சரி சரி! இதுவும் ஒரு மட்டம், கடந்து போகும்!

சமீபத்தில்கிடைத்த ஒரு பிடிஎஃப் பைலில் ஶிவனின் 10,000 – ஆமாம் பத்தாயிரம்- நாமங்கள் இருந்தன. தேவ நாகரியில் இருந்தவற்றை தட்டச்சி தமிழிலும் தர ஒரு உத்வேகம் பிறந்தது. அதனால் இதோ…

ஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி

”அகராதி வரிசையில் சிவனது பத்தாயிரம் நாமங்களின் தொகுப்பு இது. அர்ச்சனை செய்ய உதவும் வகையில் நம: சேர்ந்தது. மஹாபாரதம், லிங்கபுராணம், பிரும்ம வைவர்தம், வாமன புராணம், கூர்மபுராணம், வராஹ புராணம், மத்ஸ்யபுராணம், ஸ்காந்தம், பவிஷ்யோத்தரம் முதலிய புராணங்கள், யஜுர் வேதத்தின் ஸ்ரீ ருத்ர ப்ரச்னம், ருத்ர யாமளம், ஆகம ஸார சங்கிரஹம், சிவ ரஹஸ்யம், வியாஸ கீதை, ஹாலாஸ்ய மஹாத்மியம் மற்றும் சிவனைக்குறித்த ஸ்தோத்திரங்கள் இவற்றில் இருந்து பொருள் செரிவும் தத்துவ விளக்கமும் கொண்ட நாமங்களை ஆந்திரதேசத்தின் கார்வேட் நகர அரசரின் முக்கிய மந்திரியான குண்டுகுருஸ்வாமி என்பவர், ஆஸ்தான பண்டிதர்களான தேவர்கொண்ட ஸுப்ரம்ஹண்ய சாஸ்திரி, வேதம் நிருஸிம்ஹ தீக்ஷிதர் இவர்களைக் கொண்டு தொகுத்தது. மிகவும் சிறந்த தொகுப்பு இது.”
என்ற முன்னுரையுடன் புத்தகம் ஆரம்பிக்கிறது. பதிப்பித்தவர் யாரென தெரியவில்லை. அவருக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்!


श्री साम्बसदाशिवायुतनामावलि:
पुराणानि समस्तानि विलोङ्यैषा समुद्ध्रुता  ।
शिवस्यायुतनामाली भक्तकामप्रदायिनी ॥ १

शिवनामावलिस्सेयम् श्रुण्वताम् पठताम् सताम् ।
शिवासायुज्यपदवीम् देयाद्पुनरुद्भवाम् ॥ २

य इदम् श्रुणुयान्नित्यम् श्रावयेद्वा समाहित: ।
सोमवारे विशेषेण य: पठेच्छिवसन्निधौ ॥ ३

तस्य पुण्यफलम् वक्तुम् न शक्नोति महेश्वर: ।
सर्वान् कामानवाप्यैव शिवलोके महीयते ॥ ४

ஶ்ரீ ஸாம்ப³ஸதா³ஶிவாயுத நாமாவலி:
புராணானி ஸமஸ்தானி விலோங்யைஷா ஸமுத்³த்⁴ருதா  |
ஶிவஸ்யாயுதநாமாலீ ப⁴க்தகாமப்ரதா³யினீ ||  1

ஶிவநாமாவலிஸ்ஸேயம் ஶ்ருண்வதாம் பட²தாம் ஸதாம் |
ஶிவாஸாயுஜ்யபத³வீம் தே³யாத்³புனருத்³ப⁴வாம் ||  2

ய இத³ம் ஶ்ருணுயான்னித்யம் ஶ்ராவயேத்³வா ஸமாஹித: |
ஸோமவாரே விஶேஷேண ய: படே²ச்சி²வஸன்னிதௌ⁴ ||  3

தஸ்ய புண்யப²லம் வக்தும் ந ஶக்னோதி மஹேஶ்வர: |
ஸர்வான் காமானவாப்யைவ ஶிவலோகே மஹீயதே ||  4


மதிப்பு மிக்க ஶிவனின் நாமங்கள் புராணங்கள் அனைத்திலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த நாமவலீயால் பக்தனுக்கு இச்சித்தவை கிடைக்கும். யார் இந்த ஶிவநாமாவலீயை எப்போதும் கேட்கிறார்களோ, படிக்கிறார்களோ அவர்களுக்கு ஶிவ சாயுஜ்ய பதவி கிடைக்கும். மேலான பிறப்பு கிடைக்கும்..
யார் இதை தினமும் கேட்கிறார்களோ, குறிப்பாக திங்கட்கிழமைகளில் ஶிவ சந்நிதியில் படிக்கிறார்களோ அவர்களுக்கு கிடைக்கும் புண்ணியத்தில் பலனை சொல்ல இயலாது; விரும்பிய எல்லாம் அடைந்து ஶிவலோகத்தில் உறைவார்கள்.

வரும் நாட்களில் தொடர்ச்சியாக 10.000 நாமக்களும் தேவ நாகரி மற்றும் தமிழில் வெளிவரும்.
 
Post a Comment