Pages

Wednesday, May 30, 2018

பறவையின் கீதம் - 7



ஞானி சொன்னார், “இறைவனை யாரும் உள்ளபடி அறிய முடியாது. அவன் இப்படி இருப்பான், இப்படி செய்வான் என்று யாரும் சொல்ல முடியாது. உண்மையில் அவனைப்பற்றி யாரும் எதுவும் சொன்னால் அதில் உண்மை குறைவாகவே இருக்கும்!”
கேட்டவர்கள் அதிர்ந்து போய்விட்டார்கள்!
"அப்படியானால் ஏன் கடவுளைப்பற்றி பேசுகிறீர்கள்?”
ஞானி கேட்டார், “ பறவை ஏன் பாடுகிறது?”

ஏன் பாடுகிறது? ஏனென்றால் அது பாட ஒரு பாடல் இருக்கிறது.
அறிஞரின் சொற்களை புரிந்து கொள்ள வேண்டும். மாஸ்டரின் சொற்கள் புரிந்து கொள்வதற்கு அல்ல. அவற்றை கேட்டுக்கொள்ள வேண்டும். மரங்களின் ஊடே ஒலிக்கும் காற்று போல... நதியின் இரைச்சலைப்போல... பறவையின் பாடலை கேட்பது போல. அவை இதயத்தின் உள்ளே எதையோ நிரடி வெளிக்கொண்டு வரும்.... அறிவுக்கு அப்பாற்பட்ட எதையோ!

No comments: