Pages

Tuesday, May 22, 2018

பறவையின் கீதம் -1





மாஸ்டர் திரும்பியும் வருகிறாஆஆஆஆஆஆஆர்!
அவருடைய புத்தகங்கள் இன்னும் இரண்டு படித்து இருக்கிறேன். ப்ரேயர் ஆஃப் தெ ஃப்ராக்; சாங் ஆஃப் தெ பெர்ட். முன்னே எழுதினது ஒன் மினிட் நான்சென்ஸ்.
இப்போது மறுபடியும் பார்க்க அவற்றில் சிலதை குட்டிக்கதைகள் என்று முன்னேயே எழுதி இருக்கிறேன் என்று தெரிகிறது. ஆகையால் கொஞ்சம் பார்த்து எடுத்துத்தான் போட வேண்டும்.
இருந்தாலும் இதோ புதிய தொடர் - பறவையின் கீதம்.

காட்டில் ஒரு யானை ஆனந்தமாக தண்ணீரில் அமுங்கிக்கிடந்தது. அப்போது ஒரு எலி அங்கே வந்து இப்பவே தண்ணியை விட்டு வெளியே வா என்றது.
யானை ஏன் என்று கேட்டது.
சொல்ல மாட்டேன்!
நானும் வர மாட்டேன்!

நேரம் சென்றது. ஒரு வழியாக யானை நீரிலிருந்து வெளியே வந்தது. எலியின் முன்னே நின்று "சரி, இப்ப சொல்லு. எதுக்கு என்ன வெளியே வரச்சொன்னே?”
எலி சொன்னது: "என் ஜட்டியக்காணோம். அத நீ போட்டிருக்கியான்னு பார்க்கத்தான்!”

யானை எலியின் ஜட்டியில் அடங்கினாலும் அடங்கும்; இறைவன் அவனைக்குறித்த நம் கற்பனையில் உள்ளதில் அடங்க மாட்டான்!

No comments: