Pages

Thursday, May 10, 2018

கிறுக்கல்கள் - 203





மாஸ்டர் எப்போதும் மக்களை மதங்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வலியுறுத்துவார்.

விதிகளை குருட்டுத்தனமாக கடைபிடிப்பதை மதங்கள் புனிதப்படுத்துகின்றன என்பார்.

ஒரு ராணுவ பயிற்சி முக்காமில் அதிகாரி புதியவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டு இருந்தார். துப்பாக்கியின் பின் பகுதி ஏன் வால்நட் மரத்தால் செய்யப்படுகிறது?
உற்சாகமாக ஒரு இளைஞர் "ஏன்னா அது உறுதியானது!” என்றார்.

இல்ல. அது காரணமில்ல.

இன்னொருவர் " அதுக்கு அதிக எலாஸ்டிக் தன்மை உண்டு!” என்றார்.
ம்ஹும்!

இன்னொரு இளைஞர் " மத்த எல்லா மரங்களையும் விட இதுக்கு இன்னும் வழவழன்னு பாலீஷ் போடலாம்!” என்றார்.
இல்லவே இல்ல. எல்லாருமே தப்பு!

மௌனம்.

பின் அதிகாரி விளக்கினார்: “ஏன்னா அப்படித்தான் செய்யணும்ன்னு ராணுவ கையேட்டில இருக்கு!”

No comments: