இந்த
'நிகழ்காலத்தில் வாழுங்கள்,
நிகழ்காலத்தில் வாழுங்கள்'ன்னு
சொல்லறிங்களே அது எவ்வளவு
நேரம்? ஒரு
நிமிஷமா? ஒரு
செகண்டா?
ரொம்பவே
குறைச்சல்!
அதே சமயம்
ரொம்பவே அதிகம்!
ம்ம்?
குறைச்சல்ன்னு
ஏன் சொல்லறேன்னா,
நீ அதை
உணர்ந்து மனசை அதில குவிக்கறதுக்குள்ள
அது கடந்து போயாச்சு!
அதிகம்ன்னு
ஏன் சொல்லறேன்னா,
ஒரு வேளை
நீ அதை கண்டுபிடிச்சு அதுக்குள்ள
போயிட்டா காலத்தை கடந்தவனா
ஆயிடுவே. யுகம்
என்கிறது என்னன்னும் புரிஞ்சுடும்!
No comments:
Post a Comment