Pages

Saturday, November 30, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 37




35 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சித்சுகேந்திர ஸரஸ்வதி (2)
அடைமொழி: பஹுரூப சித்சுகா
பிறந்த இடம்: வேதாசலம் (தமிழ்நாட்டில் திருக்கழுக்குன்றம் )
பூர்வாஶ்ரம பெயர்: சுசீல கமலாக்ஷா
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: விமலாக்ஷா
பீடாதிபதியாக ஆண்டுகள்: 27
சித்தி: 3837 தாது ஆஷாட சுக்ல ஷஷ்டி (பொ.ச. 0736-ஜூன் 22)
சித்தி இடம்: அநேகமாக சஹ்யாத்ரி மலைகள்
பிற:
இந்த ஆச்சார்யர் பெரும்பாலான நேரத்தை சையாத்ரி மலைகளில் தவம் செய்து கழித்தார். மக்கள் யாராவது வந்து அவரது தவத்திற்கு இடையூறு செய்வதை அவர் விரும்பவில்லை, ஆகவே அவர் பல்வேறு வடிவங்களை எடுத்து காடுகளுடன் ஒன்றிணைந்து விடுவார். இதனால் அவர் "பஹுருபா" அதாவது "பல வடிவங்களில்" என்று அழைக்கப்படுகிறார்.

Friday, November 29, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 37





34 வது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி (2)
பிறப்பிடம்: வேகவதி ஆற்றின் கரையோரம் (காஞ்சிபுரத்திற்கு அருகில்)
பூர்வாஶ்ரம பெயர்: ஶம்பு
பூர்வாஶ்ரம தந்தை: மஹாதேவா
பீடாதிபதியாக ஆண்டுகள் : 18
சித்தி: 3810 சௌம்ய மார்க்கஶிர அமாவாஸை (பொது ஆண்டு 0709-டிசம்பர்)-10)
மற்றவை:
இந்த ஆச்சார்யர் சேதுவிலிருந்து ஹிமாசலம் வரை நீண்ட யாத்திரைகளை மேற்கொண்டார். காஷ்மீர் பகுதியில் இருந்த வேத மரபுகளுக்கு இடையூறு விளைவித்த சகுணா என்ற ஒரு நாஸ்திக ஜைனனைக் கட்டுப்படுத்தினார். இந்த ஆச்சார்யர் தான் அடைக்கலம் அளித்தவர்கள் அனைவரின் துன்பத்தையும் அழித்துவிடுபவராக இருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு குழந்தை பெரும் தீயில் சிக்கியது, தன் யோக சக்தியின் மூலம் ஆச்சார்யர் தீக்குள் புகுந்து குழந்தையை தீங்கு இல்லாமல் மீட்டு வெளியே கொண்டு வந்தார்.

Thursday, November 28, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 36





33 ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சச்சிதாநந்தகணேந்திர ஸரஸ்வதி (2)
அடைமொழி: பாஷா பரமேஷ்டி
பிறந்த இடம்: திரிலிங்க தெலுங்கு) தேசம், சந்திரபாகாவின் (அதாவது பீமா ஆற்றின்) கரையில்
குறிப்பு: இன்று ஆந்திர-கர்நாடகா எல்லைக்கு அருகே கர்நாடகாவின் கிருஷ்ணாவுடன் பீமா இணைகிறது. இந்த ஆச்சார்யரின் சமயத்தில் குறைந்த பட்சம் தெலுங்கு தேசத்தின் பகுதியாக அது கருதப்பட்டது.
பூர்வாஶ்ரம பெயர்: திம்மன்னா
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ப்ரௌட ராமன்னா
பீடாதிபதியாக ஆண்டுகள்: 20
சித்தி: 3792 கர பத்ரபாத கிருஷ்ண ஷஷ்டி (பொது ஆண்டு 0691-Aug-23)
மற்றவை:
இந்த ஆச்சார்யர் 15 மொழிகளில் நிபுணர் ஆவார்! அதனால் பாஷா பரமேஷ்டி என்று பெயர். இதனால் அவர் தம்முடைய பக்தர்களிடம் நேரடியாக பேசுவும், அவர்களுக்கு வழிகாட்டுதலையும் ஆறுதலையும் வழங்கவும் இயன்றது.
16 வது ஆச்சார்யர் ஶ்ரீ உஜ்ஜ்வல ஶங்கரர் காஷ்மீரில் சித்தியை அடைந்ததிலிருந்து, அனைத்து ஆச்சார்யர்களும் பெரும்பாலும் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த ஆச்சார்யரே காஞ்சிபுரத்தில் உள்ள ஶ்ரீ மடத்தில் தங்கி காமாக்‌ஷிக்கு பூஜை செய்து கொண்டிருந்தார். இதனால் இந்த ஆச்சார்யரின் காலத்தில் மடம் அதிக கவனம் பெற்று பழுது பார்த்தல் மற்றும் முன்னேற்றங்கள் ஆகியன நடந்தேறின.
(படத்தில் எண் தப்பாக இருக்கிறது. குழம்ப வேண்டாம்!)


Wednesday, November 27, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 35





32 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சிதாநந்தகணேந்த்ர ஸரஸ்வதி
பூர்வாஶ்ரம பெயர்: பத்மநாபன்
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: அன்னு ஶங்கரா
பீடாதிபதியாக ஆண்டுகள் : 4
சித்தி: 3772 பிரஜோபத்தி மார்க்கசீஷ சுக்ல ஷஷ்டி (பொது ஆண்டு 0671- நவ -16)
பிற:
இந்த ஆச்சார்யர் லம்பிக யோகா என்னும் உயர்ந்த யோகத்தை கடைபிடித்தார். உணவுக்காக உலர்ந்த இலைகளைமட்டுமே அவர் பயன்படுத்தினார்.
(முந்தைய ஆச்சார்யருடன் அவர் நீண்ட காலம் கூட இருந்தார். தன் ஆச்சார்யரின் சித்திக்கு பிறகு மிக விரைவில் (அதாவது 4 வருடங்கள் கழித்து) இந்த ஆச்சார்யரும் அவரது உடல் வடிவத்தை விட்டு விட்டார் என்று தெரிகிறது.
முந்தைய ஆச்சார்யர் ஶ்ரீ ப்ரம்மானந்த கணேந்த்ர சரஸ்வதியின் காலத்தில், லலிதாதித்யா என்ற பெயரில் ஒரு காஷ்மீர அரசர் தென்னிந்திய பகுதிகள் மற்றும் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்திருந்த போது, முந்தைய ஆச்சார்யரின் சீடராக தன்னை ஒப்புக் கொண்டார்.
முந்தைய ஆச்சார்யரின் சித்திக்கு பிறகு, இந்த ஆச்சார்யர் ராஜாவிடம் காஷ்மீரில் ஒரு அன்னதான சாலையை தனது குருவின் பூர்வாஶ்ரம பெயரான ஜேஷ்டருத்ரர் என்னும் பெயரில் உருவாக்கினார் [இது ஶ்ரீநகரில் கோபாத்ரி அல்லது ஶங்கராச்சாரிய மலை மீது "ஜேஷ்டேஸ்வரர்" என்ற சிவன் கோவில் பெயருடன் ஒத்திருக்கிறது - ஏதோ வரலாற்று தொடர்பு இருக்கலாம்.)
அந்த நாளில் அந்த அன்னதான சாலை மிகவும் பிரபலமாக இருந்ததாம். ஒரு நாளில் ஆயிரம் முறை அரிசி சமைத்து ஒரு லட்சம் மக்களுக்கு உணவு கொடுத்ததாக புகழப்படுகிறது. (ஏதேனும் ஒரு பெரும் விழாக்காலத்தில் நடந்திருக்கலாம்.)
அதேபோல், லலிதாதித்யா இந்தியாவின் தென் பகுதிகளை வென்றபோது கர்நாடகத்தின் ராணி (ஒருவேளை மன்னர் ஏற்கெனவே காலமாகி விட்டார் போலும்) காலமாகிவிட்டார். அவரது மகன் இளம் வயது; மேலும் அனுபவமற்று இருந்தார். இந்த ஆச்சார்யர் சிறுவன் மீது கருணையுடன், கர்நாடகத்தின் சிம்மாசனத்தில் சரியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன் பொருத்தமான மக்களுடன் சிறுவனை அரியணையில் வைக்கும்படி லலிதாதித்யருக்கு அறிவுறுத்தினார்.

Tuesday, November 26, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 34




31 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ ப்ரம்மானந்தகணேந்த்ர ஸரஸ்வதி (1)
பிறந்த இடம்: கருட நதி கரையோரம் (கடிலம் ஆறு, தமிழ் நாடு)
பூர்வாஶ்ரம பெயர்: ஜேஷ்ட ருத்ர
பூர்வாஶ்ரம தந்தையர் பெயர்: அனந்தா
வருடங்கள் பீடாதிபதியாக : 13
சித்தி: 3768 ப்ரபவ ஆஷாட சுக்ல த்வாதசி (பொ.ச. 0667-ஜூன்-12)
மற்றவை:
இந்த ஆச்சார்யர் தெற்கே விஜய யாத்திரையாக வந்திருந்த ஒரு காஷ்மீர் அரசர் லலித்தாதித்ய முக்தபீடாவை ஈர்த்தார். அவர் ஆச்சார்யரின் பூர்வாஶ்ரம பெயரில், கஷ்மீரில் ஒரு பெரிய அன்னதான சாலையை கட்டினார்.

Monday, November 25, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 33





30 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ போதேந்திர ஸரஸ்வதி (1)
பிறப்பு இடம்: காளஹஸ்தி
பூர்வாஶ்ரம பெயர்: பாலய்யா
பீடாதிபதியாக ஆண்டுகள்: 37
சித்தி: 3755 ஆனந்த வைசாக கிருஷ்ண சதுர்த்தி (கிபி 0654-மே-14) காலை.


Saturday, November 23, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 32





29 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ பூர்ணபோதேந்திர ஸரஸ்வதி (1)
பூர்வாஶ்ரம பெயர்: கிருஷ்ணா
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ஶ்ரீபதி
பீடாதிபதியாக ஆண்டுகள் : 17
சித்தி: 3718 ஈஶ்வர ஶ்ரவண சுக்ல ஏகாதசி (பொது ஆண்டு 0617- ஜூலை 22)


Friday, November 22, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 31





28 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ மகாதேவேந்திர ஸரஸ்வதி (1)
பிறப்பிடம்: பத்ராசலம்
பூர்வாஶ்ரம தந்தை: பானு
பூர்வாஶ்ரம பெயர்: சேஷண்ணா
பீடாதிபதியாக ஆண்டுகள் : 24
சித்தி: 3701 ரௌத்ரி கார்த்திக கிருஷ்ண தசமி (பொது ஆண்டு 0600-நவம்பர்-08)



Thursday, November 21, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 30





27 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சித்விலசேந்திர ஸரஸ்வதி
பிறப்பு இடம்: ஹஸ்திகிரி அதாவது விஷ்ணு காஞ்சி
பூர்வாஶ்ரம பெயர்: ஹரிகேசவா
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: மதுசூதனா
பீடாதிபதியாக ஆண்டுகள்: 13
சித்தி 3677 துர்முகி சைத்ர சுக்ல ப்ரதமை (பொது ஆண்டு 0576-Mar-19)

Wednesday, November 20, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 29





26 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ பிரக்ஞாகணேந்த்ர ஸரஸ்வதி
பிறப்பு இடம்: பினாகினி (பெண்ணை) நதிக்கரையோரம்
பூர்வாஶ்ரம பெயர்கள்: சோனகிரி
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: பிரபாகரா
பீடாதிபதியாக ஆண்டுகள்: 16
சித்தி: 3664 ஸ்வபானு வைசாக சுக்ல அஷ்டமி (பொது ஆண்டு 0563- இரவு -18) இரவில்


Tuesday, November 19, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 28





25 ஆவது ஆச்சார்யர் குறித்த விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சச்சிதாநந்தகணேந்திர ஸரஸ்வதி (1)
பிறப்பு இடம்: ஶ்ரீமுஷ்ணம்
பூர்வாஶ்ரம பெயர்: ஶிவஶாம்பர்
பூர்வாஶ்ரம தந்தையர் பெயர்: கிருஷ்ணா
பீடாதிபதியாக ஆண்டுகள்: 21
சித்தி: 3648 ப்ரபவ ஆஷாட சுக்ல பிரதமை (கிபி 0547-ஜூன்-06)
சித்தி அடைந்த இடம்: ப்ரபாஸா
மற்றவை: இந்த ஆச்சார்யர் ஈஶ்வரனை அனைத்து உயிரினங்களிலும் தியானிப்பதன் மூலம் அனைத்து உயிரினங்களின் - பூச்சிகள், பறவைகள், ஊர்வன மற்றும் பிற விலங்குகளின் மொழியை புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்று இருந்தார்.
அவர் உடலை துறக்கும் முன் அவர் (இரண்டாம் ஆச்சார்யர் ஶ்ரீ சுரேஶ்வராவைப் போல) அவரது யோக சக்திகளால் அவரது உடலை சிவ லிங்கமாக மாற்றி சித்தி அடைந்தார்.

Monday, November 18, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 27





24 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சித்சுகேந்திர ஸரஸ்வதி (1)
பிறந்த இடம்: கொங்கண்
பூர்வாஶ்ரம பெயர்: சிவா
பீடாதிபதியாக ஆண்டுகள்: 15
சித்தி: 3627 பராபவ ஸ்ரவண கிருஷ்ண நவமி (பொ.ச. 0526-ஆக -19)
சித்தியான இடம்: கொங்கன ரத்னகிரி

Saturday, November 16, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 26





23 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:

ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சச்சித்சுகேந்திர ஸரஸ்வதி

பூர்வாஶ்ரம பெயர்: கிரிஷா

பூர்வாஶ்ரம தந்தை: சிக்கா குடும்பத்தின் சோமன்னா (ஒரு ஆந்திர பூர்வீகத்தை
குறிப்பிடுகிறது)

பீடாதிபதியாக ஆண்டுகள்: 31

சித்தி: 3612 கர விருஷப சுக்ல சப்தமி (பொ.ச. 0511-மே -21)

மற்றவை :
இந்த ஆச்சார்யர் குறிப்பாக சுப்ரமணியனுக்கு தன்னை அர்ப்பணித்திருந்தார்.
நன்கு அறியப்பட்ட இந்திய வானியலாளரான ஆர்யபட்டா (பொது ஆண்டு 476-550) இந்த ஆச்சார்யரின் சமகாலத்தவர். ஆர்யபட்டா ஆரம்பத்தில் ஒரு நாஸ்திகனாக இருந்தார். அவர் உலகாயத விஞ்ஞானத்தால் விளக்க முடியாத எதுவும் இருப்பதாக ஒப்புக்கொள்ள முடியாது என்று நிராகரித்தார்.(எனவே, தர்ம சாஸ்திரங்களால் வரையறுக்கப்பட்ட ஆசார-அனுஷ்டானத்தின் முக்கியத்துவத்தை அவர் ஆதரிக்கவில்லை. அவர் விஞ்ஞானத்தை விட உயர்ந்ததாக எதையுமே ஏற்றுக்கொள்ள மறுத்தார்.) ஆகவே அவர் தன்னை விஞ்ஞானத்திற்கு அர்ப்பணித்திருந்தார். வானியல் ஆய்வுகளை செய்வதற்காக அவர் மேற்கு கடலில் பயணம் செய்தார். அதில் அதிக நேரம் செலவழித்தார்.

ஆர்யபட்டாவை ஆச்சார்யர் சந்தித்தபோது அவருக்கு பல விஷயங்கள் உணர்த்தப்பட்டன. [மனித புலன்களும் மனத்தால் உருவாக்கப்பட்ட விஞ்ஞானத்தின் வீச்சும் அவற்றின் மட்டுப்படுத்தப்பட்ட எல்லைக்குள் மட்டுமே இருக்க இயலும். அதனால் பல விஷயங்களை விளக்க இயலாது. இந்த உலகாயத விஞ்ஞானத்தை விட உயர்வான கருவிகள் அல்லது தசையும் ரத்தமும் அடிப்படையாக கொண்ட உணர்தலுக்கு மாறாக வேறு வித உணர்தலை கொண்ட ஒரு விஞ்ஞானத்தால்தான் அது முடியும். தசை மற்றும் இரத்த உடல் / மூளை அல்லது அதன் கண்டுபிடிப்புகளால் விளைந்த கருவிகள் அல்லாத வேறு கருவிகள் தேவை. ஒரு சாதாரண மனித மனதை விட உயர்ந்த ஆன்மீக நிலைக்கு தங்களை உயர்த்திக்கொள்ளும் ரிஷிகள் மூலம் இந்த சக்திகள் புரிந்து கொள்ளப்பட்டன. இத்தகைய ரிஷி-கள் நமக்கு தர்மம், ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் ஆகியவற்றின் பாதையை பரிந்துரைத்துள்ளனர். எனவே, முக்கிய விஞ்ஞான ஆராய்ச்சிகளைத் தொடரும் அதே வேளையில், ரிஷிகள் காட்டியுள்ள பெரிய கொள்கைகளின் பார்வை இழக்காதே. அவை ஆன்மீக பரிணாமத்தில் மனித வாழ்வை வழிநடத்தும். தர்க ரீதியான சிந்தனையாளரான ஆர்யபட்டா இந்த ஆச்சார்யரின் தெளிவான தர்க்கத்தை ஏற்றுக் கொண்டார்].

இப்படியாக ஆச்சார்யர் ஒரு பிராமணன் உலகின் நலனுக்காக அக்னிஹோத்ரம் போன்ற பல்வேறு அனுஷ்டானங்களை செய்வதையும் வேத ரக்ஷணத்தையும் தன் பிரதான பொறுப்பாக கொள்ள வேண்டும். கடலில் அலைவது அவனது வேலை அல்ல; அது ஆசாரத்தை மீறுவதாகும் என்று அறிவுறுத்தினார். விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் இருப்பதற்கான ஆதாரமாக, ஆச்சார்யர் ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார். ஆர்யபட்டாவின் ஒரு கை முடக்கப்பட்டு இருந்தது. அவரது தபோ சக்தி மூலம், ஆச்சார்யர் ஆரியபட்டாவின் கையை மீண்டும் உருவாக்கி அதன் செயல்பாட்டை மீட்டெடுத்தார்.
இந்த நேரத்தில், ஆர்யபட்டா சனாதன தர்மத்தின் சத்தியத்தை முழுமையாக நம்பிக்கை கொண்டுவிட்டார். ஆச்சார்யர் இவ்வாறு முன்னாள் நாஸ்திகரை ஒரு ஆஸ்திகராக மாற்றினார்; கடல் பயணத்தால் ஏற்பட்ட ஆசார இழப்புக்கு அவர் போதுமான பிராயச்சித்தங்களை செய்வித்தார்.

Wednesday, November 13, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 23





20 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ ஶங்கரேந்த்ர ஸரஸ்வதி (3)
அடைமொழி: மூக ஶங்கரர்
பூர்வாஶ்ரம பெற்றோர்: ஆட்டவீரர், ஒரு கணித மேதை; அவருடைய தர்ம பத்னி வித்யாவதி.
பீடாதிபதியாக ஆண்டுகள்: 39
சித்தி: 3537 தாது ஶ்ராவண பூர்ணிமா (கிபி 0436-ஜூலை 14)
சித்தியான இடம்: கோதாவரி கரையோரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது
மற்றவை:
பிறப்பில் அவர் ஊமையாக இருந்தார், 19 ஆம் ஆச்சார்யர் ஶ்ரீ மார்தாண்ட வித்யகணேந்திர ஸரஸ்வதியின் அனுகிரஹத்தினால் பேசச்சு கிடைத்தது. பின்னர் அவர் அதே குருவிடம் ஆஶ்ரமத்தை ஏற்றுக் கொண்டார், மேலும் அடுத்த பீடாதிபதி ஆனார். பின்னர் அவரே மெண்டகா என்பவருக்கு ஒரு கவிஞனாக கவிதையை எழுதுவதற்கான சக்தியை கொடுத்தார். இந்த கவிஞரும் மேலும் இன்னொரு கவிஞரான ராமில்லாவும் தமது பல பாடல்களில் அவரை குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவர் வரலாற்று ரீதியாக உஜ்ஜைன் மன்னர் ஹர்ஷ விக்ரமாதித்யாவுடனும், காஷ்மீர் பிரவரசேனனுடனும் தொடர்பு கொண்டிருந்தார்.
மூக பஞ்சஶதி இந்த ஆச்சார்யருடையதாக சொல்லப்படுகிறது.

Tuesday, November 12, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 22





19 ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ வித்யாஞானேந்த்ர ஸரஸ்வதி (2)
பூர்வாஶ்ரமபெயர்: ஶ்ரீகாந்தா
பூர்வாஶ்ரம தந்தையர் பெயர்: உமேஷ ஶங்கரர்
பீடாதிபதியாக ஆண்டுகள்: 13
சித்தி: 3498 ஹேமலம்பி ஆஸ்வயுஜ்ய சுக்ல நவமி (கிபி 0397-செப்-18)
மற்றவை:
அவரது பூர்வாஶ்ரமத்தில், இந்த ஆச்சார்யர் 'ஸ்வித்ரா' என்ற தோல் நோயால் பாதிக்கப்பட்டார். இதுபோன்ற நோய்கள் முந்தைய பாப கர்மங்களுடைய விளைவுகளாகும். எனவே, எட்டு வயதிலிருந்து தொடங்கி, (அனேகமாக அவரது உபநயனம் முடிந்தபிறகு) சூர்யனுக்கு தினசரி ஆயிரத்து எட்டு நமஸ்காரங்கள் செய்தார். ஷோடசி மஹாமந்திரத்தையும் தொடர்ச்சியாக ஜபம் செய்தார். சூர்யனுக்கு காட்டிய இந்த பக்தி காரணமாக சூர்யதாசா என்று அழைக்கப்பட்டார். அவரது தபங்கள் அவர் நோயை மட்டும் குணமாக்கவில்லை; அவர் பெரிய ஆன்மீக முதிர்ச்சி பெற்று, மோட்சத்தை அடைய விரும்பினார்.
அவர் பதினெட்டு வயதில் சன்னியாசத்தை எடுத்துக்கொண்டு மவுன வ்ரதத்துடன் பெரிய தபங்களை செய்தார். அவர் தனது பிராணனைக் கட்டுப்படுத்தி, தன் மரணத்தின் காலத்தை நிர்ணயிக்க முடிந்த ஒருவராக ஆனார்.

Monday, November 11, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 20





17 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ ஸதாஶிவேந்த்ர ஸரஸ்வதி (1)
அடைமொழிகள்: கௌட ஸதாஶிவா, பால குரு ஸதாஶிவா
பிறந்த இடம்: சிந்து நதிக்கரை
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: (பிறப்பு மூலம்) தேவ மிஶ்ரா. ஆனால் புஷ்பபுராவில் இருந்த பூரிவசு தத்தெடுத்த தந்தையாக இருந்தார்.
சன்யாசம்: 17 வயதில்
பீடாதிபதியாக ஆண்டுகள்: 8
சித்தி: 3475 பவ ஜேஷ்ட சுக்ல தசமி (சி. 0374 - மே 08)
சித்தி இடம்: த்ரயம்பகேஷ்வரத்துக்கு அருகே ஒரு குகை
வேறு:
இந்த ஆச்சார்யர் காஷ்மீர் மன்னருக்கு அமைச்சராக இருந்த தேவ மிஶ்ராவின் மகனாவார். இந்த தேவ மிஶ்ரா ஜைன மதத்தில் ஈடுபாடு கொண்டார். எனவே எல்லா வைத்திய அனுஷ்டானங்களையும் நிராகரித்தார். ஆனால் அவரது மகன் பால்ய வயதிலேயே ஒரு ஒளிரும் ஆத்மாவாக இருந்ததால், வேதாகம பாரம்பரியத்தை தழுவச்சொல்லி தந்தைக்கு அறிவுரை கூறினார். (எனவே பால குரு என்ற பெயர்)
குழந்தை ஜைன மதத்தை நிராகரிக்கிறது என்பதை கண்ட ஜெயினர்கள் தனது மகனை விட்டுவிட்டு, அவரை சிந்துவுக்குள் தள்ளிவிடும்படி தந்தையை கட்டாயப்படுத்தினர். ஆனால் சிந்து நதி தெய்வம் இந்த தெய்வீக குழந்தையை தாமரை மீது வாங்கிக்கொண்டு தீங்கு விளைவிக்காமல் இருந்தது. நதியின் போக்கில் இருந்த புஷ்பபுரா என்ற ஊரில் பூரிவசு என்பவர் குழந்தை இல்லை என்று தவம் இருந்தார். அவர் நீராட ஆற்றுக்குள் இறங்கினார். நதி அவரிடம் குழந்தையை எடுத்துச்சென்று கொடுத்தது. ஒரு அசரீரி குரல் கேட்டது: "உன்னுடைய தவத்தை மெச்சி, நான் இந்த மகனை உன்னிடம் தருகிறேன்".
பூரிவசு குழந்தையை மகிழ்ச்சியுடன் எடுத்து, தன் மகனாக வளர்த்தார். பிற்பாடு உபநயனம் செய்வித்தார். ஞானம் அடைந்து இருந்ததால் இளைஞன் உபநயனம் நடந்த உடனே, வைதிக தர்மம் மற்றும் அத்வைதம் பற்றி ஜனங்களுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்தான். நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தில் இருந்த ஶ்ரீ உஜ்ஜ்வல ஶங்கரை சந்தித்தபின், பதினேழு வயதில் சன்னியாசம் மேற்கொண்டார்.
அவரது குருவின் வழிமுறைகளின்படி அவர் தங்க பல்லக்கில், தன்னுடன் பெரிய பரிவாரத்துடன் பயணம் செய்தார். (குருவிடம் மிகவும் ஈர்க்கப்பட்ட அரசர்கள் கொடுத்ததாக இவை இருக்கலாம்). ஒரு ஆயிரம் வேத அறிஞர்களின் தினசரி பராமரிப்புக்காக அவர் ஏற்பாடு செய்தார் (அவரது குருவின் காலத்திலிருந்த தேசத்தில் நிலவி இருந்த வேத சம்பிரதாய விரோத பிரச்சனைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அவரது குரு பிரச்சினைகளை சரிசெய்து இருந்தார்). அவர் காஷ்மீரிலிருந்து பாரதத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அனைத்து கடலோர பகுதிகள் வரை பயணம் செய்தார். வைதிகர்களின் விரோதத்தை ஒழிப்பதில் அவரது குரு செய்த பணியை யாரும் மீறவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
கல்வியியல் / தத்துவப் பிரிவில் ஶங்கர பாஷ்யத்தை நாற்பத்தி எட்டு முறை கற்பித்ததன் மூலம் அத்வைத மரபின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தினார்.
இவை அனைத்தும் ஒரு குறுகிய காலமான எட்டு ஆண்டுகளில் செய்யப்பட்டது. அவரது சீடர் சுரேந்திர ஸரஸ்வதியை பீடத்தில் இருத்திய பிறகு, நாசிகாபுரிக்கு அருகிலுள்ள த்ரயம்பகேஷ்வரத்துக்கு அருகே (சமாதி ஸ்தல் என பின்னர் அழைக்கப்பட்டது) அவர் ஒரு குகைக்குள் நுழைந்தார், பின் அவரை யாரும் காணவில்லை.
பின் காலத்தில் தக்ஷிண பாரதத்திலிருந்து வந்த ஸதாஶிவேந்த்ர ஸரஸ்வதி என்னும் (53 வது) ஆச்சார்யர் பெயர் கொண்டு இருந்தார். "கௌட" சதாஶிவா என்ற அடைமொழியானது இந்த ஆச்சார்யர் பஞ்ச கௌட தேசத்தில் இருந்து வந்ததால்
வேறுபாட்டை காட்ட வந்திருக்கலாம்.

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 21





18 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரமபெயர்: ஶ்ரீ ஸுரேந்திர ஸரஸ்வதி
அடைமொழி : யோகி திலகா
பிறப்பு இடம்: மஹாராஷ்டிரா
பூர்வாஶ்ரம பெயர்: மாதுரா
பீடாதிபதியாக ஆண்டுகள்: 10
சித்தி: 3485 தாரண மார்க்கசிர சுக்லா ப்ரதமை (பொது ஆண்டு 0384-நவம்பர் -01)
மற்றவை:
இந்த ஆச்சார்யர் ஒரு பெரிய யோகீஸ்வரராக இருந்தார். இந்த ஆச்சார்யரின் காலத்தில் துர்திடிவி என்ற பெயரில் நன்கு அறியப்பட்ட நாஸ்திகன் இருந்தான். சுரேந்திரா என்ற ஒரு காஷ்மீர் அரசனின் அரசவையில் (நரேந்த்ராதித்யாவின் சகோதரி மகன்), இந்த ஆச்சார்யர் அவனுடன் வாதித்து தோற்கடித்தார். இந்த கட்டத்தில், உண்மையில் சார்வாக சூத்திரங்களை எழுதியதாக கூறப்படும் தேவ குரு ப்ருஹஸ்பதி, ஒரு மனிதனின் வடிவத்தில் வந்து ஆச்சார்யருடன் வாதிட்டார். ஆனால் ஆச்சார்யர் அவரையும் தோற்கடித்தார்.
ப்ருஹஸ்பதி பின்னர் தனது உண்மையான வடிவத்தை எடுத்து, ஆச்சார்யர் பாராட்டி ஆசீர்வதித்து, அவரது இடத்திற்கு திரும்பினார். ஆச்சார்யரின் இந்த மேன்மையைக் கண்ட மன்னர், அவரிடம் சரணடைந்தார், தார்மிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பெரும் அளவு நிலத்தை நன்கொடையாகவும் அளித்தார்.