Pages

Saturday, November 16, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 26





23 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:

ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சச்சித்சுகேந்திர ஸரஸ்வதி

பூர்வாஶ்ரம பெயர்: கிரிஷா

பூர்வாஶ்ரம தந்தை: சிக்கா குடும்பத்தின் சோமன்னா (ஒரு ஆந்திர பூர்வீகத்தை
குறிப்பிடுகிறது)

பீடாதிபதியாக ஆண்டுகள்: 31

சித்தி: 3612 கர விருஷப சுக்ல சப்தமி (பொ.ச. 0511-மே -21)

மற்றவை :
இந்த ஆச்சார்யர் குறிப்பாக சுப்ரமணியனுக்கு தன்னை அர்ப்பணித்திருந்தார்.
நன்கு அறியப்பட்ட இந்திய வானியலாளரான ஆர்யபட்டா (பொது ஆண்டு 476-550) இந்த ஆச்சார்யரின் சமகாலத்தவர். ஆர்யபட்டா ஆரம்பத்தில் ஒரு நாஸ்திகனாக இருந்தார். அவர் உலகாயத விஞ்ஞானத்தால் விளக்க முடியாத எதுவும் இருப்பதாக ஒப்புக்கொள்ள முடியாது என்று நிராகரித்தார்.(எனவே, தர்ம சாஸ்திரங்களால் வரையறுக்கப்பட்ட ஆசார-அனுஷ்டானத்தின் முக்கியத்துவத்தை அவர் ஆதரிக்கவில்லை. அவர் விஞ்ஞானத்தை விட உயர்ந்ததாக எதையுமே ஏற்றுக்கொள்ள மறுத்தார்.) ஆகவே அவர் தன்னை விஞ்ஞானத்திற்கு அர்ப்பணித்திருந்தார். வானியல் ஆய்வுகளை செய்வதற்காக அவர் மேற்கு கடலில் பயணம் செய்தார். அதில் அதிக நேரம் செலவழித்தார்.

ஆர்யபட்டாவை ஆச்சார்யர் சந்தித்தபோது அவருக்கு பல விஷயங்கள் உணர்த்தப்பட்டன. [மனித புலன்களும் மனத்தால் உருவாக்கப்பட்ட விஞ்ஞானத்தின் வீச்சும் அவற்றின் மட்டுப்படுத்தப்பட்ட எல்லைக்குள் மட்டுமே இருக்க இயலும். அதனால் பல விஷயங்களை விளக்க இயலாது. இந்த உலகாயத விஞ்ஞானத்தை விட உயர்வான கருவிகள் அல்லது தசையும் ரத்தமும் அடிப்படையாக கொண்ட உணர்தலுக்கு மாறாக வேறு வித உணர்தலை கொண்ட ஒரு விஞ்ஞானத்தால்தான் அது முடியும். தசை மற்றும் இரத்த உடல் / மூளை அல்லது அதன் கண்டுபிடிப்புகளால் விளைந்த கருவிகள் அல்லாத வேறு கருவிகள் தேவை. ஒரு சாதாரண மனித மனதை விட உயர்ந்த ஆன்மீக நிலைக்கு தங்களை உயர்த்திக்கொள்ளும் ரிஷிகள் மூலம் இந்த சக்திகள் புரிந்து கொள்ளப்பட்டன. இத்தகைய ரிஷி-கள் நமக்கு தர்மம், ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் ஆகியவற்றின் பாதையை பரிந்துரைத்துள்ளனர். எனவே, முக்கிய விஞ்ஞான ஆராய்ச்சிகளைத் தொடரும் அதே வேளையில், ரிஷிகள் காட்டியுள்ள பெரிய கொள்கைகளின் பார்வை இழக்காதே. அவை ஆன்மீக பரிணாமத்தில் மனித வாழ்வை வழிநடத்தும். தர்க ரீதியான சிந்தனையாளரான ஆர்யபட்டா இந்த ஆச்சார்யரின் தெளிவான தர்க்கத்தை ஏற்றுக் கொண்டார்].

இப்படியாக ஆச்சார்யர் ஒரு பிராமணன் உலகின் நலனுக்காக அக்னிஹோத்ரம் போன்ற பல்வேறு அனுஷ்டானங்களை செய்வதையும் வேத ரக்ஷணத்தையும் தன் பிரதான பொறுப்பாக கொள்ள வேண்டும். கடலில் அலைவது அவனது வேலை அல்ல; அது ஆசாரத்தை மீறுவதாகும் என்று அறிவுறுத்தினார். விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் இருப்பதற்கான ஆதாரமாக, ஆச்சார்யர் ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார். ஆர்யபட்டாவின் ஒரு கை முடக்கப்பட்டு இருந்தது. அவரது தபோ சக்தி மூலம், ஆச்சார்யர் ஆரியபட்டாவின் கையை மீண்டும் உருவாக்கி அதன் செயல்பாட்டை மீட்டெடுத்தார்.
இந்த நேரத்தில், ஆர்யபட்டா சனாதன தர்மத்தின் சத்தியத்தை முழுமையாக நம்பிக்கை கொண்டுவிட்டார். ஆச்சார்யர் இவ்வாறு முன்னாள் நாஸ்திகரை ஒரு ஆஸ்திகராக மாற்றினார்; கடல் பயணத்தால் ஏற்பட்ட ஆசார இழப்புக்கு அவர் போதுமான பிராயச்சித்தங்களை செய்வித்தார்.

No comments: