Pages

Monday, November 11, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 20





17 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ ஸதாஶிவேந்த்ர ஸரஸ்வதி (1)
அடைமொழிகள்: கௌட ஸதாஶிவா, பால குரு ஸதாஶிவா
பிறந்த இடம்: சிந்து நதிக்கரை
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: (பிறப்பு மூலம்) தேவ மிஶ்ரா. ஆனால் புஷ்பபுராவில் இருந்த பூரிவசு தத்தெடுத்த தந்தையாக இருந்தார்.
சன்யாசம்: 17 வயதில்
பீடாதிபதியாக ஆண்டுகள்: 8
சித்தி: 3475 பவ ஜேஷ்ட சுக்ல தசமி (சி. 0374 - மே 08)
சித்தி இடம்: த்ரயம்பகேஷ்வரத்துக்கு அருகே ஒரு குகை
வேறு:
இந்த ஆச்சார்யர் காஷ்மீர் மன்னருக்கு அமைச்சராக இருந்த தேவ மிஶ்ராவின் மகனாவார். இந்த தேவ மிஶ்ரா ஜைன மதத்தில் ஈடுபாடு கொண்டார். எனவே எல்லா வைத்திய அனுஷ்டானங்களையும் நிராகரித்தார். ஆனால் அவரது மகன் பால்ய வயதிலேயே ஒரு ஒளிரும் ஆத்மாவாக இருந்ததால், வேதாகம பாரம்பரியத்தை தழுவச்சொல்லி தந்தைக்கு அறிவுரை கூறினார். (எனவே பால குரு என்ற பெயர்)
குழந்தை ஜைன மதத்தை நிராகரிக்கிறது என்பதை கண்ட ஜெயினர்கள் தனது மகனை விட்டுவிட்டு, அவரை சிந்துவுக்குள் தள்ளிவிடும்படி தந்தையை கட்டாயப்படுத்தினர். ஆனால் சிந்து நதி தெய்வம் இந்த தெய்வீக குழந்தையை தாமரை மீது வாங்கிக்கொண்டு தீங்கு விளைவிக்காமல் இருந்தது. நதியின் போக்கில் இருந்த புஷ்பபுரா என்ற ஊரில் பூரிவசு என்பவர் குழந்தை இல்லை என்று தவம் இருந்தார். அவர் நீராட ஆற்றுக்குள் இறங்கினார். நதி அவரிடம் குழந்தையை எடுத்துச்சென்று கொடுத்தது. ஒரு அசரீரி குரல் கேட்டது: "உன்னுடைய தவத்தை மெச்சி, நான் இந்த மகனை உன்னிடம் தருகிறேன்".
பூரிவசு குழந்தையை மகிழ்ச்சியுடன் எடுத்து, தன் மகனாக வளர்த்தார். பிற்பாடு உபநயனம் செய்வித்தார். ஞானம் அடைந்து இருந்ததால் இளைஞன் உபநயனம் நடந்த உடனே, வைதிக தர்மம் மற்றும் அத்வைதம் பற்றி ஜனங்களுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்தான். நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தில் இருந்த ஶ்ரீ உஜ்ஜ்வல ஶங்கரை சந்தித்தபின், பதினேழு வயதில் சன்னியாசம் மேற்கொண்டார்.
அவரது குருவின் வழிமுறைகளின்படி அவர் தங்க பல்லக்கில், தன்னுடன் பெரிய பரிவாரத்துடன் பயணம் செய்தார். (குருவிடம் மிகவும் ஈர்க்கப்பட்ட அரசர்கள் கொடுத்ததாக இவை இருக்கலாம்). ஒரு ஆயிரம் வேத அறிஞர்களின் தினசரி பராமரிப்புக்காக அவர் ஏற்பாடு செய்தார் (அவரது குருவின் காலத்திலிருந்த தேசத்தில் நிலவி இருந்த வேத சம்பிரதாய விரோத பிரச்சனைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அவரது குரு பிரச்சினைகளை சரிசெய்து இருந்தார்). அவர் காஷ்மீரிலிருந்து பாரதத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அனைத்து கடலோர பகுதிகள் வரை பயணம் செய்தார். வைதிகர்களின் விரோதத்தை ஒழிப்பதில் அவரது குரு செய்த பணியை யாரும் மீறவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
கல்வியியல் / தத்துவப் பிரிவில் ஶங்கர பாஷ்யத்தை நாற்பத்தி எட்டு முறை கற்பித்ததன் மூலம் அத்வைத மரபின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தினார்.
இவை அனைத்தும் ஒரு குறுகிய காலமான எட்டு ஆண்டுகளில் செய்யப்பட்டது. அவரது சீடர் சுரேந்திர ஸரஸ்வதியை பீடத்தில் இருத்திய பிறகு, நாசிகாபுரிக்கு அருகிலுள்ள த்ரயம்பகேஷ்வரத்துக்கு அருகே (சமாதி ஸ்தல் என பின்னர் அழைக்கப்பட்டது) அவர் ஒரு குகைக்குள் நுழைந்தார், பின் அவரை யாரும் காணவில்லை.
பின் காலத்தில் தக்ஷிண பாரதத்திலிருந்து வந்த ஸதாஶிவேந்த்ர ஸரஸ்வதி என்னும் (53 வது) ஆச்சார்யர் பெயர் கொண்டு இருந்தார். "கௌட" சதாஶிவா என்ற அடைமொழியானது இந்த ஆச்சார்யர் பஞ்ச கௌட தேசத்தில் இருந்து வந்ததால்
வேறுபாட்டை காட்ட வந்திருக்கலாம்.

No comments: