Pages

Wednesday, June 8, 2022

காஶி யாத்திரை - 10



  வீட்டிற்கு வந்து சிற்றுண்டி முடித்து படுத்துக் கொண்டு சற்று நேரம் தூங்கினேன். மாலை 4 50 க்கு ஜனசதாப்தியில் திரிவேணி க்கு கிளம்ப வேண்டும். வீட்டிலிருந்து  மூன்று மணிக்கு கிளம்பலாம் என்று சொல்லி அப்படி இப்படி மூன்றரை ஆகிவிட்டது. ஒரு மணி நேரத்தில் போய்விடலாம் என்று சொன்னார்கள். இதுவும் ஒரு தனியார் டாக்ஸி. முந்தையது இரவுப் பயணமாக அமைந்து விட்டதால் அவ்வளவாக பார்க்க முடியவில்லை. இப்போது வேடிக்கை நிறைய பார்க்க முடிந்தது


 

ட்ராம் என்பது ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்தேன்ஆனால் இல்லை. போகிற வழியில் 2, 3 பார்த்துவிட்டேன். மக்கள் ஏறி இறங்கி ஓரளவுக்கு வேகமாகவே பயணிக்க முடிகிறதுநேற்று பார்த்த அந்த மிக உயரமான கட்டிடம் தூரத்தில் தெரியும் போது டிரைவரை விசாரித்தேன். இதுதான் கல்கத்தாவில் உயரமான கட்டிடம். The 42 என்றே பெயர் என்றார். அதை ஹிந்தியில் சொன்னார். ஆனால் விக்கியில் தேடினால் ஆங்கிலத்தில் இப்படி பெயர் இருக்கிறது. 65 மாடிகள். கார் மேலேயே போகிறது என்றார் டிரைவர். எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஒவ்வொரு மாடியிலும் ஒன்று அல்லது இரண்டு குடியிருப்புகள். நாற்பதாவது மாடி வரை ஒன்று அதற்கு மேல் இரண்டுஅத்தனை குடியிருப்புகளும்  ஒவ்வொருத்தர் வாங்கி தனியார் மயமாக இருக்கிறது. விலை பல கோடிகள் என்றார்


மேலே வேடிக்கை பார்த்துக்கொண்டே போனேன். ஹவுரா ஸ்டேஷனை நெருங்கும்போதே மிகவும் நெரிசல். இவ்வளவு தூரம் கொஞ்சம் சுலபமாக வந்து விட்டோம். ஆனால் இனிமேல் எவ்வளவு நேரம் ஆகும் என்பது சொல்லவே முடியாது என்றார் டிரைவர். அதேபோல கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நகர்ந்து ஒருவழியாக நெரிசல் நீங்கி ஸ்டேஷனுக்கு போய் விட்டோம்

 


 
ஹௌரா ஸ்டேஷன் டெர்மினல்.   அதைத் தாண்டினால் கங்கையில் தான் போய் விழ வேண்டும். ஆகவே ஒரு பக்கம் இருப்புப் பாதைகள் இல்லாததால் மிகச் சௌகரியமாக ஸ்டேஷனுக்குள்ளேயே வண்டிகள் போக முடிகிறது. 200 ரூபாய் கடன் கட்டணம் வசூலிக்கிறார்கள்ஒரு மணி நேரம் உள்ளே இருக்க அனுமதி இருக்கிறது போலிருக்கிறது.

 நாங்கள் போய் சேர்ந்த போது இன்னும் வண்டி வந்திருக்கவில்லை. வேறு ஏதோ பார்க்கிறது கிளம்பி போயிட்டு. இதைப்போல இன்னும் இரண்டு வண்டி போனபிறகு ராஜதானி வந்தது. தாங்கள் பிறந்த இடத்திற்கு தள்ளி தான் ஏற வேண்டிய பெட்டி. ஆனால் அந்த பெட்டி இருக்கும் இடத்துக்கு பிணையாக வண்டி வந்து நிற்க முடியவில்லை. வெளியே போவதற்காக ரேம்ப் அமைத்திருக்கிறார்கள். அது வந்து விட்டது. ஆகவே மூட்டை முடிச்சை தூக்கிக் கொண்டு நாங்கள் கொஞ்சம் நடக்க வேண்டியிருந்தது .நல்ல காலமாக உதவி செய்வதற்கு நண்பரின் தம்பி வந்திருந்தார். அத்துடன் லக்கேஜை வைத்து தள்ளிக் கொண்டு போகும்படி ஒரு எளிமையான டிராலியையும்  கொடுத்து இருந்தார்கள். ஆகவே சற்று எளிதாக இடத்தில் அமர முடிந்ததுவழக்கம்போல் எனக்கான இடம் தனியாக போய்விட்டதுஆர்ஏசி யின் மாயம்.

No comments: