பானை உதாரணம் போல எல்லா ஆன்மாக்களும் பரமான்மாவில் கலக்காது.
ஜீவன் முத்தனுடைய ஆன்மா பிரியும்போது அதனிடம் கர்மா பற்று இல்லை. அது பரமான்மாவையே பற்றி இருக்கு. மத்தவங்க ஆத்மாக்களுக்கு கர்ம பற்று இருக்கு. அதனால அதிலே கலந்து அந்த நிலையை அடையும். சாதாரணமா நடக்கிற ஒருவன் ஒரு காலை முன்னாலே வைத்து அப்புரமா அடுத்த காலை எடுத்து வைக்கிறது போல உயிர் பிரியும் தருணத்திலே அடுத்து போற இடம் முடிவாயிடும். அதனால ஜீவன் முத்தர் ஆன்மா போல அது பற்றில்லாம தேகத்தை விட்டு வெளியே வருகிறதில்லை. பரமாத்மாவிலே கலக்கிறதும் இல்லை.
ஜட பரதர் அவரோட முன் ஜன்மம் ஒண்ணிலே ராஜாவா இருந்தார். பிறகு சன்னியாசம் மேற்கொண்டு மோக்ஷம் வேண்டி தபஸ் பண்ணார். சந்தியையிலே ஆற்றுக்கு போய் சூர்ய உபாசனை செய்கிற நேரம் ஒரு நிறை கர்ப்பமான மான் அங்கே வந்தது; அது தண்ணி குடிக்கப்போச்சு.
தண்ணியிலே வாயை வைச்ச அதே சமயம் ஒரு சிங்கம் கர்ஜிக்கிற சத்தம் கேட்டது. மான் மிரண்டு போய் ஆற்றிலே குதிச்சு இறங்கி நீஞ்சி அக்கரைக்கு போகப்பாத்தது. அதே சமயம் மான்குட்டி கர்பத்திலேந்து நழுவி பிரசவம் ஆயிடுத்து. மான் களைப்பினாலேயும் நீஞ்ச முடியாமையாலும் செத்துப்போச்சு.
இதை பாத்துகிட்டு இருந்த பரதருக்கு இரக்கம் மேலிட்டது. அடப்பாவமே! இந்த மான்குட்டிக்கு இப்படி ஒரு கதியான்னு பரிதாபப்பட்டு அதை எடுத்துப்போய் வளக்க ஆரம்பிச்சார். அது மேலே உசிரையே வெச்சுட்டார். அதுக்கு உணவு தரதும் அதை மத்த மிருகங்கள்கிட்டேந்து காப்பாத்தனுமேன்னு கவலை படுகிறதும்... இப்படியே இருக்கும் போது உயிரும் பிரிஞ்சது.
மானைப்பத்தி நினைச்சுகிட்டே இருக்கிறப்ப உயிர் பிரிஞ்சதால அது மேல பற்று வைச்சு இருந்ததால அடுத்து ஜன்மமும் வாய்ச்சது; மானா பிறந்தார். போன ஜன்மத்திலே அவர் செஞ்ச தபஸால அந்த பிறப்பு சமாசாரங்கள் நினைவு இருந்தது. இப்படி ஒரு தபஸ்வியா இருந்து மோக்ஷம் பெறுகிற வாய்ப்பை வீணாக்கிட்டோமேன்னு வருத்தப்பட்டது. இந்த ஜன்மத்திலே அதே தப்பை செய்யக்கூடாதுன்னு கவனமா இருந்து இறை நினைவோடேயே இருந்து அடுத்த ஜ்ன்மத்திலே ஒரு அந்தணருக்கு மகனா பிறந்தது. அவரே ஜட பரதர்.
என்ன சொல்ல வந்தேன்னா உயிர் பிரிகிறபோது எந்த நினைவோட இருக்கோமோ அதே பிறவியை அடைவோம். அதுக்குத்தான் பகவான் நாமாவை எப்பவும் சொல்லிகிட்டே இருக்கணும்; பகவத் சிந்தனையே சதாசர்வ காலமும் இருக்கணும் என்கிறது. அப்பதான் இறக்கும்போதும் அதே நினைப்பு இருக்கும்; பகவானையும் அடைஞ்சுடுவோம். இதுக்குத்தான் இறக்கும் தறுவாய்லே இருக்கிறவங்க பக்கத்திலே இருந்து கொண்டு பகவான் நாமாக்களை உரக்க சொல்லணும்ன்னும் சொல்லி இருக்காங்க.
ஜீவன் முத்தர் எப்பவும் பரமான்மாவையே நினைத்து அதிலேயே ஒன்றி இருக்கிறதாலே அவர் அதோட ஐக்கியம் ஆகிடுவார். சிவன் விஷ்ணு அம்பாள் ன்னு ஒரு கற்பனையிலே இருக்கிறவங்க அந்த அந்த ஈசனோட லோகத்தை அடைவாங்க. அது மோக்ஷம் இல்லை. முன்னாலே பரமாத்ம அனுபவம் இருந்தாதான் இறக்கிற நேரம் அதிலே இருக்க முடியும். இது சாதாரணமா யாருக்கும் வாய்க்கிறதில்லை.
ஞானிக்கு தன்னோட தேகம் எங்கே விழணும் எப்ப விழணும்ன்னு ஒண்ணும் லட்சியமே இல்லை. பரிசுத்தமான இடம் வேணும்ன்னு இல்லை, சிவராத்திரி, ஏகாதசி, உத்தரயணம் ன்னு ஒண்ணும் வேணாம். பிராரப்தம் தீர்ந்து எங்கே எப்ப விழுந்தாலும் விடுதலையாவான்; பரமாத்மாவோட ஒன்றுவான்.
--
நெரூருக்கு கிளம்பிக்கொண்டு இருக்கேன். வர 4 நாளாகும். போஸ்ட் ஷெடூல் பண்ணியாச்சு. திங்கள் வந்துதான் மேற்கொண்டு.
8 comments:
அந்திம காலத்தில் ஈஸ்வரநாமத்தைச் சொல்ல இயலாவிடினும், மற்றவர்கள் சொல்வதை கேட்கவாவது செய்ய வேண்டும் என்று பரமாசார்யார் பல கிராமங்களிலும் இதற்கென சிலரிடம் ஏற்பாடுகள் செய்திருந்தார் என்று படித்திருக்கிறேன். இறைவனது நாம விசேஷத்த்தால் சாயுஜ்யம் அடைதல்.
காசியிலும் ராம நாமத்தை ஈஸ்வரனே காதில் சொல்லுவதாகச் சொல்வதும் இதனாலேதான் இல்லையா?
//ஒருவன் ஒரு காலை முன்னாலே வைத்து அப்புரமா அடுத்த காலை எடுத்து வைக்கிறது போல உயிர் பிரியும் தருணத்திலே அடுத்து போற இடம் முடிவாயிடும். // excellent lines.......
Thambi
நிறைய அரியர்ஸ் சேர்ந்திருக்கு, மெதுவா வரேன், நேத்திக்கு போஸ்டைக் காணோமே? முன்னே ஆனாப்பல ப்ளாகர் முழுங்கிடுத்தா? :)))))))
//சிவன் விஷ்ணு அம்பாள் ன்னு ஒரு கற்பனையிலே இருக்கிறவங்க அந்த அந்த ஈசனோட லோகத்தை அடைவாங்க. அது மோக்ஷம் இல்லை.//
கற்பனையா இருந்தாலும் அதுவும் ஒரு சுகம் தானே.அதிலும் என் போன்ற சாமானியருக்கு!
பச்சைக் கலர் எழுத்துப் படிக்கக் கஷ்டமா இருக்கே?ட்?????
கீ அக்கா மொழிபெயர்ப்பு வேலை கடுமையிலே காணாமபோச்சு.
சாரி!
//கற்பனையா இருந்தாலும் அதுவும் ஒரு சுகம் தானே.அதிலும் என் போன்ற சாமானியருக்கு!//
உண்மைதான்!அனேகமா எல்லாருக்கும்தான்!
பச்சை எனக்கே பிடிக்கலை. இனிமே தவிர்த்துவிடுகிறேன்.
//ஒரு கற்பனையிலே இருக்கிறவங்க //
இப்படி மனச ஒடைச்சுட்டீங்களே :(
இப்படி மனச ஒடைச்சுட்டீங்களே :(
அச்சசோ! அப்படி இல்லை. இந்த உலகம் எவ்வளோ உண்மையோ அதே போல அவர்களும் அந்த லோகங்களும் உண்மை! அது கிடைக்கிறதே ரொம்ப பெரிசு.
மனசு ஒடைய வேணாம். :-))
Post a Comment