Tuesday, May 26, 2009
மேலும் பிரமாணங்கள்
5. அருத்தா பத்தி பிரமாணம் என்கிறது லாஜிக். பகல்லே சாப்பிடாம ஒத்தர் இருக்கார். நான் இன்ன விஷயத்துக்காக உண்ணா விரதம் இருக்கேன் என்கிறார். ஆனா நாலு நாளாகியும் ஆசாமி குத்துக்கல்லாட்டம் இருக்கார். கொஞ்சம் கூட களைப்பா இல்லை. உடம்பு இளைக்கலை. அவர் பகல்ல சாப்பிடலையே தவிர ராத்திரி ரகசியமா ஒரு பிடிபிடிக்கிறார்ன்னு ஊகிக்கிறோம். அதான் அருத்தா பத்தி.
PG: [எது இல்லாம ஒரு விஷயம் சம்பவிக்காதோ அவ்வளோ முக்கியமான, இன்றியமையாத வஸ்து உபபாத்தியம். இங்க ராச்சாப்பாடு உபபாத்தியம். இந்த உபபாத்தியத்தால எது விளையுமோ அது சமபாத்தியம். சும்மா ஒரு பிஜி பாய்ண்ட்! ஹிஹிஹி! இன்னும்... எதோட அபாவத்தால -அதான் எது இல்லாததால- எது நடக்கமுடியாம போகுமோ அது உபபாதகம். ராத்திரி சாப்பாடோட அபாவத்தால – அதாவ்வது இல்லாம போவதால- பகல்ல சாப்பிடாதவனுக்கு உடம்போட பருமன் இல்லாம குறைஞ்சு போகும். அதனால இரவு சாப்பாடு பருமனோட உபபாதகம்.] எதுக்கு இவ்வளொ சொன்னேன்னா உபபாத்தியத்தோட சம்பந்தத்தால உபபாதகத்தை காட்டுறதுதான் அருத்தாப்பத்தி ப்ரமாணம்.
6. அநுபலப்தி ப்ரமாணம்: இத அபாவ பிரமானம்ன்னும் சொல்வாங்க. அதாவது இல்லாமையே பிரமாணம். குழப்புதா? இங்கே புத்தகம் இல்லைன்னு சொல்கிறோம். அப்படியான்னு பாக்கிறோம். ஆமா இல்லை. உண்மைதானே? இதான் அபாவ பிரமாணம்.
7. ஐதீக பிரமாணம்: காலாகாலமா ஒரு விஷயம் எல்லாரும் சொல்லிகிட்டு இருக்காங்க. அதனால அது உண்மைன்னு தெரிஞ்சுக்கிறது. பல கோவிகளிலே இந்த மாதிரி விஷயம் கேள்விப்படலாம். இங்கேதான் வஸிஷ்டர் யாகம் பண்ணார். அப்படி ஐதீகம்ன்னு சொல்லுவாங்க. அப்படி நடந்ததையும் நிரூபிக்க முடியாது - எவ்வளோ காலம் ஆச்சு? எப்படி எந்த ஆதாரமும் இருக்கும்? இல்லைன்னு சொல்லவும் முடியாது. அப்ப காலாகாலமா சொல்லிகிட்டு இருக்கிறது தப்பா?
8. ஆகமப்பிரமாணம்: சாஸ்திரங்களிலே சொல்லி இருக்கிறதை நம்புவது
சில சமயம் இந்த எட்டை ஆறுன்னும் சொல்லுவாங்க. உபமான பிரமாணம்ன்னு தனியா இல்லை. அது பிரத்யக்ஷ பிரமாணத்தோட சேத்தி; ஆகமப்பிரமாணம் சப்த பிரமாணத்திலே சேத்தி. அதனால ஆறுதான் ன்னு சொல்க்கிறவங்க உண்டு. வேற எங்காவது இப்படி வித்தியாசமா படிச்சா குழம்ப வேணான்னு சொன்னேன்.
சரி, சரி மேட்டருக்கு வரலாம்.
பிரம்மத்தை எந்த பிரமாணத்திலே சேக்கிறது?
அதுக்கு பேரோ உருவமோ இல்லை. அதனால பாக்கமுடியாது. பஞ்ச பூதங்களோட சேர்க்கை மட்டுமே இல்லை. அதனால பிரத்யக்ஷ பிரமாணம் இல்லை.
புகை அக்னி இருக்கிறதை போல எதாலும் பிரம்மம் இருக்கிறதை ஊகம் செய்ய சொல்ல முடியாது. அதனால அநுமானம் இல்லை.
பிரம்மம்தான் இருக்கு; வேற எதுவுமே அன்னியமா இல்லை. அத்னால் எதை உதாரணம் காட்டி இது போல இருக்கும்ன்னு சொல்லலாம்? அதனால உபமான பிரமாணம் இல்லை.
பிரம்மம் ஆகமத்துக்கு எட்டாது. அப்பர் சொன்னாப்போல இவ்வண்ணன், இவ்வுருவன், இந்நிறத்தன், இத்தன்மையன், இவ்விடத்தன் ன்னு ஒன்னுமே சொல்ல முடியாதே!
அப்ப பிரம்மம் வாக்குக்கு எட்டாது.
இப்படி வாக்குக்கு எட்டாதுன்னு சொன்ன வேதமே வாக்குக்கு எட்டும்ன்னு எப்படி சொல்லித்துன்னா...
Labels:
நான்காம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
திரும்பவும் படிக்கணும் போலிருக்கு, அதுவும் முதல் அருத்தாபத்தி பிரமாணம். கேள்விப்பட்டதே இல்லையா? கொஞ்சம் புதுசா இருக்கு. :((((((((((( இல்லத்திலே படிச்சதாவும் நினைவில் இல்லை. :((((
//இல்லத்திலே வராததுதான்//
என் ஞாபகசக்திக்கு ஒரு ஜே போட்டுக்கறேன். கொஞ்சம் நிதானமாப் படிச்சுட்டும் வரேன். :D
ஏன் பல விஷயங்கள் இல்லத்திலே வராததுதான். அதிலே சொந்த சரக்கே கிடையாது. இப்ப அதுதான் நிறைய.
ஹிஹி எ.பி கரெக்ஷன்
//திரும்பவும் படிக்கணும் போலிருக்கு, அதுவும் முதல் அருத்தாபத்தி பிரமாணம். கேள்விப்பட்டதே இல்லையா? கொஞ்சம் புதுசா இருக்கு. //
அது சரி! எல்லாருக்கும் தெரிஞ்சதையே எழுதறதுல என்ன இருக்கு?
//அதிலே சொந்த சரக்கே கிடையாது. இப்ப அதுதான் நிறைய.
ஹிஹி எ.பி கரெக்ஷன்//
சொல்லணும்னு நினைச்சுப் போனாப் போறதுனு விட்டுட்டேன். :P:P:P:P
// சொல்லணும்னு நினைச்சுப் போனாப் போறதுனு விட்டுட்டேன். :P:P:P:P//
most kind of you!
:-))
Post a Comment