Pages

Thursday, May 7, 2009

ஜீவன்முத்தரும் பிராரத்தமும்



ஒரு பஞ்சுப்பொதி இருக்கு. அதை எரிக்கணும்னா ஒரு சின்ன தீக்குச்சி தீயே போதும். ஊழித்தீ ன்னா? கேக்கவே வேணாம். பல ஜன்மங்களா சேர்ந்து நம்ம துரத்திக்கிட்டே வர சஞ்சித கர்மங்கள் இருக்கு இல்லையா? அவை எல்லாம் தத் பத தரிசனம் என்கிற அஹம் ப்ரம்மாஸ்மி என்கிற பாவனை திடமா வந்ததுமே எரிந்து போகும். ஞானத்தீயால அத போல அழிக்கப்படுதாம். த்வம் பத தரிசனம் என்கிற தான் யார்ன்னு நிச்சயமா அறிஞ்ச உடனே அன்னியமா ஒண்ணும் இல்லாததால யார் யாருக்கு என்ன செய்ய முடியும்ன்னு ஒரு நிலை வந்து விடுகிறதாலே பற்றில்லாத கர்மத்தால ஆகாமியம் வராமல் போகும். மீதி இருக்கிறது பிராரத்தம்தான். அது வில்லுலேந்து கிளம்பின அம்புபோல. இலக்கை அடைஞ்சே தீரும். அதனால அது அனுபவிக்க அனுபவிக்கத்தான் தீரும். அது தீரும் போது அஸி பத நிலை வந்துடும். அடியோட தான் என்கிறது போய் சகஜ சமாதி அடைந்துடுவார். அதுக்கு அப்புறம் வெளியே வர வேலையே இல்லை. அவர் வரனாகி, வரீயானாகி, அப்புறம் வரிட்டனாயிடுவார்.

சஞ்சிதமுன் கட்டுவினை சற்குருநோக் காற்சரியும்
பஞ்சுமலை பட்ட நெருப்பாய்.
கொடுப்பானு மீசனதை கொள்வானுமீசனெனின்
மடுக்கா வெதிர் வினைகள் வந்து.
உள்ளப் பொசிப்பெல்லா முண்டொழிப்ப தன்றியிதைத்
தள்ளப் படாதெவர்க்குந் தான்

வள்ளலார் _ பாசவியல்

102.
கன்மத்திரயம் நீங்குதல்:
பஞ்சினை யூழித்தீப்போற் பலசன்ம விவித வித்தாஞ்
சஞ்சித மெல்லாஞானத் தழல்சுட்டு வெண்ணீறாக்கும்
கிஞ்சிதா காமியந்தான் கிட்டாமல் விட்டுப்போகும்
விஞ்சின பிராரத்தத்தின் வினையநு பவித்துத்தீரும்.

பஞ்சினை ஊழித்தீப்போல் பல சன்ம விவித (பல விதமான) வித்தாம் சஞ்சிதம் எல்லாம் ஞானத் தழல்சுட்டு வெண்ணீறாக்கும். கிஞ்சித் (கொஞ்சம்) ஆகாமியம்தான் கிட்டாமல் விட்டுப்போகும் (சம்பவியாமல் நீங்கும்). விஞ்சின (மீதி) பிராரத்தத்தின் வினை அநுபவித்துத்தீரும்.
தாத்பர்யம்: சஞ்சித கர்மம் பரஞானத்தாலும், ஆகாமியம் ஜீவத்துவம் நஷ்டமடைவதாலும், பிராரத்தம் அனுபவித்தும் தீரும்.
---
நினைவுறுத்தல்: சஞ்சித கர்மம்: பிறவி எடுக்கும் போது நாம் கொண்டு வந்த மூட்டை. ஆகாமியம்: இந்த ஜன்மத்தில் நாம் உண்டாக்கிக் கொள்வது. பிராரத்தம்: பலன் தர துவங்கிவிட்ட கர்மா.
--
அநுபவித்துத்தீருதல்: புலி என நினைத்து விட்ட அம்பு பசு என அறிந்தாலும் எப்படி நிற்காதோ அது போல பலன் தர தொடங்கிவிட்ட கர்மா ஞானம் வரினும் நிறுத்த இயலாமல் இச்சை, அனிச்சை, பர இச்சைகளாக புசித்து தீரும்.



9 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு இலக்கை அடையாமல் விடாது என்பது இப்போது நன்றாகவே விளங்கிக் கொள்ளும்படி சொன்னதற்கு வந்தனம், வணக்கம் எல்லாமே தந்தனம்:-)

Geetha Sambasivam said...

சஞ்சித கர்மம்:=acquired?????
பிராரத்தம்= இங்கே விதி என்ற அர்த்தம் கொள்ளணுமோ?

திவாண்ணா said...

சஞ்சித கர்மம்:=acquired?????
acquired in previous janmas

//பிராரத்தம்= இங்கே விதி என்ற அர்த்தம் கொள்ளணுமோ?//
இல்லையே!
விதின்னு நாம் சொல்கிறது கர்ம விதியை. அதன் படி இந்த பிறவில சில கர்ம பலன்கள் வேலை பண்ண ஆரம்பிச்சாச்சு. இப்ப நாம அதை உணரலைனா கூட அது வேலையை ஆரம்பிச்சாச்சு. அம்பு வில்லை விட்டு கிளம்பியாச்சு. அது வேலையை முடிச்சே தீரும். அதான் பிராரத்தம்.

திவாண்ணா said...

சொன்னதற்கு வந்தனம், வணக்கம் எல்லாமே தந்தனம்:-)
:-)))
நன்னி!

R.DEVARAJAN said...

பிராரத்தம் - ப்ராரப்தம்

ப்ரகர்ஷேண ஆரப்தம் - ப்ராரப்தம்

உடல் விழுமுன் கட்டாயம் அனுபவித்தே ஆக வேண்டிய கர்ம பலன்கள்.

தேவ்

Geetha Sambasivam said...

கொஞ்சம் குழப்பிட்டு இருந்திருக்கேன், பிராப்தம், பிராரப்தம் இரண்டையும், இப்போப் புரியுது, நன்றி.

திவாண்ணா said...

பிராரப்தம் ந்னு தேவ் சார் எழுதினது சரிதான் -சம்ஸ்க்ருதத்திலே.
அதையேதான் தமிழ்ல பிராரத்தம் ந்னு எழுதி இருக்கார் மூல ஆசிரியர். அதனால அதையே பயன்படுத்தி இருக்கேன்.

திவாண்ணா said...

கீ அக்கா!
பிராப்தம் என்கிறது கிடைத்தது ந்னு பொருள் டும். பிராரப்த கர்ம பலனைதான் அப்படி பேச்சு வழக்கிலே சொல்கிறாங்க - என் கர்மாவோட பலனா கிடைச்சதுன்னு.

Kavinaya said...

//புலி என நினைத்து விட்ட அம்பு பசு என அறிந்தாலும் எப்படி நிற்காதோ அது போல//

நல்ல உவமை.