Tuesday, May 5, 2009
எப்படி முத்தர்ன்னு கண்டு பிடிக்கிறது?
இப்படி பிரமவித்து ஏன் துக்கம் அனுபவிக்கணும் ன்னு ஒரு கேள்வி இருக்கு.
இந்த நாலு பேரோட கர்மாக்களும்தான் வேறு வேறா இவர்கள் இருக்க காரணம்.
சமாதி என்கிறது உலகநாட்டமே இல்லாம இரண்டற ஐக்கிய நிலையிலே இருக்கிறதாகும்.
வரன் பசி முதலியது வரும் போது ஆகாரம் சம்பாதிச்சு சாப்பிட பகிர் முகமாவான்.
வரியன் அன்னியர் தூண்டினால் மட்டுமே பகிர் முகமாகி உணவை ஏத்துப்பான்.
வாரிட்டன் தானாவும் வராமாட்டான். மத்தவங்க தூண்டியும் வரமாட்டான். எப்பவுமே தேகம் கட்டை போல கிடக்க தான் சதா அதீத நிலையிலேயே இருப்பான். அவன் நிலைதான் முடிவான முடிவுன்னு சிலர் சொல்கிறது. மத்தவங்க பார்வைக்குத்தான் அவன் உடம்போட இருக்கானே தவிர தன் வரை தேகம் இருக்கிற நினைப்பே இல்லாத பேரின்பத்திலே இருப்பான்.
முந்திய ரெண்டு பேரும் பிரம்ம நிலையிலே இருக்காங்கன்னா இந்த உலகத்தை எப்படி பார்ப்பாங்க? அவங்களுக்கும் தன்னோட உடம்புன்னு ஒரு உணர்ச்சி இருக்காது. அதை சாக்ஷியா மட்டும் பார்ப்பாங்க. நாம் ஒரு சினிமாவை பார்க்கிறபோது எப்படி பார்க்கிறோமோ அப்படி. இன்னும் சரியா சொல்லணும்னா ஒரு நாடகத்திலே நடிக்கிற மாதிரி. அதிலே தனக்கும் ஒரு பாத்திரம் -ரோல்- இருக்கு இல்லையா?
இவங்க இப்படி பகிர்முகமா வரதால அப்போதைக்கு அனுபவிக்கும் சுகம் குறையுதே தவிர மத்தபடி அவங்களோட ஞான நிலையை அது பாதிக்காது.
இப்படி வித்தியாசம் இருக்கிறது அவங்களோட பிராரத்த கர்மாவிலே இருக்கிற வித்தியாசம்ன்னு சொன்னோம். முக்தி நிலைக்கு போகணும்ன்னா ஒத்தரோட கர்ம கணக்கு பாலன்ஸ் ஆகணும். அதாவது அனுபவிக்க வேண்டிய புண்ணியமோ பாபமோ இல்லைன்னு ஆகணும். பத்து புண்ணியம் பண்ணி இருக்கேன். பத்து பாபம் பண்ணி இருக்கேன். தானிக்கி தீனி சரி போயிந்தி ன்னு சொல்ல முடியாது. பாபமோ புண்ணியமோ விளைவை அனுபவிச்சே தீரணும். சில பிராயச்சித்தங்கள் அவற்றோட கடுமையை குறைக்கலாமே தவிர வராம தடுக்காது. இல்லை கொஞ்சம் தள்ளிப் போட முடியுமோ என்னவோ?
ஞானம் வந்தா சஞ்சித கர்மா காணாம போயிடும். பற்றில்லாத போனதாலே இப்ப செய்கிறதிலே கர்ம பலன் ஒட்டாது. ஆகாமி கர்மா கிடையாது. ஆனா ஏற்கெனெவே பலன் தர ஆரம்பிச்சுவிட்ட கர்மாவான பிராரத்த கர்மாவை அனுபவிச்சு தீரணும்ன்னு முன்னேயே பாத்தோம். உலக விவகாரத்திலே இல்லாம இதை அனுபவிச்சு தீர்க்க முடியாதே? அதனால அவங்க அப்பப்ப தேவையான அளவு பகிர்முகமா இருக்காங்க. ஆகாரம் எடுத்துக்க வேண்டிய அளவு கூட பிராரத்தம் இல்லாதவனே வரிட்டனா இருக்கிறவன். அப்ப மத்தவங்களைப்பத்தி யூகிச்சுக்கலாம். ஆனா நாலு பேருமே ஞானிகள்தான். அதுல சந்தேகமே இல்லை.
முக்தி என்கிறது மோட்சம். அதை அடைஞ்சவங்க முத்தர். இவர்கள் ரெண்டு விதம்: ஜீவன் முத்தர், விதேக முத்தர்ன்னு பாத்தோம். விதேக முத்தருக்கு தேகம் போயிடுத்து. மறு பிறவி இல்லாம பரமாத்மாவோட ஐக்கியம் ஆயிட்டார்.
ஜீவன் முத்தர் உடம்போட இருக்கிறபோதே பிரம்ம நிலையை அனுபவிக்கக்கூடியவர் ன்னு பாத்தோம். இதிலே 4 வகையும் பாத்தோம்.
அதனால முத்தி என்கிறது ஏதோ இறந்து போனாதான் வரும்ன்னு இல்லை என்பது தெளிவு.
இவங்க சில காரணங்களுக்காக தன்னை வெளியே அதிகமா காட்டிக்கிறதில்லைன்னும் பாத்தோம். அப்ப எப்படி ஒத்தர் ஜீவன் முத்தர்ன்னு கண்டு பிடிக்கிறது?
அவங்களுக்கு பத்து குறிகள் உண்டுன்னு சிவப்பிரகாச ஸ்வாமிகள் சொல்லி இருக்காங்க.
குறிகளோர் பத்துளவா ஞானமயர்ச் சுவைதாங்
குரோதமின்மை வைராக மைம்பொறிக ளடக்க
லறமுதவு சமைதமையே சனப்பிரியத்துவமே
யலோபமொடு கொடையபய நிருமதமென் றறிக
நெறிமருவு சீடரொடு பத்தருதா சீனர்
நிலையில்பா விகளென்னு நால்வகையோ ரிடத்து
முறையினனுக் கிரகம்வந் துறுமருள்கொள் சீவன்
முத்தனா லென்பரவை முறையினெடுத் துரைப்பாம்.
பிரிச்சுப்பாக்க:
குறிகளோர் பத்துளவாம் ஞானமயர்ச் சுவைதாம்
குரோதமின்மை வைராகம் ஐம்பொறிகள் அடக்கல்
அறம் உதவு சமை தமையே சனப்பிரியத்துவமே
லோபமொடு கொடை அபயம் நிருமதம் என்றறிக
நெறி மருவு சீடரொடு பத்தர் உதாசீனர்
நிலையில் பாவிகளென்னும் நால் வகையோர் இடத்து
முறையின் அனுக்கிரகம் வந்துறு மருள் கொள் சீவன்
முத்தனால் என்பர் அவை முறையின் எடுத்துரைப்பாம்.
(வேதாந்த சூடாமணி)
1.குரோதமின்மை 2. உலோபமின்மை 3. அகங்காரமின்மை 4. பஞ்ச இந்திரியங்களையும் அடக்குதல் 5. சமை (சமம்) 6. தமை (தமம்) 7. ஜனப்பிரியத்துவம். 8. கொடை 9. அபயம். 10. வைராக்கியம்.
இதை எல்லாம் சாதனா சதுஷ்டயத்திலே (நினைவிருக்கா? :) பாத்தாச்சு இல்லையா?
அபேதமா பாக்கிறதாலே சீடனானாலும் சரி, பகதர்கள் ஆனாலும் சரி, "இவரோட சமாசாரம் ஒண்ணும் எனக்கு வேணாம்பா" என்கிற உதாசீனரானாலும் சரி, இல்லை அவரை திட்டி பிரச்சினை செய்கிற பாவிகளானாலும் சரி - எல்லாருக்குமே அனுக்கிரகம் செய்கிறாராம்!
Labels:
நான்காம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//எல்லாருக்குமே அனுக்கிரகம் செய்கிறாராம்!//
நமக்கும் இவர்தான் சரியான நபர்னு சரியாப் புரியணும், அனுகிரஹம் கிடைக்கக் கொடுத்து வைக்கணும்.
தெளிவாகப் புரிந்த மாதிரியிருக்கு... :)
//எல்லாருக்குமே அனுக்கிரகம் செய்கிறாராம்!//
அவர்கள் நிஷ்க்ரிய நிலையில் இருப்பதால் அநுக்ரஹம் என்னும் ஸங்கல்பமும் அவர்களிடம்
அறவே இல்லை.
அநுக்ரஹம் அநிச்சையாக அவர்கள் வாயிலாக நிகழ்கிறது
என்று கொள்ள வேண்டும்.
தேவ்
ஜீவன் முத்தர் அநுக்கிரஹம் செய்கிறார் ந்னு வெளியேந்து பாக்கிற நமக்கு தோணுது இல்லையா? அதைதான் எழுதினேன்.
தேவ் சார் சொல்கிறது சரிதான். அவர்களா ஒண்ணும் செய்கிறதில்லை.
எல்லாத்தையும் பிரம்மமா பாக்கிரவங்க யாருக்கு என்ன செய்வாங்க? செய்கிற காரியமும் இல்லை, செயலும் இல்லை, செய்கிறவணும் இல்லை. இதைதான் திரிபுடி ஒழிஞ்ச நிலை என்கிறாங்க.
ஆனா சீவன் முத்தருக்கு திரிபுடி உண்டு.
பற்றில்லாம சாட்சியா இருந்தாலும் திரிபுடி உண்டு.
ஆனா சுத்த சத்துவத்திலேயே இருக்கிறபடியாலே எல்லாருக்கும் நல்லதே நடக்கணும்ன்னு ஒரு அருள் சக்தி அவர் மூலமா வெளியாகும்.
//இதை எல்லாம் சாதனா சதுஷ்டயத்திலே (நினைவிருக்கா? :)//
இல்லை :(
ஆனா மையக் கருத்து புரியறா மாதிரி இருக்கு.
மையக்கருத்து புரிஞ்சா சரி, விஷயங்கள் வெர்பாடிம் நினைவிருக்கணும்ன்னு இல்லை!
;-)
Post a Comment