////"அட இவன்தான்!" ன்னு சினேகிதிகள் தெரிஞ்சுகிட்டாங்க! //
ஆமாம். கண் (ஞானம்) இருக்கிற சிநேகிதிகள் தெரிஞ்சுகிட்டாங்க!!.
அதாவது சீடனும் குருவின் நிலையை எட்டியிருந்தாத்தான் புரியுமோ என்னவோ. ஆனால் சாமானியன் (ஞானக்)குருடனை போலத்தானே. அவனுக்கு ”நேதி” வழியில் சொன்னால் புரியுமா என்பது சந்தேகமே :(//
இப்படி கபீரன்பன் ஒரு கமென்ட் போட்டு இருக்கார். இதைப்பத்தி கொஞ்சம் விரிவா எழுத நினைச்சதாலே தனி பதிவாக போடறேன்.
உண்மைதான். சாமானியர்களுக்கு இப்படி புரியாதுதான்.
ஆனா சொல்கிறது சாமானியனுக்கு கிடையாது.
அதனாலதான் நாலு வழிகள் இருக்கு. எல்லாராலும் எங்கேயும் எப்பவும் செய்யக்கூடியது பக்திதான். சாமானியர் நிலையிலே இருக்கிற வரை அதுதான் நல்லது; எளிமையானது.
ஆனா என்ன, சாதாரணமா மக்கள் ஆயுசு முழுக்க பக்தின்னு கோவில் கோவிலா போய் பூஜை பூஜையா பண்ணி திருப்தியே வராம ஓடிகிட்டேதான் இருக்காங்க. கோடியிலே ஒத்தர்தான் (?) மூட பக்தி மட்டத்தைவிட்டு வெளியே வந்து எல்லாத்திலும் இறைவனை பாக்க ஆரம்பிச்சுன்னு அட்வான்ஸ் ஆகிறாங்க.
யாரானாலும் கொஞ்சம் முயற்சி எடுக்க ஆரம்பிச்சா மற்ற பாதைகளிலும் பயணிக்க முடியும். எந்த பாதையில் போனாலும் அந்த பாதையில் நிறைய முன்னேற்றம் இருக்கும் அதே சமயம் இன்னொரு பாதையிலும் கொஞ்சமாவது முன்னேற்றம் இருக்கத்தான் இருக்கும். பக்தியும் கர்மாவும் ஞானத்திலே கொண்டு விடலாம். எதுவும் இப்படித்தான்னு ரொம்ப வலுவான சுத்துச்சுவர் போட்டது இல்லை.
ஒண்ணு குருவை கண்டு பிடிச்சு அவர் காட்டுற பாதையிலே போகணும். அப்படி சரியான குரு கிடக்காவிட்டா எந்த பக்கம் உந்துதல் இருக்கோ அந்த பாதையிலே போய் பாக்கணும். சரியான நேரத்திலே குரு வந்து சரியான வழியை காட்டிடுவார்.
ஞான வழியை எடுத்துக்குங்க.
இது சுலபமான வழி இல்லை. ஆனாலும் இறங்கியாச்சு, தீவிரமா பயிற்சி ஆரம்பிச்சாச்சுன்னா சீக்கிரமே பலன் தரும். ஆனா சோதனைகளும் சிரமமும் அதிகம். அதனாலதான் ஞான நூல்கள் இந்த பாதையிலே இறங்கறவங்களை "தீரா" ந்னு சொல்லும். தன் குறிக்கோளிலே சற்றும் தயங்காது நிலையா சாதனை செய்கிறவங்கதான் இதிலே முன்னேறுவாங்க.
சமம் தமம் ந்னு ஆரம்பிச்சு ஆறு படிகள் சொன்னோம் இல்லையா? இதிலே நடந்து வந்து முன்னேறுகிறவங்க சாமானியர்களா இருக்க மாட்டாங்க. அந்த அளவு பயிற்சி செய்த பிறகு குரு உபதேசம் செய்யும் லெவலுக்கு வரும் போது நேதி நேதி சொன்னால் அதை ஆழ்ந்து சிந்திச்சு திடீர்ன்னு பட்டுன்னு ஞானம் ஸ்புரிக்கும். சந்தேகமே இல்லை என்கிறாங்க பெரியவங்க.
7 comments:
//உண்மைதான். சாமானியர்களுக்கு இப்படி புரியாதுதான்.
ஆனா சொல்கிறது சாமானியனுக்கு கிடையாது.//
அப்புறம் சாமானியருக்குக் கடைத்தேற என்ன வழி?? :(((((
//இன்னொரு பாதையிலும் கொஞ்சமாவது முன்னேற்றம் இருக்கத்தான் இருக்கும். பக்தியும் கர்மாவும் ஞானத்திலே கொண்டு விடலாம். எதுவும் இப்படித்தான்னு ரொம்ப வலுவான சுத்துச்சுவர் போட்டது இல்லை.//
அட, முதல்லே கஷ்டமா இருந்தாப்போல இருந்தது. இப்போப் பரவாயில்லாமப் புரியறது. இந்தப் பாடமும் ஓகே!
//அப்புறம் சாமானியருக்குக் கடைத்தேற என்ன வழி?? :(((((//
அட ஞான வழி மட்டுமே சாமானிருக்கு இல்லைன்னேன். மத்த மூணு வழிகள் இருக்கே? அதில் பொருத்தமானதை கடை பிடிக்கணும்.
விரிவான விளக்கத்திற்கு நன்றி.
//....ஆறு படிகள் சொன்னோம் இல்லையா? இதிலே நடந்து வந்து முன்னேறுகிறவங்க சாமானியர்களா இருக்க மாட்டாங்க.///
இதுக்குதான் சொல்றது, கீழ் வகுப்பு பாடம் எல்லாம் ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணாம, பெரிய வகுப்பு பாடத்தை போற போக்கில காதுல வாங்கி-கிட்டு கேள்வியெல்லாம் கேட்கக் கூடாதுன்னு :)))
அட! அப்படி இர்ரெகுலர் மாணவராவா இருந்து இருக்கீங்க? யாரப்பா அங்கே சட்டாம்பிள்ளை....ஒழுங்கா அட்டென்டண்ஸ் எடுக்கிறதில்லே?
:-))
//அட, முதல்லே கஷ்டமா இருந்தாப்போல இருந்தது. இப்போப் பரவாயில்லாமப் புரியறது. இந்தப் பாடமும் ஓகே!//
நன்னியோ நன்னி!
"We read, we try to understand, we explain, we try to know.
But a minute of true experience teaches us more than millions of words and
hundreds of explanations.
So the first question is: "How to have the experience?"
-The Mother,
Col Works,pp19-20
http://consenttobenothing.blogspot.com/2009/05/4.html
Post a Comment