Pages

Wednesday, May 27, 2009

ப்ரம்மம் வாக்குக்கு எட்டும்...




இப்படி வாக்குக்கு எட்டாதுன்னு சொன்ன வேதமே வாக்குக்கு எட்டும்ன்னு எப்படி சொல்லித்துன்னா...
சொல்லாம சொல்லித்து.

அதாவது
ரொம்ப நாள் கழிச்சு ஒரு பெண்ணோட சினேகிதிகள் அவளை பாக்க வந்தாங்க. அதுக்குள்ள அவளுக்கு கல்யாணம் ஆயிடுத்து. "எங்கேடி உன் புருஷன்?" ன்னு கேக்கிறங்க. "வெளீயே போயிருக்கார்"
"அட, பாக்க முடியாதா?"
"இல்லடி இப்ப ஒரு சாமி ஊர்வலம் வரும், அதிலே வருவார் பாக்கலாம்."

அதோ வந்தாச்சே! எல்லாரும் மாடிக்கு போய் வராந்தாவிலே நின்னு பாக்கிறாங்க. சாமி வருது. அதுக்கு முன்னே பலர் வித விதமா ஆடிகிட்டு பாடிக்கிட்டு வராங்க. இவ புருஷன் இவனாதான் இருக்கும்ன்னு ஊகம் பண்ணி "இவனா? இவனா?" -  அப்பப்ப கேக்கிறாங்க. "இல்லை, இல்லை" ன்னு சொல்லிகிட்டே வரா. அப்ப ஒரு வழியா நிஜமாவே அவளோட புருஷன் ஜம்ன்னு சிலம்பம் சுத்திகிட்டு வந்துட்டான்.

"இவனாடி?"

பதில் காணோம். இது வரைக்கும் இல்லை இல்லைன்னு வார்த்தையா சொன்னவ இப்ப வார்த்தை இல்லாம வெக்கத்தோட சும்மா இருக்கிறதை பாத்து "அட இவன்தான்!" ன்னு சினேகிதிகள் தெரிஞ்சுகிட்டாங்க!

அது போல, "இது இல்லை, இது இல்லை" ன்னு லிஸ்ட் போட்ட வேதம், "இது இல்லாம எது இருக்கோ அதுவே பிரம்மம்" ன்னு சொல்லாம சொல்லித்து என்கிறார் குரு.

அது உன் உடம்பு இல்லை. ஏன்னா அது அநித்தியமானது.
இல்லை, சடமில்லை, துக்கம் உள்ளது இல்லை. இது நான் இல்லை இது நான் இல்லை" ன்னு சொல்லிகிட்டே போய் "கடைசிலே எது மிச்சமா இருக்குமோ அதுவே பிரம்மம்." இப்படி கூறாம கூறும் வேதம். இந்த வழியா பிரம்மம் வாக்குக்கு எட்டும்.

8.
வாக்கியந் தனக்கெட்டாது வத்துவென் றுரைத்த வேதம்
வாக்கிய விருத்தி யாலவ் வத்துவைக் காட்டிற்றன்றோ
வாக்கியங்களிலே மான மாவதே தென்றாயாகில்
வாக்கியமிரண்டும் மெய்யே மறைகள் பொய்யாது கேளாய்.

வாக்கியந்தனக்கு எட்டாது வத்து (பிரமம்) என்று உரைத்த வேதம் (மகா) வாக்கிய (த்தின் லக்ஷணா) விருத்தியால் அவ் வத்துவை காட்டிற்று அன்றோ? வாக்கியங்களிலே மானமாவது (பிரமாணவாவது) ஏது என்றாய் ஆகில் வாக்கியம் இரண்டும் மெய்யே; மறைகள் பொய்யாது கேளாய்.

9.
பிரமம் ஸ்ருதிக்கு அகோசரமும் கோசரமுமாம்

தன்பதியல்லாப் பேர்க டமையல்ல னல்ல னென்றாள்
அன்பனைக் கேட்ட நேர மவள்வெட்கி மௌனமானாள்
என்பது போல நீக்கி யிதன்றிதன் றெனச்சே டித்த
பின்பரப் பிரமந் தன்னைப் பேசாமற் காட்டும் வேதம்.

தன் பதி அல்லாப் பேர்கள்தமை அல்லன் அல்லன் என்றாள், அன்பனை (கணவனை) கேட்ட நேரம் அவள் வெட்கி மௌனமானாள் என்பது போல நீக்கி இதன்று இதன்று எனச் சேடித்த (இல்லையென்ற) பின், பரப் பிரமந் தன்னைப் பேசாமல் காட்டும் வேதம்.

6 comments:

Geetha Sambasivam said...

//இது வரைக்கும் இல்லை இல்லைன்னு வார்த்தையா சொன்னவ இப்ப வார்த்தை இல்லாம வெக்கத்தோட சும்மா இருக்கிறதை பாத்து "அட இவன்தான்!" ன்னு சினேகிதிகள் தெரிஞ்சுகிட்டாங்க!//

உதாரணங்கள் அருமை! இந்தப் பதிவிலே சந்தேகம் ஒண்ணும் வரலை! :)))))))

திவாண்ணா said...

ஹிஹி தாங்க்கீஸ்!

கபீரன்பன் said...

//"அட இவன்தான்!" ன்னு சினேகிதிகள் தெரிஞ்சுகிட்டாங்க! //

ஆமாம். கண் (ஞானம்) இருக்கிற சிநேகிதிகள் தெரிஞ்சுகிட்டாங்க!!.

அதாவது சீடனும் குருவின் நிலையை எட்டியிருந்தாத்தான் புரியுமோ என்னவோ. ஆனால் சாமானியன் (ஞானக்)குருடனை போலத்தானே. அவனுக்கு ”நேதி” வழியில் சொன்னால் புரியுமா என்பது சந்தேகமே :(

Geetha Sambasivam said...

//ஆனால் சாமானியன் (ஞானக்)குருடனை போலத்தானே. அவனுக்கு ”நேதி” வழியில் சொன்னால் புரியுமா என்பது சந்தேகமே :(//

ரொம்ப சரி, என் போன்றவர்களுக்குக் கொஞ்சம் கஷ்டமே! என்றாலும் இந்தப் பதிவு ஓகே!

திவாண்ணா said...

//ரொம்ப சரி, என் போன்றவர்களுக்குக் கொஞ்சம் கஷ்டமே! என்றாலும் இந்தப் பதிவு ஓகே!//

நேதி நேதியால புரினும்ன்னா நானும் உங்க மாதிரிதான் இருக்கேன். அதுக்கு காலம் வரணும். இன்னும் பக்குவப்படணும். யூகேஜில தானே இருக்கேன்!

Kavinaya said...

உதாரணம் நல்லாருக்கு :)

//யூகேஜில தானே இருக்கேன்!//

நான் இப்பதானே பொறந்திருக்கேன் :)