சரி, ஜீவன் முத்தரா இருக்காரு. அடுத்த பிறவி இல்லே. ஆனா இந்த பிறவி கர்மாவ தீர்க்க உலகத்திலே வாழணும். பற்றில்லாம கர்மம் செய்யறாரு. அதனால இந்த நிலை வந்த பிறகு கர்மம் பிடிச்சுக்காது சரிதான். ஆனா பிறக்கறப்பவே ஞானியா பிறக்கலையே! பிறந்ததுலேந்து இந்த பிறவில செஞ்சது? அதோட கர்ம பலன் என்ன ஆகும்? அதெப்படி அது ஒட்டாம போகும்? அது எங்கேயாவது போய் சேரணுமே?
எப்படின்னா ...
பிராரத்த கர்மா சில "நல்ல" விஷயங்களையும் செய்யத்தூண்டும். அதே சமயம் சில "கெட்ட" விஷயங்களையும் செய்யத்தூண்டும்.
அட! இவனெல்லாம் சாமியாரு வேஷம் போட்டுகிட்டு வந்துட்டான். இவனை எனக்கு தெரியாதா? (இப்படி பண்ணான், அப்படி பண்ணான்...) சுத்த பிராடு சார்!.... இந்த ரீதியிலே சிலர் அவரை திட்டிகிட்டு இருப்பாங்க. அவங்க புதுசா கர்மாவால வரக்கூடிய பாவத்தை எல்லாம் சேர்த்து வாங்கிக்கிறங்களாம்!
விஷயம் தெரிஞ்ச சிலர் ஜீவன் முத்தரை பூஜை பண்ணி, போற்றி புண்ணியத்தை எல்லாம் வாங்கிப்பாங்களாம். ஞானி லெவெல்லே அதுவும் பிரச்சினைதானே? பொன் விலங்கு!
அப்ப இருந்த ஒரே கர்மாவான பிராரத்த கர்மாவும் ஜீவன் முத்தரை விட்டு போயிடும்.
103.
சீவன் முத்தர் செய்யும் இருவினை எப்படி நீங்கும்?
பொறுமையாற் பிராரத்தத்தைப் புசிக்குநாட் செய்யுங் கர்மம்
மறுமையிற் றொடர்ந் திடாமன் மாண்டுப்போம் வழியேதென்றால்
சிறியவ ரிகழ்ந்து ஞானி செய்தபா வத்தைக் கொள்வார்
அறிவுளோ ரறிந்து பூசித் தறமெலாங் கைக்கொள்வாரே
மறுமையில்[லாத சீவன் முத்தர்] பொறுமையால் பிராரத்தத்தை புசிக்கும் நாள் [சீவன் முத்தராய் உள்ள போது] செய்யும் கர்மம் [அவர்களை] தொடர்ந்திடாமல் மாண்டுப்போகும் வழி ஏதென்றால், [அவர்களை] சிறியவர் (மூடர்கள்) இகழ்ந்து ஞானி செய்த பாவத்தைக் கொள்வார். அறிவுளோர் (விவேகிகள்) அறிந்து (அவர்கள் தன்மை அறிந்து) பூசித்து அறமெலாம் (புண்ணியங்களை) கைக்கொள்வாரே (ஏற்றுக்கொள்வார்).
தாத்பர்யம்: சீவன் முத்தர் செய்யும் வினைகளின் புண்ணிய பாப பலன்களை விவேகியும் அவிவேகியும் ஏற்பர்.
--
பொறுமையால்- “சுக விஷயம்” வரின் உடனே முன்வந்தும் “துக்க விஷயம்” வரின் பின் தங்கியும் இல்லாது இரண்டையும் சமமாக ஏற்பதால்.. சாரத்தைவிட்டு சக்கையை பார்ப்பது போல மூடர்கள் பிராரத்தத்தால் வரும் அகுணத்தை பார்த்து இகழ்ந்து பாவத்தை கைப்பற்றுவர். ஜலத்தை விட்டு பாலை கொள்ளும் அன்னம் போல் முமுட்சுக்கள் அகுணத்தை விட்டு சொற்பமாக இருந்தாலும் குணத்தைப் பார்த்து சிவ சொரூபமாய் எண்ணி அர்சனையாதி செய்து புண்ணியத்தை கைக்கொள்வர்.
7 comments:
இன்றைய பெரியவர்களுக்கு ஏற்றது இல்லையா திவாண்ணா?.
:-))
அது என்னைக்குமே உண்மையானது. மக்கள் புரிஞ்சுக்கணும்!
///தாத்பர்யம்: சீவன் முத்தர் செய்யும் வினைகளின் புண்ணிய பாப பலன்களை விவேகியும் அவிவேகியும் ஏற்பர்///
சக்தியின் (energy)வெளிப்பாடு மாற்றங்கள் அடையலாம் ஆனால் அழிவதில்லை. அது போல் வினைகளுக்கும் உள்ள சமன்பாட்டை தெளிவாக உணர்த்துகிறது . அருமை. மிக்க நன்றி
வாங்க கபீரன்பரே. இந்த நூலை படிக்கிற போது எனக்கு பெரும் ஆச்சரியம் கொடுத்தது இந்த விஷயம்தான்.!
//அவங்க புதுசா கர்மாவால வரக்கூடிய பாவத்தை எல்லாம் சேர்த்து வாங்கிக்கிறங்களாம்!//
யாராய் இருந்தாலும் இதைத் தடுக்க முடியாது போல! :(((((((((
///தாத்பர்யம்: சீவன் முத்தர் செய்யும் வினைகளின் புண்ணிய பாப பலன்களை விவேகியும் அவிவேகியும் ஏற்பர்///
எல்லாம் எப்படியோ '0' ஆகி தீரணும். ஹ்ம்... :(
ஆமாம் உண்மைதான் ஜீரோ ஆகி தீராம கடை தேற முடியாது.
Post a Comment