மண் பானை ஒண்ணு இருந்தது. அது இருந்த வரைக்கும் அதால பிரிக்கப்பட்டு கட ஆகாசம் ன்னு ஒண்ணு இருந்தது. மாமியாரோ மருமகளோ யாரோ ஒத்தர் அதை போட்டு உடச்சுட்டாங்க. அப்ப அது காணாம போச்சு. "காணாம" ன்னா வெளியே இருக்கிற மகா ஆகாசத்தோட ஒண்ணா போச்சு.
சீவன் முக்தருக்கு ஒட்டிகிட்டு இருந்தது உடம்புதான்.
இந்த உபாதி போன உடனே ஆதி/ அந்தம்/ நடு ன்னும் உள்ளே வெளியேன்னும் ஒண்ணுமில்லாத கைவல்லிய நிலைக்கு போய் அங்கேயே எப்பவும் இருப்பார்.
106.
விதேக முத்தன் இயல்பு:
கடமெனு முபாதிபோனாற் ககனமொன் றானார்போல
வுடலெனு முபாதி போன வுத்தரஞ் சீவன்முத்தர்
அடிமுடி நடுவுமின்றி யகம்புற மின்றிநின்ற
படிதிகழ் விதேகமுத்திப் பதமடைந் திருப்பரென்றும்
கடம் (குடம்) எனும் உபாதி போனால் ககனம் (ஆகாயம்) ஒன்று ஆனார் போல உடலெனும் உபாதி போன உத்தரம் (பிறகு) சீவன் முத்தர், அடி முடி நடுவும் இன்றி அகம் புறம் இன்றி நின்றபடி திகழ் (இருந்தபடி விளங்குகின்ற) விதேக முத்திப் பதம் அடைந்து என்றும் இருப்பர்.
--
எங்கும் பரவிய ஆகாயம் குட ஆகாயம். மகா ஆகாயம் என குடத்தால் மட்டுமே பிரிக்கப்படுகிறது. குடம் உடைந்து போன அந்த வினாடியே எப்படி அந்த இரண்டு ஆகாயங்களும் ஒன்றாகி விடுமோ அப்படி உடல் நீங்கிய அந்த வினாடியே சீவன் முத்தரும் பரி பூரணமான பிரமமும் ஒன்றாவர்கள்.
"மறு பிறப்புன்னு ஒண்ணும் கிடையாது; ஆன்மா பற்றி இருந்த உடம்பு போச்சுன்னா வந்த இடமான பரமாத்மாவோட கலந்துடும்" ன்னு ஒரு வாதம் உண்டு. இதை சாத்திரங்கள் தப்புன்னு நிரூபிச்சு இருக்கு.
இதை உண்மைன்னு ஒத்துண்டா கடவுள் இல்லை ன்னு சொல்லனும். அல்லது கடவுள் செய்கிறது அநியாயம் ன்னு சொல்லணும். ஏன்னா எல்லாரும் ஒரே மாதிரி இல்லை. சிலர் புத்திசாலியாவும் சிலர் என்னை மாதிரி டம்மியாவும் பிறந்து இருக்காங்க. சிலர் பணக்கார குடும்பத்திலேயும் சிலர் ஏழ்மையிலேயும் பிறந்து இருக்காங்க. இப்படி எக்க சக்கமா சொல்லிட்டே போகலாம் இல்லியா?
இப்ப பிறந்து இருக்கோம். அதனால முன்னே ஒரு ஜன்மம் இருந்து இருக்கணும். அதுக்கு முன்னே ஒண்ணு இருந்து இருக்கணும். இப்படியே அநாதியா.... போன பிரலயத்தையும் தாண்டி பின்னாலே போகும். ஒரு ஜன்மத்தில செய்கிற கர்மா அடுத்த நாலு ஜன்மத்துக்கு வித்தா இருக்காம். அதாவது ஒரு ஜன்மத்தில செய்கிற பாப கர்மாவுக்கு அடுத்த நாலு ஜன்மாவுக்கு அனுபவிச்சு தீக்கணும். அதனால யாருக்கு பிராரப்த கர்மா இந்த ஜன்மத்தில அனுபவிச்சு தீர்க்கிறாப் போல இல்லையோ அவங்களுக்கு ஞானம் வராது. மூணு ஜன்மங்கள்லே ஏறக்குறைய எல்லாம் அனுபவிச்சு தீர்த்து புதுசா ஒண்ணும் ஒட்டிக்காம இருந்தாதான் ஞானம் உண்டாகும்.
3 comments:
//ஒரு ஜன்மத்தில செய்கிற கர்மா அடுத்த நாலு ஜன்மத்துக்கு வித்தா இருக்காம். அதாவது ஒரு ஜன்மத்தில செய்கிற பாப கர்மாவுக்கு அடுத்த நாலு ஜன்மாவுக்கு அனுபவிச்சு தீக்கணும். அதனால யாருக்கு பிராரப்த கர்மா இந்த ஜன்மத்தில அனுபவிச்சு தீர்க்கிறாப் போல இல்லையோ அவங்களுக்கு ஞானம் வராது. மூணு ஜன்மங்கள்லே ஏறக்குறைய எல்லாம் அனுபவிச்சு தீர்த்து புதுசா ஒண்ணும் ஒட்டிக்காம இருந்தாதான் ஞானம் உண்டாகும். //
இப்படி பயமுடுத்துறீங்களே?....
//என்னை மாதிரி டம்மியாவும் //
இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல?
இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல?//
ஹிஹி தாங்கீஸ்!
சும்மா நாலு அடிதானே எடுத்து வெச்சு இருக்கேன்? போக வேண்டிய தூரம் பல கோடி மைல்கள்.
Post a Comment