குரு பதில் சொல்கிறார்.
அப்பனே பரப்பிரம்ம சொரூபமானது பெயர், வடிவம், கறுப்பு, சிவப்புன்னு நிறம், நெட்டை குட்டை பருமன் சன்னம் ன்னு எந்த இலட்சணமும் உள்ளது இல்லை. பஞ்சபூதங்களிலே ஒண்ணோ ரெண்டோ இல்லை. அதனால கரணங்களாலயாவாது இந்திரியங்களாலேயாவது அறிகிற வஸ்து இல்லை. இதனால அது பிரத்யட்சம், அநுமானம், உபமானம் முதலான பிரமாணங்களால அகப்படாது. அதனாலதான் ப்ரம்மம் வாக்குக்கு எட்டாதுன்னு சொன்னேன்.
7. பிரமம் வாக்குக்கு அகோசரமாயும் கோசரமாயும் இருக்குமோ?
மற்றைமுப் பிரணமா னத்தால் வத்துநி ண்ணயம்கூ டாதே
உற்றதோர் விடயம் பூத முபயமன் றாத லாலே
குற்றமாம் குணவிசேடங் கூடாம லிருக்கை யாலே
இற்றது வாக்குக்கெட்டா தென்பது மறிவாய் நீயே
மற்றை முப் (=மூன்று- பிரத்யட்சம், அநுமானம், உபமானம்) பிரணமானத்தால் வத்து (வஸ்து- பிரம்ஹ) நிண்ணயம் கூடாதே (ஆகாது). உற்றதோர் விடயம் (இந்திரியங்களுக்கு சம்பந்தப்பட்டது அல்ல) பூதம் (சீவன்) உபயமன்று (த்வைதம் அல்ல) ஆதலாலே, குற்றமாம் குணவிசேடம் கூடாமல் (பொருந்தாமல்) இருக்கையாலே இற்றது (இப்பிரகாரமாக அந்த பிரமம்) வாக்குக்கு எட்டாது என்பதும் அறிவாய் நீயே.
----------------
முன்னே வெள்ள வடி நீர் வாய்க்கால். இப்ப பாதாள சாக்கடை... சகட்டு மேனிக்கு டெலிபோன் கம்பியை வெட்டி போடறாங்க.....ம்ம்ம்... நல்லது செய்கிறதெல்லாம் இந்த கலியிலே சிரம சாத்தியம்தான். தாமதத்திற்கு மன்னிக்க.
2 comments:
நமக்குத் தோணும் சந்தேகங்களை எல்லாம் சிஷ்யன் வாயிலாவே கேட்டாச்சு, பதிலும் கொஞ்சம் கொஞ்சமாப் புரிய ஆரம்பிக்கிறது.
திறக்க நேரம் எடுக்கிறதே??? இதே மாதிரி சின்னப் பதிவா இருந்தா புரிஞ்சுக்க என் மாதிரி ஆட்களுக்குச் சிரமம் இல்லாமல் இருக்கும். நன்றி.
Post a Comment