Pages

Monday, May 4, 2009

சீனாவிலே ஒரு புத்த துறவி...



// ஆசையாத்தான் இருக்கு இப்படி சீவன் முக்தர் ஆக.
அதுக்கெல்லாம் ஒரு அம்சம் வேணாமா?
இப்படி இருந்தாப் பைத்தியக்காரப் பட்டம்
வந்துரும், இந்தக் கலிகாலத்தில்.//

இப்படி ஒரு பின்னூட்டம் போட்டாங்களா? அவங்களுக்கு ஒரு கதை சொல்லறேன்னு சொல்லி இருந்தேன்.

இதோ:

சீனாவிலே ஒரு புத்த துறவி. கிராமத்திலே நல்ல பேர் வாங்கி இருந்தார். அவருக்கு ஒரு நாள் ஒரு பிரச்சினை வந்தது. அந்த ஊரை சேர்ந்த ஒத்தர் திடுதிப்புன்னு வந்து "சாமி! நாங்க அவசரமா வேற ஊருக்கு போக வேண்டி இருக்கு. இந்த பொண்ணை கூப்பிட்டுகிட்டு போக முடியாத சூழ்நிலை. இப்பதான்+2 பரீட்சை நடக்குது. உங்க பொறுப்பிலே விட்டுட்டு போறேன். கொஞ்சம் பாத்துக்குங்கன்னார். துறவி "அடடா! நானோ பிரம்மசரியம் இருக்கறவன். எப்படி ஒரு கன்னிப்பெண்ணை பாத்துகிறது? நான் சரியா இருந்தாலும் ஊர் என்ன சொல்லும்?” ன்னார்.

வந்தவர் "சாமி, ஊரைப்பத்தி எனக்கு கவலை இல்லை. உங்களை நான் நம்பறேன். அது போதும் ன்னார்; பொண்ணை விட்டுட்டு போயிட்டார். முத நாள் இரவு துறவி வெளியெ கடும் குளிரிலே படுக்க வேண்டியதாச்சு. உடம்பெல்லாம் விறைச்சு போச்சு. அடுத்த நாள் "என்னடா இது! எவ்வளவு நாள் இப்படி காலம் தள்ள முடியும்? உடம்பை வெச்சுதானே சித்திரம் எழுதணும். இன்னும் இந்த உடம்புன்னு நினைப்பெல்லாம் இருக்கே! இதை காப்பாத்திக்கணுமே! என்ன பண்ணறது"ன்னு யோசிச்சார்.

தன் ஆசிரியர்கிட்டே போய் "என்ன செய்ய?" ன்னு கேட்டார். அவர் சிரிச்சுகிட்டே அரை நாள் பயணத்துலே இருந்த ஒரு ஊர் பேர் சொல்லி அங்கே இந்த பேர்ல ஒத்தர் இருக்கார். அவரை போய் பாருன்னார். துறவியும் "அம்மா பத்திரமா இரு. அடுத்த ஊர் போயிட்டு சாயந்திரம் வந்துடறேன்" னார். கிளம்பி அந்த ஊருக்கு போனார். பேரை சொல்லி விசாரிச்சார். பேரை கேட்டதுமே ஊர்காரங்க முகத்தை சுளிச்சாங்க. "அவனா? இப்படீஈ போ" ன்னு வழிகாட்டினாங்க. துறவிக்கு ஆச்சரியம்! "என்னடா இது! அவருக்கு இங்கே ஒண்ணும் மதிப்பு இல்லையா? அப்படிப்பட்ட ஒத்தர்கிட்டேயா நம்ம வாத்தியார் அனுப்பி இருக்கார்?"ன்னு நினைச்சுண்டார். விசாரிச்சு கொண்டே அவர் வீட்டுகிட்டே போயாச்சு.

கடசியா ஒத்தரை விசாரிச்சப்ப அவரும் முகத்தை சுளிச்சுகிட்டே "அதோ பாரு! அவன்தான்"னு சொன்னார். காட்டின நபரை பாத்தா அந்த நபரும் ஒரு பிள்ளையும் வீட்டுக்கு வெளியே உக்காந்து டம்ளர் டம்ளரா ஏதோ குடிக்கிறாங்க! பக்கத்திலே மது குடுவை வேற. "இதென்னடா இது?" ன்னார் துறவி. வழி காட்டியவர் "ஆமா. அப்பனுக்கும் பிள்ளைக்கும் இதே வேலை. காலைல எழுந்தா ராத்திரி வரை குடிச்சுகிட்டே இருக்காங்க" ன்னுட்டுபோயிட்டார்.

துறவி என்னடா செய்கிறது ன்னு யோசிச்சார். அப்புறம் வாத்தியார் சொல்லி இருக்காரே; போய் கேட்டுடலாம் ன்னு கிட்டே போனார். கிட்டே போனா சாராய வாசனை கொஞ்சம் கூட இல்லை. வெறும் தண்ணியைத்தான் குடிக்கிறாங்க ன்னு தெரிஞ்சது! ஏன் இப்படி ஏமாத்தறீங்க ன்னார். 'குடியர்' பதில்சொன்னார்: அப்பதான் பொண்ணை பாத்துக்க ன்னு யாரும் என் கிட்ட வர மாட்டாங்க!



9 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

தத்தாத்ரேயர் சரித்ரத்திலேயே கார்த்த வீர்யார்ஜுனன் அவரைத் தேடிப் போன போது,
இப்படிக் குடி வெறியுடன் ஒரு பெண்ணோடு இருந்த கதை வருகிறது.

இதுக்காக மெனக்கெட்டு, சீனாவுக்கெல்லாம் போய், கதை கேட்டு வரணுமா என்ன:-))

jokes apart,
திருவாரூரில் மௌன குரு சாமிகள் [தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள்] சரித்ரத்திலும் இப்படி ஒரு கதை வரும்.

Geetha Sambasivam said...

'//குடியர்' பதில்சொன்னார்: அப்பதான் பொண்ணை பாத்துக்க ன்னு யாரும் என் கிட்ட வர மாட்டாங்க!//

கொஞ்சம் கொங்கணவர் டைப்பிலே இருந்தாலும் கதை நல்லா இருக்கு. நன்னிங்கோ!

திவாண்ணா said...

//இதுக்காக மெனக்கெட்டு, சீனாவுக்கெல்லாம் போய், கதை கேட்டு வரணுமா என்ன:-))//

சீனா ஒண்ணும் போகலை. வீட்டிலே சோபாவிலே உக்காந்து கேட்டேன்.
தென்கச்சியார் சொன்னார்.

jeevagv said...

கதை நல்லா இருக்கு!
சமயத்துக்கு தகுந்ததுபோல
வேஷம் கட்ட வேண்டியதுதான் போல!

மெளலி (மதுரையம்பதி) said...

கதை நல்லாத்தான் இருக்கு. கிருஷ்ண மூர்த்தி சார் சொன்ன கதையும் படிச்சிருக்கேன்....

திவாண்ணா said...

கிருஷ்ணா அண்ணா, கதைகளை பகிர்ந்து கொள்ளலாமே!
@ஜீவா
வாங்க வாங்க! ரொம்ப நாள் கழிச்சு வரா மாதிரி இருக்கு!
இந்த காலத்திலே வேஷம் கட்டத்தான் வேணும். இல்லைனா எனக்கு இது வேணும் அது வேணும்ன்னு மொய்ச்சுடுவாங்களே!

கிருஷ்ண மூர்த்தி S said...

நெரூர் போய் வர்றதால, அவதூத சந்யாசிகளைப் பத்தித் தெரிஞ்சிருக்குமேன்னு தான் கதையெல்லாம் ரொம்பவுடலை :-)

மைசூர் தத்தாச்ரமம் வெளியீடான தத்த சரிதம் தமிழிலேயே கிடைக்கிறது. தவிர கன்னடத்தில் எடுக்கப் பட்டு தமிழில் டப் செய்யப்பட்ட படமும் ஒன்று உண்டு. புத்தகம் அனுப்பவா, இல்ல கதை மட்டும் போதுமா?

திருவாரூர் தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள், சமீப காலத்தில், வாழ்ந்த மகான்.

திருவாரூர்க் குளக் கரையில், மௌந குருசாமி மடம், இருக்கிறது, போய்ச் சேவிக்கும் ஆசை இருக்கிறது, இதுவரை, சந்தர்ப்பம் அமையவில்லை.

திவாண்ணா said...

//நெரூர் போய் வர்றதால, அவதூத சந்யாசிகளைப் பத்தித் தெரிஞ்சிருக்குமேன்னு தான் கதையெல்லாம் ரொம்பவுடலை :-)//

பையர் அங்கே இருக்கிறதாலே போய் வரேன். மத்தடிக்கு விஷய ஞானம் எல்லாம் ஒண்ணும் இல்லை.

//மைசூர் தத்தாச்ரமம் வெளியீடான தத்த சரிதம் தமிழிலேயே கிடைக்கிறது. தவிர கன்னடத்தில் எடுக்கப் பட்டு தமிழில் டப் செய்யப்பட்ட படமும் ஒன்று உண்டு. புத்தகம் அனுப்பவா, இல்ல கதை மட்டும் போதுமா?//

தத்த சரிதமா? படிச்சதில்லை.

கதைகள் போதும்!

Kavinaya said...

நல்லாதான் இருக்கு கதை.