Friday, April 25, 2008
குழந்தைகள் வளர்ப்பு
இப்போதெல்லாம் குழந்தைகள் வளர்ப்பில் நாம் போதுமான கவனம் கொடுக்கவில்லையோ என்று தோன்றுகிறது. அவர்கள் உடம்பு நல்லாயிருக்கவும் அறிவு படிப்பு மூலமா வளரவும் நிறையவே முயற்சி எடுக்கிறோம். இதுக்கெல்லாம் செலவு செய்ய நாம் தயங்கறது இல்லை. ஆனால் அவங்களோட ஆன்மீக வளர்ச்சிக்கு நாம் ஒண்ணும் செய்வதில்லை. இதை உறுதி செய்துக்க இருக்கவே இருக்கின்றன பள்ளிகள். நாம் கோவிலுக்கு கிளம்பினாலும் ஒரு உபன்யாசம் கேட்க கிளம்பினாலும் அவர்களை விட்டுவிட்டு போகிறோம். காரணம் அவர்கள் நிறைய படிக்க வேண்டி இருக்கிறது; வீட்டுப்பாடம் எழுத வேண்டி இருக்கிறது. அல்லது அவர்களுக்கு பிடிக்காது. பள்ளிக்கு ஆரம்ப நாள் போகும் போது சிரித்துக்கொண்டு போனார்களா? இல்லை இப்பதான் சந்தோஷமாக போறாங்களா? நம்மை நாமே ஏமாத்திக்க இன்னொரு விஷயம் வேற இருக்கிறது. அவங்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்கிறார்கள். எந்த வயசில்?
தானாக முடிவு எடுக்கிற வயசில் இதற்கெல்லாம் நேரம் இருக்காது. பணத்தின் பின்னே ஓடவே நேரம் போதாது. அப்படியே இருந்தாலும் மனது அதில் போகாது. உலக சுகங்களை நாடியே ஓடும். அதனால் சிறு வயதிலேயே அவர்களை இந்த பக்கம் திருப்பிவிட்டு தினசரி கொஞ்ச நேரம் இதில் மனசை செலுத்த வைக்க வேண்டும். நாம் செய்யும் பூஜை முதலிய கர்மாக்களின் போது அவர்களை சிறு வயதிலிருந்து பக்கத்திலேயே வைத்துக்கொள்ளலாம். அப்போது அது இயல்பாக பழகிவிடும். அந்த சமயம் அவர்களை தொந்திரவு என்று நினைத்து விலக்கி வைத்தால் பின்னால் இப்படி செய் என்று சொல்லும்போது ஏதோ நாம் அவர்கள் சுதந்திரத்தை பறிப்பதாக நினைப்பார்கள். அவர்கள் பெரியவர்களான பின் வேண்டுமானால் நம்பிக்கை இல்லாது போனால் விட்டுவிட்டு போகட்டும். நாம் சரியாக வளர்த்தால் அதற்கு தேவையே இருக்காது. ஆன்மீகத்தில் ருசி வந்து அதன் பலனை அனுபவித்ததால் அது நிச்சயம் திடப்படும்.
Labels:
பொது
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
//அதனால் சிறு வயதிலேயே அவர்களை இந்த பக்கம் திருப்பிவிட்டு தினசரி கொஞ்ச நேரம் இதில் மனசை செலுத்த வைக்க வேண்டும். நாம் செய்யும் பூஜை முதலிய கர்மாக்களின் போது அவர்களை சிறு வயதிலிருந்து பக்கத்திலேயே வைத்துக்கொள்ளலாம். அப்போது அது இயல்பாக பழகிவிடும்//
மிகச்சரி. இப்படித்தான் எனது இல்லத்திலும் பழக்கியிருக்காங்க. :-)
உண்மை, ஆணோ, பெண்ணோ, 15 வயது வரை பெற்றோர் கட்டுப்பாட்டில் அவர்கள் காட்டும் வழியில் நடந்தால், பின்னால் அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும், மாற மாட்டார்கள், மனம் அதற்குள் உறுதிப்பட்டுவிடும், இதற்குப் பெற்றோருக்கு ஓரளவாவது ஆன்மீக ஈடுபாடு, இது சரியில்லை, இறை உணர்வு இருக்கணும், அதை அவங்க பெற்றோர் அவங்களுக்குக் கொடுத்திருக்கணும், ஆகவே இது வழி, வழியாக வர வேண்டிய ஒன்றோ????????????
என்றாலும் முன்பெல்லாம் பள்ளிகளில், நற்போதனை வகுப்பு அல்லது moral period என்ற ஒன்று இருந்தது, அதில் தேர்வுகளும் நடக்கும், இப்போதோ பல பள்ளிகளிலும், மத்திய அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் தவிர, கடவுள் வாழ்த்தே கிடையாதே?
அக்கா,
1. வழி வழியா வந்திருந்தா சந்தோஷம். இல்லைனா எப்ப நமக்கு இது புரியுதோ அப்ப ஆரம்பிக்கனும் இல்லையா?
2. சரியா சொன்னீங்க! வீடு /பள்ளி இவற்றிலோ அல்லது ஏதேனும் சிறப்பு ஏற்பாடோ இல்லாம பண்பு பதிவுகள் இல்லையே!
பள்ளிகள்ல இப்ப எதிர்பார்க்கிறது கஷ்டம்தான். இந்த ஸ்கூல்ல படிச்சா நல்ல மார்க் வருமான்னு தானே எதிர்பார்த்து சேர்க்கிறோம்? நல்ல குழந்தையா வளருமான்னா பார்க்கிறோம்? அதனால வீட்டுல நாம் செய்ய வேண்டியதை செய்வோம்.
என்னோட பின்னூட்டம் என்ன ஆச்சு திவா சார்?.....
மிகவும் தேவையான கருத்து - நம்மால் ஆனாதை நாம் செய்ய வேண்டும்.
@ மதுரையம்பதி
மன்னிக்கணும் வலை பிரச்சினை.
பப்ளிஷ் சொல்லியும் போகாம இருந்துவிட்டது
@ ஜீவா
நன்றி
ஆமாம் என்ன விடிகாலை வலை? வேற நாட்டு ஊர்ல இருக்கீங்களா
வந்தேன் வந்தேன்! சரியான டாபிக், அதுவும் எனக்கு சரியான நேரத்தில். :))
ப்ரஹலாதன் கதை ஒரு சிறந்த உதாரணம்.
அபிமன்யூ கதை கர்ப்ப காலத்தில் ஒரு தாய்க்கு உள்ள கடமையை சுட்டி காட்டும் உதாரணம்.
சக்ர வியூகத்தை உடைக்கும் யுக்த்தியை பார்த்தன் சொல்லும் போது சுபத்ரை மட்டும் தூங்காமல் இருந்து இருந்தால் பாரத கதை எப்படி இருந்திருக்கும்? :p
என் சின்ன வயசில் (இப்பவும் எனக்கு சின்ன வயது தான்) வீட்டுபாடம் முடித்து விட்டு தெருவில் உபன்யாசம், பித்துக்குளி முருகதாஸ் நாம சங்கீர்த்தன பஜனை எல்லாம் கேட்ட ஞாபகம் வருகிறது.
கதையும் நல்லா இருக்கும், கடைசியில் குடுக்கும் ப்ரசாதமும் தான். :D
படிக்க விட்டு போன பதிவுகள் எல்லாம் படிச்சாச்சு!
ஆனால் இதுக்கு மட்டும் தான் பின்னூட்டம். :)
@ அம்பி,
உங்க ஆன்மீக நாட்டத்துக்கு இப்படி ஒரு பிண்ணனி இருக்கா! நல்லது!
ஜீவா வெளி நாட்டுல இருக்கார்ன்னு தெரிய வந்தது! அப்ப விடிகாலை இல்லை, மாலை போலிருக்கு!
இதுவரை தெரியாது.
:-)
Post a Comment