Wednesday, January 28, 2009
பட்டாம்பூச்சி
நேத்து ஒரு சின்ன இன்ப அதிர்ச்சி!
கிருத்திகா அக்கா பட்டாம்பூச்சி விருது அனுப்பி இருந்தாங்க. அவங்களே ¨இது தொந்தரவோ சந்தோஷமோ தெரியாது ஆனாலும் என் பங்களிப்பு. இங்கு சென்று காணவும்.¨ அப்படின்னு எழுதினாங்க.
அவங்க வலைப்பதிவிலே ¨திவா -எந்த திரட்டியிலும் தன்னை இணைத்துக்கொள்ளாமல், பின்னூட்டங்களுக்கான உழைப்பின்றி கடமையைச்செய் பலனை எதிர்பாராதே எனும் கீதா வாக்கியத்திற்கிணங்க பல சத்தியங்களை தெளிவுபடுத்தும் பதிவுகள்.¨
அப்படின்னு எழுதி இருக்காங்க. இதுக்கு நான் அர்ஹனா என்கிறது கொஞ்சம் சந்தேகம்.
சாதாரணமா இந்த டேக் (tag) விளையாட்டு கொஞ்சம் பிரச்சினையானது. சிலருக்கு நாமும் அனுப்பினா மத்தவங்க என்ன நினைப்பாங்களோன்னு மனசிலே தோணித்து.
இருந்தாலும் கிருத்திகா அக்கா சொன்ன ¨விருதென்று சொல்லுவதை விட நட்புக்கான அங்கீகாரம் என்று கருதுவதே எனக்கு மிகவும் உவப்பானதாக இருக்கிறது.¨ என்கிற வரிகள் மனசை நெகிழ வைத்து விட்டது.
என் வழிகாட்டி வலையில நான் செலவழிக்கிற நேரத்தை மட்டுப்படுத்தின பின்னே நான் படிக்கிற வலைப்பூக்களை ஏற்கெனெவே குறைச்சாச்சு. சரி ரேண்டமா சிலருக்கு அனுப்பலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். இதனால மத்தவங்களை நான் மதிக்கலைன்னோ இல்லை அவங்க வலைப்பூ coolest one அப்படின்னு நினைக்கலைனோ இல்லை. அவங்க ¨அப்பாடா நமக்கு வேலை மிச்சம்¨ ன்னு பெருமூச்சு விட்டுக்கலாம்.
யார் யார்ன்னு சொல்லும் முன்னே...
அட, இந்த இழை எங்க ஆரம்பிச்சதுன்னு ஒரு க்யூரியாசிடி. அதுக்கு கூகுளாரை கூப்பிட்டா 14 பக்கத்துக்கு ¨பட்டாம்பூச்சி விருது¨ விடைகள் கிடைச்சது. அதிலேந்து என்னத்தை கண்டுபிடிக்க?
வேற வழி இல்லை. பதிவுகளை பின் பக்கமா தொடர்ந்து போகணும். ஏற்கெனெவே இணையம் நல்லா இல்லையேன்னு நினைச்சா...
இணையத்துக்கு திடீர்ன்னு உடம்பு சரி இல்லாம போயிடுத்து. சும்மா பற பறன்னு உந்தீ பறக்க ஆரம்பிச்சது. சரி, நாராயணான்னு கொஞ்சம் க்ளிக்கினேன். (அம்பி இப்படி க்ளிக் குன்னு எழுத கூடாதா? கிளிக்குக்கு ன்னு எழுத போய் எவ்வளோ பேர் ஏமாந்து போயிட்டாங்க? ;-)
கண்டு பிடிச்சது கீழே:
கிருத்திகா அவங்களுக்கு அனுப்பினது
பாசமலர் -->
திவ்யா -->
வித்யா சங்கருக்கும்[Gils], மற்றும் *பிரபுவிற்கும், இரவீ
கில்ஸ் பதிவுல விவரம் இல்லை. சரின்னு பிரபு பக்கம் போய் அப்புறம்..
1. *குந்தவை 2.தமிழ் தோழி 3.தாரணிபிரியா
மோகனுக்கு
நைஜீரியா நாயகன் அண்ணன் அணிமா
அப்பாடா இங்க கொஞ்சம் உதவி கிடைச்சது. அவரும் என்னை மாதிரியே தேடி ஒரு பட்டியல் போட்டு இருந்தார். அப்படியே G3...
அணிமா <----
ராகவன் <----
ரம்யா <----
பூர்ணிமா <----
விஜய் <-----
திவ்ய பிரியா <------
G3(பிரவாகம் )--->
கார்த்தி/mgnithi--->
Gils/Shanki---->
பிரியா -->
Kartz---->
Tusharmargal--->
Akansha---->
Infinity---->
Simple Elegant Girl ---- >
Chronic Chick Talk ----->
Empty Streets----->
The Blog Reviewer--->
biotecK---->
KisAhberuang---->
blogscope >
இவர்தான் ஆரம்பிச்சதோன்னு ஒரு சந்தேகத்தோட முடிச்சு இருந்தார்!
இந்த பட்டியல் எவ்வளொ சரின்னு தெரியலை.
சரி பட்டாம்பூச்சி மேலே பறக்க என்னால ஆனது!
ரேண்டம் தேர்விலே முதல்ல கீதா அக்கா
அட, என்ன பண்ணறது? முடிவை மாத்திக்க முடியாதே? இவங்க பதிவுகள் நான் வலைப்பூவுக்கு புதுசா இருந்தப்ப படிச்ச பதிவுகள்ள ஒண்ணு. அபி அப்பா ¨பொங்கள்¨ பதிவு போடப்போய் படிச்ச இவங்க கண்ணாடி உடஞ்சுபோனது பத்தி எழுதி - சிரிப்பா வந்தது. அப்பலேந்து படிக்க ஆரம்பிச்சது.
வடுவூர் குமார். இவரோடதுதான் முதல் முதல் படிச்ச பதிவு. உபுண்டு வழியா போய் இவர் அது பத்தி பதிவு போட்டதை பாத்து, இவர் கட்டட விஷயங்கள் எழுத அதுல எனக்கு ஒரு ஆர்வம் இருந்ததால.... இப்ப துபாய் போய் அங்கேந்து பதியறார்.
கடைசியா கோமா அக்கா. படம் எடுக்க ஒரு ஆர்வம் வந்து பிட் போட்டோ போட்டிகளில கலந்து கொள்ளப்போய் அங்கே அறிமுகம் ஆகி இவங்க ஹா ஹா ஹாஸ்யம் எழுத- நான் படிக்க ஆரம்பிச்சுட்டேன். என் பெரியப்பா சொல்லுவார் யார் நகைச்சுவையை ரசிக்கலையோ அவங்களுக்கு ஏற்கெனெவே நல்ல தண்டனை கிடைச்சாச்சு!
3 பேரும் கீழே இருக்கிற விதிகளை கடைபிடிக்க பாருங்க. இல்லைனாலும் நான் தப்பா நினைக்க மாட்டேன். :-)
நல்லது, கடைசியா
இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:
1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. 3 அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)
Labels:
பட்டாம்பூச்சி
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
நல்லாப் பறக்க விட்டுட்டீங்க! :)))))
நன்றி திவா ஆனா 3 பேரை பிடிப்பது கொஞ்சம் கஷ்டமான வேலை...எனக்கு. :-(
முயற்சிக்கிறேன்.
பட்டாம்பூச்சி விருதா? சபாஷ், கில்ஸ் எனக்கு குடுத்தார். நான் பத்ரமா வீட்ல வெச்சுகிட்டேன். :))
//அம்பி இப்படி க்ளிக் குன்னு எழுத கூடாதா? கிளிக்குக்கு ன்னு எழுத போய் எவ்வளோ பேர் ஏமாந்து போயிட்டாங்க?//
ஒற்றெழுத்துக்கள் வார்த்தையின் முதலில் வரகூடாதுன்னு எங்க தமிழாசிரியை சொன்னதை நியாபகம் வெச்சு இருக்கேனாக்கும். :))
முயற்சி பண்ணுங்க குமார். முடியாட்டா பரவாயில்லே!
@ அம்பி
இந்த குழந்தையை இங்கே பாத்து எவ்வளொ நாள் ஆச்சு!
//நான் பத்ரமா வீட்ல வெச்சுகிட்டேன்.//
சூரியனுக்கு வேடிக்கை காட்டவா? :-))
//வரகூடாது//
ஆனா சந்திதான் ஞாபகம் இல்லே, இல்லையா? :-))
சரி சரி, தங்கமணி அண்ட் கோ பங்களூர் வந்தாச்சா இல்லையா?
வாங்கினவங்களுக்கும் கொடுத்தவருக்கும் வாழ்த்துகள் :)
டாங்கீஸ்! தேங்க்ஸ் !
இந்த இடத்திலே திடீர்ன்னு tranliteration வசதி வருது போகுது.:-))
ஒண்ணும் புரியலே!
//இந்த இடத்திலே திடீர்ன்னு tranliteration வசதி வருது போகுது.:-))
ஒண்ணும் புரியலே!//
hihihihi, jollyyaga irukke!!!!!!!
Post a Comment