இப்படியாகத்தானே பரபிரம்மத்தோட சாயை பலவிதமா பரிணமித்து நாம காண்கிற இந்த உலகங்களாயும் ஜீவர்களாயும் ஆயிடுத்து!
இப்படி பார்க்கிற எல்லாத்தையும் மாயைதான் ன்னு புரிஞ்சவன் ஞானியா ஆவான். சும்மா தியரில இல்லை. அப்படி இருந்தா எத்தனையோ பேர் ஞானிகள் ஆகி இருப்பாங்க. அனுபவத்துக்கு வரணும்.
அப வாதம் என்னன்னா மாயையை நீக்குகிறது.
அரைகுறை இருட்டிலே போய் கொண்டு இருக்கிறோம். முன்னே ஆர்காட் உதவி இல்லாமலே அப்படி எல்லாம் இருந்தது. போகிற வழியிலே ஏதோ நீளமா உருண்டையா கிடக்கு. பாம்புன்னு நினைச்சு பயந்துக்கிறோம். நம்மிலே யாரோ ஒத்தர் கொஞ்சம் தைரியசாலி. அவர் கிட்டே போய் பாத்துட்டு ¨அட! இது பாம்பு இல்லைப்பா வெறும் கயிறு¨ என்கிறார்.
அவர் அப்படி சொன்ன பிறகு நமக்கும் ¨அட! ஆமாம்; கயிறுதான்¨ ன்னு தெரியறது.
அதே போல போய் கொண்டு இருக்கிறப்போ ஊருக்கு வழி சந்தேகமா இருக்கு. அதோ ஒரு ஆசாமி நிக்கிறானே அவனை வழி கேட்கலாம் ன்னு ¨ஓய், ஊருக்கு வழி எங்கே?¨ ன்னு கேக்கிறோம். அவரோ பதில் சொல்கிறாப்பல இல்லை. ஓ, செவிடு போல இருக்கு ன்னு நினைக்கிறோம். ஆனா இன்னும் கொஞ்சம் கிட்டே போன பிறகு ¨அட! இது மரம். யாரோ மேல் மரத்தை வெட்டி போட்டு அடி மரத்தை மட்டும் விட்டு வெச்சு இருக்காங்க¨ ன்னு புரிஞ்சுக்கிறோம்.
பல சமயம் மயக்கம் நம்மகிட்டேதான் இருக்கு. தெளிவா பாக்க முடியும் போது விஷயம் சரியா புரியுது.
கனவு காண்கிறோம். திடுக்குன்னு எழுந்துக்கிறோம்.
அட இவ்வளோ நேரம் கண்டது எல்லாம் கனவா? அப்படின்னு இப்ப தோணுது. ஆனா கனவு காண்கிற வரை இது கனவுன்னு புரியலை.
இப்படி தெளிவா ஆகிறாப்போல
இந்த உலகங்கள் எல்லாம் இல்லை; ப்ரம்மம் ஒண்ணுதான் இருக்கு ன்னு தெளிவதே அபவாதம். இதுக்கு சாதனமா இருக்கிறது குருவோட உபதேசமும் சாத்திர நூல்களும்.
ஆசாரியன் சொல்லைக்கேட்டு அவர் உபதேசப்படி எல்லாம் செய்து வந்து அவர் உபதேசம் செய்த மந்திரத்தை உருப்போட்டு சிந்தனை பண்ணி, விளைகிற சந்தேகங்களை சாத்திர நூல்களைபடிச்சும் தேவையானா ஆசாரியன் கிட்டே விளக்கம் கேட்டும் -
¨அட! இந்த உலகங்கள் எல்லாம் இல்லை; பஞ்ச பூதங்களும் இல்லை. எல்லாம் எப்பவும் இருக்கக்கூடிய பிரமம் ஒண்ணே!¨ ன்னு தெளிவதுதான் அபவாதம்.
46.
அதிட்டானத்தை தவிர ஆரோபமில்லை என அபவாத இலக்கணம் கூறல்:
அரவன்று கயிரென்றாற் போலாளன்றுதறி யென்றாற்போல்
குரவன்சொல் லுபதேசத்தாற் கூறுநூலொளி யைக்கொண்டு
புரமன்று புவனமன்று பூதங்களன்று ஞானத்
திரமென்னும் பிரமமென்று தெளிவதே யபவாதங்காண்
அரவு (பாம்பு) அன்று, கயிறு என்றால் போல்; ஆளன்று தறி (மரம்) என்றாற் போல், குரவன் சொல்லும் உபதேசத்தால் கூறு நூல் ஒளியைக் கொண்டும் (ஆசாரியன் வாக்கியத்தையும் உறுதி செய்யும் ஞான சாஸ்திர நூல்கள் வலிமையை கொண்டும்) புரமன்று (சரீரம் அன்று) புவனமன்று (உலகங்கள் அன்று) பூதங்களன்று (பஞ்ச பூதங்கள் அன்று) ஞான ஸ்திரம் என்னும் பிரமம் என்று தெளிவதே அபவாதம் காண்.
3 comments:
இது கொஞ்சம் பரவாயில்லாமப் புரியுது.
எளிமையா சொல்ல நான் கத்துக்கிட்டேன் போல இருக்கு!
//இது கொஞ்சம் பரவாயில்லாமப் புரியுது.//
எனக்கும்... :)
ரொம்ப நாளா படிக்காம இந்த பக்கம் வர பயந்துகிட்டிருந்தேன். பக்கத்துல வந்த பிறகுதானே அவ்ளோ மோசமா பயந்திருக்க வேணாம்னு தோணுது :) அபவாதம் ?
Post a Comment