Pages

Thursday, March 26, 2009

ஞான விசாரணை



கையினால் பிரிக்க முடியாத நெய்யை மத்தால் கடைந்து எடுப்பது போல, வாச்சியார்தத்தில் (சீவனில்) கலந்து கர்ம பந்தத்தினால் பிரிக்க முடியாது உள்ள இலட்சியார்த்த சொரூபத்தை (ஆத்மா) சிரவணம் (கேட்டல்) முதலானவற்றால் பிரித்து அறிய வேண்டும்.



தத்
வாச்சிய அர்த்தம் : மாயை, மாயைக்கு அதிஷ்டான சேதனத்துடன் உள்ள ஆபாச ரூபமான ஈசன்
இலட்சிய அர்த்தம் : அதிஷ்டான சேதனமான பிரமம்.

த்வம்
வாச்சிய அர்த்தம் : அவித்தை, அவித்தைக்கு அதிஷ்டான சேதனத்துடன் உள்ள ஆபாச ரூபமான சீவன்
இலட்சிய அர்த்தம் : அதிஷ்டான சேதனமான கூடஸ்தன்.

தாத்பர்யம்: தத்பத த்வம் பத வாச்சியார்த்தம் பர சீவர்கள், இலட்சியார்த்தம் பிரம கூடஸ்தர்கள். அத்தியாசத்தால் (மயக்கத்தால்) இரண்டு வாச்சியார்த்தங்களும் இரண்டு லட்சியார்த்தத்தில் கலந்து இருக்கும். இதில் வாச்சியார்த்தத்தை நீக்கி இலட்சியார்த்தத்தை அறிய வேண்டும்.

சீவனாகிய நீ கூடஸ்தன் என்று புரிஞ்சு கொண்டு பிரமத்தோட ஐக்கியமாகலாம். இப்படி முதல்லேயே பாத்தோம். இப்ப விவரமா பாக்கலாம்.
ஞான விசாரணையாலதான் இது நடக்கும்.

ப்ருகு ன்னு ஒத்தர் இருந்தார். (இவர்தான் பிருகு மகரிஷியான்னு கேட்டக்கூடாது. ஒரே பேரிலே பலர் இருந்திருப்பாங்க இல்லையா?) அவர் வருணன் என்பவரோட புத்திரன். (அதே. வருணன் தேவர்கள்ல ஒத்தரா இருக்கிறவரா இல்லாம இருக்கலாம்.)

அவர் அப்பாகிட்டே போய் ப்ரம்மம் னா என்ன உபதேசம் பண்ணுங்க ன்னார்.

வருணன் சொன்னார். அப்பா நல்ல கேள்வி கேட்டே! ரொம்ப சந்தோஷம். அன்னம், பிராணன், கண், காது, மனசு, பேச்சு இதெல்லாமே பிரம்மம் ன்னார். ப்ருகுவுக்கு ஒண்ணும் புரியலை. குழம்பி போயிட்டார்.

சரின்னு வருணன் சொன்னார். குழந்தாய், எதுலேந்து உயிரினங்கள் எல்லாம் தோன்றித்தோ, எதனால எல்லாம் வாழ்ந்து கொண்டு இருக்கோ, எதில எல்லாம் ல‌ய‌மாகி முடிவ‌டையுமோ அது எதுன்னு கண்டு பிடி. அதுவே ப்ரம்மம். போய் தபஸ் பண்ணு ப்ரம்மன்னா என்னன்னு புரியும் னார்.

ப்ருகுவும் போய் தபஸ் பண்ணார். தபஸ்னா? மனசையும் புலன்களையும் கட்டுப்படுத்தி விசாரணை பண்ணார். வெகு காலம் பண்ணிவிட்டு ¨அட நான் அன்னத்தாலதான் நான் உருவானேன், வளந்தேன், ஜீவித்து இருக்கேன். செத்துப்போனா உடம்பை நிலத்திலே புதைக்கவோ எரிச்சு சாம்பலை நிலத்திலேயே போட்டு விடவோ செய்வாங்க. அது திருப்பியும் அன்னமா விளையும். அதனால அன்னம்தான் பிரம்மம்.

போய் அப்பாகிட்டே சொன்னார். வருணன் தப்பு சரின்னு ஒண்ணுமே சொல்லலை. தபஸே பிரம்மம். போய் இன்னும் தபஸ் பண்ணுனார்.

வருணன் திருப்பி தபஸ் பண்ணி இன்னுமொன்னை கண்டு பிடிச்சார்.
ப்ராணன்தான் பிரம்மம். அதுலேந்தே எல்லாம் தோன்றி வளர்ந்து, ஒடுங்கும்.

குழந்தை பிறந்து ப்ராணனை உள்ளே இழுத்தாத்தான் ஆஹா குழந்தை பிறந்தாச்சு என்கிறோம். மூச்சு உள்ளவரை நாம இருக்கோம். எப்ப ப்ராணன் போயிடுத்தோ அப்ப நாம இல்லை. அதனால ப்ராணனே பிரம்மம்.

போய் அப்பாகிட்டே சொன்னார். வருணன் தப்பு சரின்னு ஒண்ணுமே சொல்லலை. தபஸே பிரம்மம். போய் இன்னும் தபஸ் பண்ணுனார்.
வருணன் திருப்பி தபஸ் பண்ணி இன்னுமொன்னை கண்டு பிடிச்சார்.
மனசே பிரம்மம். அதுலேந்தே எல்லாம் தோன்றி வளர்ந்து, ஒடுங்கும்.

மனசு இருக்கறதால்தான் நாம் இருக்கோம். மனசு நாம சாப்பிடுற உணவை வைச்சு வளருது. ஏதாவது நினைச்சு கொண்டேதானே இருக்கோம். கொஞ்ச நேரமாவது ஏதேனும் எண்ணம் இல்லாம இருக்கோமா? எப்ப மனசு நிக்கிறதோ அப்போ நாம் போயிடுவோம்.
அதனால மனசே பிரம்மம்.
போய் அப்பாகிட்டே சொன்னார். ¨ப்ரம்மம் னா என்ன? உபதேசம் பண்ணுங்க!¨ வருணன் சொன்னார்: தபஸே பிரம்மம். போய் இன்னும் தபஸ் பண்ணுனார்.

வருணன் திருப்பி தபஸ் பண்ணி இன்னுமொன்னை கண்டு பிடிச்சார்.
புத்திதான் பிரம்மம். அதுலேந்தே எல்லாம் தோன்றி வளர்ந்து, ஒடுங்கும்.

அறிவே உசந்தது. அறிவுன்னு ஒண்ணாலதான் இந்த உலகத்தை என்னன்னு தெரிஞ்சுக்கிறோம். அதாலதான் நம்ம வாழ்க்கையை சுகமா அமைச்சுக்கிறோம்; வாழ்கிறோம். கடைசில அறிவிலேயே - எல்லாத்தைவிட பெரிய புத்தியிலேயே ஒடுங்கிடுவோம்.

அதனால புத்தியே பிரம்மம்.
போய் அப்பாகிட்டே சொன்னார். ¨ப்ரம்மம் னா என்ன? உபதேசம் பண்ணுங்க!¨ வருணன் சொன்னார்: தபஸே பிரம்மம். போய் இன்னும் தபஸ் பண்ணுனார்.
வருணன் திருப்பி தபஸ் பண்ணி இன்னுமொன்னை கண்டு பிடிச்சார்.

ஆனந்தமே பிரம்மம். அதுலேந்தே எல்லாம் தோன்றி வளர்ந்து, ஒடுங்கும்.

பிறக்கிறப்பவே ஆனந்தத்தோட பிறக்கிறோம். குழந்தை பிறந்தாச்சுன்னா எவ்வளொ பேர் சந்தோஷப்படறாங்க. சம்பந்தம் இருக்கோ இல்லையோ எந்த குழந்தை பிறப்பை கேட்டாலும் யாரும் சந்தோடப்படுவாங்க இல்லையா? இப்பதான் பிறந்த குழந்தையை பாருங்க. எவ்வளோ சந்தோஷமா தூங்குது! ஆதுக்கு என்ன உலக அனுபவம் இருக்கு ஆனந்தப்பட? சந்தோஷத்தையே தேடிதான் வாழ்கிறோம். யாரான சந்தோஷமா இருக்க வேண்டாம்ன்னு நினைக்கிறாங்களா? சிலருக்கு என்ன இருக்கோ இல்லையோ சந்தோஷம் இருந்தா போதும் ன்னு புரிஞ்சு நிறைவா வாழறாங்களே! வாழ்க்கையிலே ஆனந்தம் இல்லைனா சீ என்ன வாழ்க்கை இது என்கிறோம். கடைசியிலே போகும்போது அப்பாடா இந்த தொல்லை பிடிச்ச வாழ்க்கை முடிஞ்சதுன்னு ஆனந்தமா போறோம்!
அப்ப ஆனந்தமே பிரம்மம்!

இப்படி ஒவ்வொண்ணா விசாரிச்சு இதுவே பிரம்மம்ன்னு முடிவுக்கு வருவதற்கு பார்கவீ வாருணீ வித்யைன்னு பெயர்.
இது தைத்திரீய உபநிஷத்திலே வருகிறது. [கொஞ்சம் சொந்த சரக்கும் இருக்கு இதிலே!]

இங்கே கூட விசாரம் பூர்த்தி ஆகலை.





Posted by Picasa

9 comments:

Geetha Sambasivam said...

ப்ருகு ரிஷி இல்லையா?? ஓகே, இவர் வேறே ப்ருகு??

இந்தக் கதை படிச்சிருந்தாலும் ப்ருகு மஹரிஷிதான்னு நினைச்சிருந்தேன்.

கிருஷ்ண மூர்த்தி S said...

ரொம்ப சுலபமா தெரிஞ்சுக்க முடியாத ஒண்ணை, இதோ தெரிஞ்சுக்கிட்டோம்ல அப்படீன்னு மயங்கற மாதிரியே எழுதுறீங்களே ஐயா.. இதுதான் பொரிதுயிலில் ஆழ்த்துவதென்பதோ!?

திவாண்ணா said...

சரியா தெரியலை கீதா அக்கா! அதனாலதான் டிஸ்கி போட்டேன்!

திவாண்ணா said...

//இதுதான் பொரிதுயிலில் ஆழ்த்துவதென்பதோ!?//
:-))))))

உங்களுக்கு ஏற்கெனெவே கொஞ்சமாவது பரிச்சயம் இருக்கும். அதான் சுலபமா புரியுது.
நீங்க சொல்கிறது போல புரிய வைக்க ஆசைப்பட்டு தோல்வி அடஞ்சுட்டோமோ ன்னு யோசிச்சு கொண்டு இருக்கிறேன்!

கிருஷ்ண மூர்த்தி S said...

இந்த இடம் உங்களுடைய தனி அரசாங்கம் இல்லையோ? அப்புறம் என்ன தனி யோசனை?
ஞான விசாரணை என்று வந்தபிறகு தோல்வி என்ன, வெற்றி என்ன?

நீங்கள் குறிப்பிட்ட இடத்தில்,என்னுடைய வேலை, உபயோகம் எதுவுமில்லை என்று ஞானோதயம் கிடைத்ததனால், ஒதுங்கி விட்டேன். அவ்வளவு தான்!

திவாண்ணா said...

//நீங்கள் குறிப்பிட்ட இடத்தில்,//

ஐயா நான் இந்த வலைப்பூவைத்தான் குறிப்பிட்டேன். வேறு எதையும் இல்லை!
முன்னே நாலு பின்னூட்டமாவது இருக்கும். இப்ப காணோம்!

கிருஷ்ண மூர்த்தி S said...

//நீங்க சொல்கிறது போல புரிய வைக்க ஆசைப்பட்டு தோல்வி அடஞ்சுட்டோமோ ன்னு யோசிச்சு கொண்டு இருக்கிறேன்!//

நான் கூட இதைத் தொட்டுத் தான் அப்படிச் சொன்னேன்,அவ்வளவு தான்!!

easternravi said...

கதை போல் எழுதி இருக்கிறீர்கள்.
எனது பாராட்டுக்கள்.

இதை பூர்த்தி செய்யுங்கள். ப்ளீஸ்..

திவாண்ணா said...

வாங்க ரவி,
தைத்ரீய உபநிஷதம் சொன்ன கதை இங்கே நின்னு போச்சு!
விசாரணை தொடர்ந்து இருக்கும் பதிவுகள்ளே இருக்கு. படியுங்க.