Thursday, March 5, 2009
மீள் பார்வை - தன் மாத்திரையின் தமோ குணம்
இன்னும் தமோ குணம் பாக்கி இருக்கு. கொஞ்சம் நிதானமா பாத்தா இதுவும் புரிஞ்சுடும்.
சத்வம் ன்னாலே அறிவு. ராஜஸம்னாலே செயல். அது போல தாமசம்னாலே மந்தம்.
சத்வம்னா சூக்ஷ்மம். ராஜசமும் அப்படிதான். ஆனா வெளிப்பாடு இருக்கும். தாமசம்ன்னா கண்ணுக்கே தெரியும்.
கண்ணுக்கு தெரியறது அன்னத்தாலே வளர்ந்த அன்ன மய கோசம். அதனாலே இது தாமசமாதானே இருக்கணும்?
செயலா இருக்கிறது 1. ப்ராண வாயு உலாத்தற ப்ராணமய கோசமும் 2. செயல்கள் நடக்கிற விக்ஞான மய கோசமும் 3. அல்லல் படும் மனசு இயங்கற மனோ மய கோசமும். சரிதானே? அதனால இது அத்தனையும் ராஜசம்.
ஞானத்தோட ஆனந்தமா எப்பவுமிருக்கிறது ஆனந்த மய கோசம். இது சத்வம்.
சரியா?
இப்ப இந்த சரீரங்கள், கோசங்கள், தன் மாத்திரைகள் - இதுக்கெல்லாம் ஒரு தொடர்பு தெரியுது இல்லையா?
சத்வம்- ஆனந்த மய கோசம்- காரண சரீரம்
ரஜஸ் - பிராண, மனோ, விஞ்ஞான மய கோசங்கள் - சூக்ஷ்ம சரீரம்.
இப்ப வரது தமஸ் - அன்ன மய கோசம் - ஸ்தூல சரீரம்.
ஒரே விஷயங்கள் வெவ்வேற மாதிரி- வார்த்தைகள்ளே சொல்லப்படுது. அவ்வ்ளோதான். இதை சரியா புரிஞ்சுகிட்டா இனிமே குழப்பம் இருக்காது.
தமோ குணத்து சமாசாரம் என்னன்னா ஈஸ்வரன் அதை ஒரு வடிவம் கொடுத்து நாம் பாக்கிறாப்பல செய்யறான். சூக்குமமா இருந்த அத்தனையும் இப்ப நாம பாக்கிறாப்போல ஸ்தூலமா இருக்கு.
என்னவா பாக்கிற மாதிரி ஆயிடுது?
ஆகாயம், வாயு, அக்னி, நீர், மண்.
அட இதையே முன்னால சொல்லல்லை?
அப்ப சொன்னது இதே பெயர்கள்தான். ஆனா அதெல்லாமே வெறும் தத்துவமா இருந்தது- சூக்ஷுமமா. பாக்கிறாப்பல இல்லை.
இப்ப தமோ குணத்திலேந்து பாக்கிறாப்பல வருது. ஆனா அதே பெயர்கள்தான்.
இது நடக்கிறது ஒரு ப்ராஸஸ்ஸாலே. அதுக்கு பஞ்சீகரணம் ன்னு பேர்.
40.
சூக்குமசகமிம் மட்டுஞ் சொல்லினோ மிப்பாற்றூலம்
ஆக்குமா ரோபந்தானு மடைவினின் மொழியக்கேளாய்
தாக்குமிவ் வுயிர்க்குத்தூல தநுவும்போகமு முண்டாகக்
காக்குமவ் வீசன்பஞ்சீ கரணங்கள் செய்தான்றானே
சூக்கும சகம் இம்மட்டும் (இது வரை) சொல்லினோம். இப்பால் தூலம் ஆக்கும் (தூல தேகம் முதலான பிரபஞ்சம் உண்டாகும்) ஆரோபந்தானும் (அத்தியாசத்தையும்) அடைவினில் (கிரமமாக) மொழிய கேளாய். [சூட்சும தேகத்தில்] தாக்கும் (சம்பந்தமான) இவ்வுயிர்க்கு (இந்த சீவர்களுக்கு) [கர்மத்துக்கு தக்க] தூல தநுவும் (தேகமும்) [விஷய] போகமும் உண்டாக, காக்கும் அவ்வீசன் (தமோ குண அம்சம் ஐந்தினையும்) பஞ்சீகரணங்கள் (ஐந்தாக பிரித்தல்) செய்தான்.
Labels:
நான்காம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//சத்வம்- ஆனந்த மய கோசம்- காரண சரீரம்
ரஜஸ் - பிராண, மனோ, விஞ்ஞான மய கோசங்கள் - சூக்ஷ்ம சரீரம்.
இப்ப வரது தமஸ் - அன்ன மய கோசம் - ஸ்தூல சரீரம்.//
இப்படி சொல்லும்போது better-ஆ இருக்கு. நன்றி.
//தமோ குணத்து சமாசாரம் என்னன்னா ஈஸ்வரன் அதை ஒரு வடிவம் கொடுத்து நாம் பாக்கிறாப்பல செய்யறான். சூக்குமமா இருந்த அத்தனையும் இப்ப நாம பாக்கிறாப்போல ஸ்தூலமா இருக்கு.//
appada, purinjatha oru vishayam kadaisiyile!
Post a Comment