Pages

Thursday, March 12, 2009

அபவாதம் - 3



ஒரு சிலர் இப்ப ஒரு லாபகரமான தொழில் செய்யறாங்க. அதுவும் வீட்டிலேயே செய்யலாம்.
பழைய துணி வாங்க வேண்டியது. டெய்லர் வெட்டி போட்ட துணி துண்டுகள் கூட போதும். ஒரு மிஷின் இருக்கு. அதில துணியை கொடுத்தா அது நூல் நூலா பிரிச்சு கொடுத்திடும். எடை போட்டு பாலிதீன் பாகிலே அடைச்சு கார் ஸ்கூட்டர் துடைக்கிற வேஸ்ட் ன்னு விக்கலாம்.

ஒரு துணியை துணியாவும் பாக்கலாம்; நூலாவும் பாக்கலாம். ரெண்டுமே சரிதான். பேர் வேற; உருவமும் வேற. அவ்ளோதான்.
இதிலே முதல்ல இருந்ததும் கடைசியா இருக்கிறதும் நூல்தான்! இதை காரணம் என்கிறங்க. துணி உருவாகி வந்தது, அப்புறமா அழிஞ்சும் போயிடும். இதை காரியம் என்கிறாங்க.

இதே போலத்தான் தங்கமும். அம்பி மாதிரி தங்க நகையா வாங்காம கடையிலே தங்கக்கட்டியா கூட வாங்கிக்கலாம். அது எப்பவுமே இருக்கும். நகையா செய்துக்கலாம். ஒரு செய்ன் செய்துக்கிறோம்; கொஞ்ச நாள்லே நாகரீகம் மாறிப்போயிடும். அட இந்த செய்ன் பழங்காலத்துது. புது டிசைன்லே செஞ்சுக்கலாம் ன்னு அதை பொற்கொல்லர்கிட்டே கொடுக்கிறோம். அவரும் அதை உருக்கி கொஞ்சம் தனியா எடுத்து வித்துட்டு அப்புறம் நாம் கேட்ட புது டிசைன் நகை பண்ணுவார். நம்மகிட்டே கொடுக்கிறப்ப சேதாரம் இவ்வளோன்னு கணக்கு காட்டுவார்.

உண்மையிலே ஒரு குந்துமணி அளவு கூட சேதாரம் ஆகாது. தங்கம் உருக்கின நெருப்பு அணைஞ்சதும் சாம்பலை கரைச்சு சிதறிப்போய் இருக்கக்கூடிய தங்கத்தையும் எடுத்துடுவார்.
அதெல்லாம் பணம் சம்பாதிக்க ஒரு கணக்கு! சயன்ஸ்லே படிச்சோமே energy can neither be created nor destroyedன்னு! முனாலேயே பாத்தோம்- matter - energy ஒண்ணுதான்; வேற வேற உருவம். உரு மாத்தலாம்; புதுசா பண்ண முடியாது.

கிடக்கட்டும். இப்ப கவனிக்க வேண்டியது முன்னே இருந்தது தங்கம். இப்ப நகை என்கிற பேரிலேயும் வேற உருவத்திலேயும் இருக்கிறது தங்கம். அதை அழிச்சாலும் வரப்போகிறது தங்கம்தான். தங்கமே தங்கம்!

தங்கம் அழியாது. ரூபமும் பேரும் மாறும். அவ்வளோதான்.
அதே போல களி மண்ணிலே குயவன் ஒரு பானை பண்ணினால் நடுவிலே அதுக்கு பானை ன்னு ஒரு பேரும் ரூபமும் வரும். காலப்போக்கிலே மாமியார் அதை உடைச்ச பிறகு அது திருப்பி மண்ணோட மண்ணாகும்.

குடத்தை மண்ணா பாக்கிறா மாதிரி, நகையை தங்கமா பாக்கிற மாதிரி-

இந்த உலகத்தையும் சீவர்களையும் எங்கேந்து வந்ததுன்னு ஆராய்ச்சி பண்ணி பிடிச்சுகிட்டே போனா அதோட உண்மையான சொரூபத்தை கண்டு பிடிக்கலாம். அதுக்குத்தான் இவ்வளோ நாள் மண்டையை உடைச்சுகிட்டு பிரமத்தின் நிழல் என்ன ஆச்சுன்னு பாத்துகிட்டு இருந்தோம்.

உதிச்ச வழியே பின்னாலே போய் ஒண்ணுத்திலே ஒண்ணை அடக்கி உண்மையை பாக்கிறதே அபவாதம்.

47.
படமுநூ லும்போற் செய்த பணியும் பொன்னும் போற்பார்க்கில்
கடமுமண் ணும்போ லொன்றாங் காரிய கார ணங்கள்
உடன்முதற் சுபாவமீறா வொன்றிலொன் றுதித்த வாறே
அடைவினி லொடுக்கிக் காணப தபவாத வுபாயமாமே

காரிய காரணங்கள் பார்க்கில் (காரியமான சகசீவ பரத்தையும், காரணமாகிய பிரமத்தையும், உத்தியால் விசாரிக்குமிடத்து) படமும் (காரியமான துணியும்) [காரணமாகிய] நூலும் போல், செய்த பணியும் (காரியமான ஆபரணமும்) [காரணமாகிய] பொன்னும் போல், கடமும் (காரியமான குடமும்) [காரணமாகிய] மண்ணும் போல் ஒன்றாம். உடன் முதல் சுபாவம் ஈறாக (தூல தேகம் முதல் பிரகிருதி முடிய) ஒன்றில் ஒன்று உதித்தவாறே அடைவினில் (முறையே) ஒடுக்கிக் காண்பது அபவாத உபாயமாமே. (உத்தியாமே)



8 comments:

Geetha Sambasivam said...

//அட இந்த செய்ன் பழங்காலத்துது. புது டிசைன்லே செஞ்சுக்கலாம் ன்னு அதை பொற்கொல்லர்கிட்டே கொடுக்கிறோம். அவரும் அதை உருக்கி கொஞ்சம் தனியா எடுத்து வித்துட்டு அப்புறம் நாம் கேட்ட புது டிசைன் நகை பண்ணுவார். நம்மகிட்டே கொடுக்கிறப்ப சேதாரம் இவ்வளோன்னு கணக்கு காட்டுவார்.//

ஹிஹிஹிஹி, நல்ல அனுபவம் போலிருக்கே!


//காலப்போக்கிலே மாமியார் அதை உடைச்ச பிறகு அது திருப்பி மண்ணோட மண்ணாகும்.//

இதுவும் தான், நல்லா இருக்கு உதாரணம் எல்லாம். இப்படியே எல்லாமும் எழுதி இருந்தீங்கன்னா எல்லாருக்கும் நல்லாவே மனசிலே பதிஞ்சிருக்கும். :)))))))))

Geetha Sambasivam said...

அம்பி தங்கக் கட்டி வாங்கினது தெரியாமப் போச்சு, இப்போத் தான் தெரிஞ்சது! :((((((

Geetha Sambasivam said...

படிச்ச எல்லாத்திலேயும் இது ஒண்ணுதான் கொஞ்சம் சுலபமாத் தெரியறது. என்னோட புரிதல் சக்தி அவ்வளவு தான்! :(((((((

திவாண்ணா said...

//ஹிஹிஹிஹி, நல்ல அனுபவம் போலிருக்கே!//
அப்படி ஒண்ணும் இல்லை
//இதுவும் தான், நல்லா இருக்கு உதாரணம் எல்லாம். இப்படியே எல்லாமும் எழுதி இருந்தீங்கன்னா எல்லாருக்கும் நல்லாவே மனசிலே பதிஞ்சிருக்கும். :)))))))))//

ஹிஹிஹி!

திவாண்ணா said...

//அம்பி தங்கக் கட்டி வாங்கினது தெரியாமப் போச்சு, இப்போத் தான் தெரிஞ்சது! :((((((//
அவர் எங்கே தங்கக்கட்டி வாங்கினார்? நகை வாங்க போய் பான்டா குடிச்சுட்டு திரும்பிட்டார்!
புத்திசாலி!

Geetha Sambasivam said...

//படிச்ச எல்லாத்திலேயும் இது ஒண்ணுதான் கொஞ்சம் சுலபமாத் தெரியறது. என்னோட புரிதல் சக்தி அவ்வளவு தான்! :(((((((//


:))))) இதை வாபஸ் வாங்கிக்கறேன், காலம்பர தான் வேளுக்குடி சொன்னார், புரிய ஆரம்பிச்சதுனா சத்வ குணம் அதிகம் ஆகி இருக்குனு. எதுக்கு சத்வ குணம் இல்லைனு சொல்லிக்கணும்! அதனால் எனக்கு சத்வ குணம் அதிகமாயிருக்குனு புரிஞ்சுக்கறேனே! :)))))))))))

Kavinaya said...

//அவரும் அதை உருக்கி கொஞ்சம் தனியா எடுத்து வித்துட்டு அப்புறம் நாம் கேட்ட புது டிசைன் நகை பண்ணுவார்.//

எப்படி சிரிக்காம 'ஜோக்' கடிக்கிறீங்க? :)

Kavinaya said...

follow-up -க்கு...