Friday, July 30, 2010
மேலும்....
ஸவிசாரத்துக்கு உதாரணம் பார்க்கலாமா? மனசையே எடுத்துக்கலாம். அது என்ன செய்கிறது, எங்கே போகிறது ன்னு கவனிக்கிறது ஸவிசார பாவனை. (இதுவே ரமணர் காட்டிய வழி.)
விதர்க்கம், விசாரம் இரண்டும் சேர்ந்தது க்ராஹ்ய ஸமாதி (த்யானம்). அதெப்படி இரண்டும் ஒண்ணா சேரும்ன்னா.... ஒரு பொருளோட தோற்றம், அதோட ஸூக்ஷ்ம சொரூபம் ரெண்டையுமே ஒரே நேரத்திலே த்யானிக்கலாம் இல்லையா?
சத்வமான சித்தம் ரஜோ, தமோ சலனங்களோட த்யானம் செய்கிறப்ப இந்திரியங்கள் மூலமா சுகமும் பிரகாசமும் அனுபவிக்கப்படும். இது ஆநந்தம்.
மூடிய கண் முன்னே கோடி சூர்ய பிரகாசத்தோட ஏதோ தெரிகிறது. இல்லை அருமையான மல்லிகைப்பூ வாசனை உணர்கிறோம். தென்றல் வருடின மாதிரி உணர்கிறோம். அபூர்வமான இசை கேட்கிறது. இவை எல்லாம் ரஜோ தமோ குண சலனங்கள். சத்வ சித்தம் அனுபவிக்கும் போது இவை ஆநந்தம் ஆகும்.
இப்படி ரஜோ, தமோ சலனங்கள் இல்லைன்னா அது ஸாஸ்மிதம். இந்த அஸ்மிதத்திலே சத்வமான சித்தம் இருக்கு என்கிறது மட்டுமே உணரலாம். வேற தூல, ஸூக்ஷ்ம இந்திரிய (புலன்கள்) சமாசாரம் ஒண்ணுமே தெரியாது.
இந்த விதர்க்கம், விசாரம், ஆநந்தம், அஸ்மிதை நாலுமே ஒரு வகை.- ஸம்ப்ரக்ஞாத ஸமாதி.
ப்ரக்ஞை ன்னு கேள்வி பட்டிருக்கோம் இல்லையா. உணர்ச்சி. அனெஸ்தடிஸ்ட் ஊசி போட்டார். ப்ரக்ஞை போயிடுத்து. ஆபரேஷன் நடந்ததே தெரியாது என்கிறோம். ஸமாதியிலே ஏதோ ஒரு உணர்ச்சி இருந்தா அது ஸம்ப்ரக்ஞாத ஸமாதி.
Thursday, July 29, 2010
ஸம்ப்ரக்ஞாத ஸமாதி.
वितर्कविचारानन्दास्मितारूपानुगमात् संप्रज्ञातः ।।17।।
விதர்க விசாராநந்தா³ ஸ்மிதாரூபாநு க³மாத் ஸம்°ப்ரஜ்ஞாத: || 17||
விதர்கம் (பருப்பொருளை காணல்), விசாரம் (ஸூக்ஷ்ம வடிவை சிந்தித்தல்) ,ஆனந்தம் (ரஜோ, தமோ சம்பந்தம் சிறிது இருக்கும் போது இந்திரியங்களால் அறியப்படும் ஆனந்தம்), அஸ்மிதை (சித்தம் மட்டுமே உள்ளதென அறிதல்) இவை சொரூபத்துடன் சேர்ந்து இருப்பதால் உண்டாவது ஸம்ப்ரக்ஞாத ஸமாதி.
மற்ற விஷயங்களின் கலப்பில்லாமல் சித்தத்தை ஒரு விஷயத்தில் வைப்பது பாவனை ஆகும்.
பாவனை ஒரு பருப்பொருளில் இருக்கலாம். இது விதர்க்கம். ஒரு லிங்கம் (குறி), தெய்வ வடிவம், ஜ்யோதி இப்படி. இதுக்கு ஒரு உருவம் இருக்கும். ஒரு சப்தம்- சொல்- அதை குறிக்கும். இந்த பாவனையோட அடைகிறது ஸவிதர்க்கம்.
அல்லது பாவனை பருப் பொருளில் இல்லாம இருக்கலாம். இதுக்கு முன்னோ பின்னோ ஒரு தோற்றம் இராது. இதை எந்த சொல்லும் குறிக்காது. இந்த பாவனையோட அடைகிறது நிர்விதர்க்கம்.
பாவனை கண்ணுக்கு தெரியாத ஸூக்ஷ்மமான பொருளில் இருக்கலாம். ஸூக்ஷ்ம வஸ்துவை சாக்ஷாத்கரிப்பது விசாரம் ஆகும். தன் மாத்திரை (ஆகாசம் முதலான பஞ்சபூதங்கள் ஸ்தூலமாக உண்டாகும் முன் இருக்கிற ஸூக்ஷ்ம நிலை), அந்தக்கரணம் இவற்றோட ஸூக்ஷ்ம வஸ்துவை விஷயமா எடுத்து கொண்டு பாவனை செய்யலாம். இது ஸவிசாரம். இதோட தேசம், காலம் சேரலைன்னா அது நிர்விசாரம்.
Wednesday, July 28, 2010
பர வைராக்கியம்
तत्परं पुरुषख्यातेर्गुणवैतृष्णयम् ।।16
தத்பரம்° புருஷக்²யாதேர் கு³ணவைத்ரு«ஷ்ணயம் || 16||
புருஷ சாக்ஷாத்காரம் உண்டான பிறகு ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபங்களான குணங்களில் இருந்து பற்றற்று இருப்பது எது உண்டோ அது பரவைராக்கியம்.
தோஷங்களை பார்த்து வசீகார வைராக்யம் வந்தது. இது அடுத்து வரும் பர வைராக்கியத்துக்கு காரணமாகிறது. குரு-சாஸ்த்திர துணையோடு புருஷனின் (ஜீவாத்மாவின்) சாக்ஷாத்காரம் கிடைக்கிறது. இதிலேயே நின்று பயிற்சி செய்வது தர்மமேகத்யானம் என்கிறாங்க. இதனால ரஜோ, தமோ குண அழுக்கு முழுவதும் போயிடும். சத்வத்திலேயே நிலைக்கும். அப்போது சித்தம் தெளிவாயிடும். இதை கைவல்ய நிலைன்னும் பராகாஷ்டை ந்நும் சொல்வதுண்டு. இந்த நிலையிலே மன கிலேசங்கள் (சஞ்சலம்) யோகியை விட்டு நீங்கும். சம்சார பந்தங்கள் அறும்.
Tuesday, July 27, 2010
வைராக்கியமே பல வகை....
दृष्टानुश्रविकविषयवितृष्णस्य वशीकारसंज्ञा वैराग्यम् ।।15।।
த்³ரு«ஷ்டாநு ஶ்ரவிக விஷய வித்ரு«ஷ்ணஸ்ய வஶீகார ஸம்°ஜ்ஞா வைராக்³யம் || 15||
ஸ்த்ரீ, அன்னம், பானம், ஐஸ்வர்யம், முதலான பார்க்கக்கூடியதிலும்; வேதம் சொன்ன சொர்க்கம், பிரகிருதி, லயம், போன்ற பார்க்க முடியாத விஷயங்களிலும் ஆசையில்லாத சித்தம் "இவை எல்லாம் என்னை சேர்ந்தவை; ஆனால் நான் இவற்றை சேர்ந்தவனில்லை"ன்னு நம்மை அலைக்கழிக்கும் விஷயங்களை விலக்கும் புத்தி (உபேக்ஷை) வசீகார வைராக்கியம் (பற்றற்ற நிலை) ஆகும்.
இந்த வைராக்கியமே பல வகையானது. எது சாரமானது, எதில் சாரமில்லைன்னு குரு மூலமும், சாஸ்திரங்கள் மூலமும் தெரிந்து, அவற்றை விலக்க முயற்சி எடுப்பது யதமான வைராக்கியம். அப்படி முயற்சி செய்து "இதெல்லாம் விலக்கிவிட்டோம்; இதெல்லாம் இன்னும் விலக்கனும்" ன்னு அறிகிறது வியதிரேக வைராக்யம். இப்படியே போகும்போது நமக்கு 'இது நல்லது, இது கெட்டது' ன்னு ஒரு அபிப்ராயம் இருக்கும் இல்லையா? அதையும் விலக்குவது ஏகேந்திரிய வைராக்கியம். அதாவது நல்லது மேலே விருப்பமும், கெட்டது மேலே வெறுப்பும் கூட இல்லாம இருக்கிறது.
இந்த வைராக்கியங்கள் கூட போதாதாம். இவற்றால் ஞானம்ன்னு நினைச்சுகிற போலி குற்றமுள்ள - ஞானம் வரக்கூடுமாம். அதனால் சூத்திரம் சொல்லுவது நாலாவது வகையான வசீகார வைராக்கியம். அது என்னன்னு முதல்லேயே பார்த்தாச்சு இல்லையா?
Monday, July 26, 2010
பயிற்சி-2
स तु दीर्घकालानैरन्तर्य्यसत्कारसेवितो दृढभूमि ।।14।।
ஸ து தீ³ர்க⁴காலா நைரந்தர்ய்ய ஸத்கார ஸேவிதோ த்³ரு«ட⁴பூ⁴மி || 14||
அந்த பயிற்சியானது நீண்ட காலமும் இடைவிடாதும் ஶ்ரத்தை , பிரமசர்யம், தவம் இவற்றுடன் பல வழிகளிலும் செய்யப்பட வேண்டியது. அப்படி செய்யும் போது அது திடப்படுகிறது.
குருவிடமும் சாஸ்திரத்திடமும் விஶ்வாசத்துடனும், வரும் இடையூறுகளை பொருட்படுத்தாமலும் இடைவெளியில்லாமல் அப்பியாசிக்க வேண்டும். ஒரு காட்டுக்காளையை போன்றது சித்தம். காளையை வண்டியில் கட்டி சவாரி செய்ய விருப்பமுள்ளவன் காளையை அதன் விருப்பப்படி ஓட விடமாட்டான். வண்டியில் கட்டும்போது சண்டித்தனம் பண்ண இடம் தர மாட்டான். முயற்சியை கைவிடமாட்டான். முடியாதுன்னு தோணும்போது முன்னே செய்து வெற்றி அடைஞ்சவர்களை பாத்து நம்பிக்கை கொள்வான். மெள்ள மெள்ள அதை எப்படியும் வசப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன் அதை வழிக்கு கொண்டு வருவான்.
Sunday, July 25, 2010
பயிற்சி
तत्र स्थितौ यत्नोऽभ्यासः ।।13।।
தத்ர ஸ்தி²தௌ யத்நோ'ப்⁴யாஸ: || 13||
Saturday, July 24, 2010
வைராக்கியம்
अभ्यासवैराग्याभ्यां तन्निरोधः ।।12।।
அப்⁴யாஸவைராக்³யாப்⁴யாம்° தந்நிரோத⁴: || 12||
இந்த விருத்திகளை அடக்கி தன் சுய நிலையில் நிற்பது பயிற்சியாலும், பற்றின்மையாலும் இயலும்.
யோகம் என்கிறது சித்தத்தை நிறுத்துவதுன்னு சொல்லியாச்சில்ல? அத எப்படி நிறுத்தறது என்பதே கேள்வி.
வைராக்கியம் என்கிறது பற்றின்மை. தப்பா பிரயோகத்திலே வந்துடுத்து. அதை திடம் (determination) என்கிற அர்த்தத்திலே பயன்படுத்தறோம். உலக சம்சாரங்களில பற்றை விட்டுவிட்டு தொடர்ந்து அப்பியாசம் - பயிற்சி செய்ய சித்தம் நின்று யோகம் உண்டாகும். அதெப்படி பற்று விடறதுன்னா – புலன்கள் எது பின்னால ஓடுதோ அதிலே இருக்கிற குற்றங்களை- தோஷங்களை பார்க்க ஆரம்பிக்கணும். ஆமாம்; துரியோதனப் பார்வை வேணும். அல்லது குணங்களை விமர்சிக்கணும். இப்படி செய்வதை பழக சித்தத்திற்கு வெளியே செல்லும் நாட்டம் குறைந்து போகும். இது விருத்தி நிரோதம் ஆகும்.
நமக்கு சக்கரை வியாதி இருக்கு. ரொம்ப பிடிச்ச மை.பா வை பார்கிறோமா? இதை இப்ப சாப்பிடலாம், ஆனா அப்புறம் சர்க்கரை அதிகமாகி யார் அவஸ்தை படுகிறதுன்னு எண்ணம் வரணும்
ஒத்தனுக்கு சோறு சில நாட்கள் கிடைக்கலை. காட்டு வழியிலே போகும் போது அங்க இலை போட்டு நல்ல சாப்பாட்டு போட்டு வெச்சு இருக்கு. சாப்பிட ஆசைதான். அப்ப இன்னொருத்தன் வந்து சொல்கிறான், "ஏம்பா, ஆளில்லாத வனத்தில இப்படி சாப்பாடு போட்டு வெச்சு இருக்குன்னா ஏதோ சூது இருக்குன்னு புரிஞ்சுக்க வேணாமா? இதை கேட்டு உணர்ந்த சாப்பிட உட்கார்ந்த ஆசாமி ஒடிப்போயிடறான். பசியாக இருந்தாலும் இப்படி அறிவு வந்துவிட்டா மனசு திரும்பிவிடும். இதப்போல விஷயத்தில் குற்றங்களை காண்பதால் ஏற்படுவது வைராக்கியம். இல்லாவிடில் ரஜோ விருத்தி அடங்கியதால் தமோ விருத்தி மேலோங்கும். சித்தமும் லயமாகிவிடும். இது நித்திரையாகும்.
Friday, July 23, 2010
ஸ்ம்ருதி
अनुभूतविषयासंप्रमोषः स्मृतिः ।।11।।
அநுபூ⁴த விஷயா ஸம்°ப்ரமோஷ: ஸ்ம்ரு«தி: || 11||
அனுபவிக்கபட்ட விஷயத்தின் நாசமில்லா அறிவு ஸ்ம்ருதி விருத்தி ஆகும்.
அனுபவிச்சது ன்னு சொல்லும் போது இது பிரமாணமா இருக்கணுமே? இது வேற. அனுபவத்தில ஸ்தூலமாக பார்த்ததை நினைவில் வைப்பது அனுபவம். அதே விஷயத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை கிரகித்து கொண்டால் அது ஸ்ம்ருதி. ஒரு கோவிலுக்குப் போய் ஸ்வாமி தர்சனம் செய்கிறோம். அங்கே கண்ணால பார்த்தது ஒண்ணு. ஆனால் அனுபவிச்சது கண்ணால பாத்ததுக்கும் மேலே வேற ஒண்ணு. இது ஸ்ம்ருதி.
Thursday, July 22, 2010
நித்திரை
अभावप्रत्ययालम्बना वृत्तिर्निद्रा ।।10।।
அபா⁴வ ப்ரத்யயாலம்ப³நா வ்ரு«த்திர் நித்³ரா || 10||
\
முன் கூறிய விருத்திகள் இல்லாததற்கு காரணமான தமோ குணத்தை விஷயமாக உடைய விருத்தி நித்திரை ஆகும்.இது ரஜோ சத்வ குணங்களால் உண்டாகும் விருத்திகளை அழிக்கும்.
மூன்று குணங்களும் எப்போதும் இருந்தாலும் ஒரு குணம் மேலோங்கி மற்றதை அழிக்கக்கூடும். இப்படி தமோ குணம் மேலோங்கி மற்றதை அழிக்கலாம்.
விழிப்பு நிலையும் இல்லாம, கனவு நிலையும் இல்லாம தூங்கும்போது தமோ குணமே மேல் நிற்கும். இதை சுசுப்தி என்பர். கனவு நிலயில் நாம் பல செயல்களை செய்யலாம்; இல்லை சாந்தமாகவும் இருக்கலாம். அதனால கனவு நிலையில் ரஜோ சத்வ விருத்திகள் இருக்கும். சுசுப்தி என்கிறது ஆழ் உறக்கம். இதுவும் ஸமாதியும் ஒன்று இல்லை. ஸமாதியில் இந்த தமோ குண விருத்தி இராது.
Wednesday, July 21, 2010
விகல்பம்
शब्दज्ञानानुपाती वस्तुशून्यो विकल्पः ।।9।।
ஶப்³த³ஜ்ஞாநாநுபாதீ வஸ்துஶூந்யோ விகல்ப: || 9||
Saturday, July 17, 2010
பிரமாணம் , விபர்யயம்
प्रत्यक्षानुमानागमाः प्रमाणानि ।।7।।
ப்ரத்யக்ஷாநுமாநாக³மா: ப்ரமாணாநி || 7||
பிரமாணம் என்பதென்ன? பிரத்யக்ஷம் (நேரடி அனுபவம்), அனுமானம் (ஊகம்), ஆகமம் ஆகியன பிரமாணங்கள் ஆகும்.
(அனுபவத்தால் உண்டானதை மற்றதற்கு பொருத்தி பார்ப்பது ஆகமம்.)நம் கண் காது முதலான புலன்களாலே சிலதை அறிஞ்சு கொள்கிறோம். இது நேரடி அனுபவம். இது ஒரு பிரமாணம்.
முன் அனுபவத்தாலே சிலது தெரிஞ்சுக்கிறோம். நெருப்பை நேரடியா பார்த்து இது நெருப்புன்னு தெரிஞ்சு கொள்கிறோம். இது ப்ரத்யக்ஷம். முன் ஒரு முறை நெருப்பு இருக்கிற இடத்தில் புகை இருக்குன்னு பார்த்தோம். இப்ப புகையை மட்டும் எங்காவது பார்க்கும் போது "ஓஹோ! இங்கே நெருப்பு இருக்கு" ன்னு ஊகம் செய்கிறோம். இது ஒரு வகை. நெருப்பு என்கிற வார்த்தையை கேட்கும்போது நேரடியா பாக்கலைன்னாலும் இந்த நெருப்பையும் புகையையும் சம்பத்தப்படுத்தி நினைக்கிறது ஆகமம்.
இவை அத்தனையும் பிரமாணம்.
विपर्ययो मिथ्याज्ञानमेतद्रूपप्रतिष्ठम् ।।8।।
விபர்யயோ மித்²யாஜ்ஞாநமேதத்³ ரூப ப்ரதிஷ்ட²ம் || 8||
ஒரு வஸ்துவின் உண்மை சொருபத்தை வெளிப்படுத்தாத பொய்யான ஞானம் விபர்யயம்.
இது பின்னால் மாறிவிடக்கூடியது. (சிப்பியில் வெள்ளி காண்பது) ஒரு பொருளோட "உண்மை" நிலையை தெரிவிப்பது யதார்த்த ஞானம். இல்லாத ஒரு நிலையை இருப்பதா காட்டுவது மித்யா ஞானம். கடற்கரையிலே ஒரு சிப்பி கிடக்குது. அது வெய்யிலில் பளபளக்கிறது ன்னு பார்த்து ஓ! இது ஏதோ வெள்ளியிலே பண்ண பொருள் ன்னு நினைக்கிறோம். இது மித்யா ஞானம் அல்லது விபர்யயம். கிட்டே போய் பார்க்க அது சிப்பின்னு தெரியுது. அப்ப நம் கருத்தை மாத்திக்கிறோம். இப்படி மாறுவதே விபர்யயத்தோட முக்கிய லக்ஷணம்.Friday, July 16, 2010
ஐந்து மனோ வ்ருத்திகள்:
वृत्तयः पञ्चतय्यः क्लिष्टाक्लिष्टा ।।5।।
வ்ரு«த்தய: பஞ்சதய்ய: க்லிஷ்டாக்லிஷ்டா || 5||
தாமசமும் ராஜஸமும் சாத்விகமும் ஆன மனோ விருத்திகள் ஐந்து வகையாகும்.
மனசோட வளர்ச்சி- விரிவு - ஐந்து விதமாம். அவை சாத்விகமாகவோ ராஜசமாகவோ தாமசமாகவோ இருக்கலாம்.
ஏதோ க்ளிஷ்டா ன்னு சொல்லி இருக்கே? மன பாதிப்பு. [மனக் கிலேசம் என்ற வார்த்தை இதை ஒட்டினதே.] ராஜச, தாமஸ மனோ வ்ருத்திகள் வீண் மன பாதிப்பை செய்வதால் அவை கிலிஷ்டா. இதனால் சுக, துக்கங்கள் உண்டாகும்.
சாத்விக மனோ வ்ருத்தி செய்கிற பாதிப்பு வீண் இல்லை. அதனால் அது அக்லிஷ்டா. இந்த வகை மன வளர்ச்சியால் தான் யார் என்கிறது மறந்து போனாலும் இது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.
प्रमाणविपर्ययविकल्पनिद्रास्मृतयः ।।6।।
ப்ரமாண விபர்யய விகல்ப நித்³ரா ஸ்ம்ரு«தய: || 6||
இவை (சித்த விருத்திகள்) பிரமாணம், விபர்யயம், விகல்பம், நித்திரை, ஸ்ம்ருதி ஆகியன.
இதெல்லாம் என்னன்னு அடுத்து வருகிறது.Wednesday, July 14, 2010
யோகத்தில் உள்ளபோது...
तदा दृष्टुः स्वरूपेऽवस्थानम् ।।3।।
ததா³ த்³ரு«ஷ்டு: ஸ்வரூபே'வஸ்தா²நம் || 3||
அப்படி செய்யும் போது [சைதன்யமான (இயங்கு சக்தியாக) உள்ள புருஷனுக்கு] தன் சொந்த வடிவில் இருப்பு ஏற்படுகிறது.போன சூத்திரம் சுலபமா இருந்தது. உடனே அடுத்தது டெக்னிகல் ஆயிடுத்து! அப்படி செய்யும் போது ....- புரியுது. சித்தத்தை அடக்கும்போது. சைதன்யம்? புருஷன்? சைதன்யம் என்பது இயக்கு சக்தி. எது நம்மை –உடம்பை, மனசை- இயக்குகிறதோ அது. புருஷன் என்பது இங்கே (யோக சாஸ்திரத்தில்) ஜீவாத்மாவை குறிக்குது. ஜீவாத்மாவை 'கண்ணைக்கட்டி', தான் வேற ஏதோ ன்னு நினைக்க வெச்சதே இந்த அந்தக்கரணம்தான். மனசு, சித்தமெல்லாமே அந்தக்கரணம்தான். அதனால அந்தக்கரணம் நிற்கும் போது, தான் சொந்த நிலையில் இருப்பது ஜீவனுக்கு தெரிஞ்சு போகும்.
वृत्तिसारूप्यमितरत्र ।।4।।
வ்ரு«த்தி ஸாரூப்யமிதரத்ர || 4||
சரி அப்ப ஜீவன் யோகத்திலே இல்லாத போது எப்படி இருக்கும்? ஏதோ எண்ணங்கள் ஓடிகிட்டே இருக்கு. அந்த எண்ணங்கள் சாத்விகமா இருக்கலாம்; ராஜசமா இருக்கலாம்; தாமசமா இருக்கலாம். எப்படி இருந்தாலும் அது கண்ணாடியில் அழுக்கு இருக்கிறாப்போல இருக்கு. இந்த அழுக்கை நீக்குவது ரொம்ப கடினமான வேலையே. நல்லாவே ஒட்டிகிட்டு இருக்கும்.
இந்த ராஜசம் தாமசம் சாத்விகம் எல்லாம் என்ன?
Monday, July 12, 2010
யோகம் என்பதென்ன?
अथ योगानुशासनम् ।।1।।
அத² யோகா³நுஶாஸநம் || 1||
[யோக சாத்திரத்தை பதஞ்சலி விளக்குகிறார்.] யோக சாஸ்திரம் தொடங்கப்படும்.
யோகம் என்பதென்ன?
योगश्चित्तवृत्तिनिरोधः ।।2।।
யோக³ஶ்சித்த வ்ரு«த்தி நிரோத⁴: || 2||
சித்தத்தின் விருத்தியை (வளர்ச்சியை) அடக்குதல் யோகம்.
சூத்திரங்களில் இதான் பிரச்சினை. சுலபமா சொல்லிவிட்டு போய் விட்டார்! இப்போது சித்த விருத்தி என்றால் என்ன? அடக்குவது என்றால் என்ன என்றெல்லாம் ஆராய வேண்டும். ஆராய்ந்து மிகச்சரியான விடை கண்டு பிடித்துவிட்டால் சாஸ்திரமே படித்ததாகும்! போகட்டும், நாம் இங்கே
மேலோட்டமாகத்தான் பார்த்துக்கொண்டு போகிறோம்.
சித்தம் என்பதென்ன? வேறு பதிவில் இதை பார்த்தோம். அந்தக்கரணத்தின் ஒரு பகுதி. எளிமையாக சொல்ல மனதின் வேறு வடிவம் எனலாம். எதையாவது யோசிக்க ஆரம்பித்து தொடர்ச்சியாக அதைப்பத்தியே யோசித்துக்கொண்டு போனால் அது சித்தம் ஆகும். சப்ஜெக்டை விட்டு வேறு வழியில் போவது இல்லை. சாதாரணமாக நாம் எதையாவது யோசிக்க ஆரம்பிக்கிறோம். சற்று நேரத்திலேயே வேறு எண்ணம் கிளைத்து வேறு எதையோ யோசித்துக்கொண்டு இருக்கிறோம். இதை சரியாக அறிய ஒரு சின்ன சோதனை செய்து பாருங்கள். இதை படிக்க ஆரம்பிக்கு முன் எதைப்பற்றி நினைத்துக்கொண்டு இருந்தீர்கள்? அதற்கு முன்? அதற்கு முன்? இப்படியே ஆராய்ந்தால் 5 நிமிடங்கள் முன் யோசிக்க ஆரம்பித்ததும் இப்போது யோசிப்பதும் இடையில் யோசித்தவையும் பலவாக இருக்கும். இப்படி பல வழியிலும் ஓடுவது மனசு.
மனம் போகிற போக்கில் விடாமல் மனசை கட்டுப்படுத்தி குவித்து சிதறாமல் ஒரே வழியில் ஓடுவது சித்தம். இப்படி சித்தம் தொடர்ந்து ஓடுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை கட்டுப்படுத்தி கடைசியில் நிறுத்திவிட்டால் அது யோகம்.
Friday, July 9, 2010
அர்த்தமெல்லாம் வேறுதான் அகராதியும் வேறுதான்
அர்த்தமெல்லாம் வேறுதான் அகராதியும் வேறுதான்:
படித்து உடனே புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். நிதானமாகவே படிக்க வேண்டும். கலைச்சொற்களை சரியாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில் அது அடுத்த வரிகளில் வரும். அப்போது இது என்ன என்று விழிக்கக்கூடாது. சாதாரணமாக மற்ற இடங்களில் வரும் பொருள் இங்கே இல்லாமல் போகலாம். யோக சாஸ்திரத்தின் அகராதி தனியேதான். குழம்ப வேண்டாம்.
இதை பயிலுவதற்கு ஒரு குரு அவசியம் தேவை. தயை செய்து யாரும் குரு மேற்பார்வை இல்லாமல் முயற்சி ஆரம்பித்து அவஸ்தை பட வேண்டாம். அப்படி ஒன்றும் செய்யவும் முடியாது என்பதால்தான் தைரியமாக இதைப் பதிப்பிகிறேன். சுலபமாக சித்தத்தை ஒருமுகப்படுத்து என்று சொல்லிவிட்டு போய்விடுவார். சித்தம்ன்னா என்ன, ஒருமுகப்படுத்துவதுன்னா என்ன, எப்படி செய்வது என்று சொல்ல குருதான் வர வேண்டும். படித்து புரிய முடியாதென்றால் ஏன் இதை பதிக்கிறேன் எனில் ஏதோ ஒரு
தூண்டுதலாலேயே. யாருக்கோ பயன்படும்.
முதலில் வருவது சமாதி யோகம். இதில் யோகம் என்பது என்ன என்பதைப்பற்றி சிறிது விளக்கி பின் வெவ்வேறு வகையான சமாதிகளைப்பற்றி சொல்லப்படுகிறது. அடுத்து வரும் சாதனா பாதத்தில் எப்படி சமாதி அடையப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. விபூதி பாதத்தில் அடையப்படும் சித்திகள் குறித்தும், கடைசியாக கைவல்லிய பாதத்தில்
கைவல்லியத்தை அடைவது குறித்தும் சொல்லப்படுகிறது.
சித்திகள் குறித்து ஒரு தவறான அபிப்பிராயமே பொதுவாக காணப்படுகிறது. அவை மனதானது வெவ்வேறு இடங்களில் நிலை பெறும்போது தானாகவே தோன்றுவன. துணை உற்பத்தி (by products) அல்லது பக்க விளைவுகள் (side effects) எனலாம். ஆனால் இவை சாதகனுக்கு முன்னேற்றத்தை காட்டும் போது இலக்கை விட்டு விலகவும் ஹேதுவாகலாம். சித்திகளின் மகத்துவத்தில் மயங்கும் சாதகன் இலக்கான கைவல்லியத்தை அடைய தடையுண்டாகும். ஆசைகளை விடும்போதுதான் மனம் நிலை பெறுகிறது என்றாலும் ஆசைகள் மீண்டும் முளைத்து சாதகன் நிலை கீழிறங்கக்கூடும்.
மனிதனின் யத்னத்தில் சமாதி கிட்டுவதை விட ஈஸ்வர பக்தியால் இன்னும் விரைவில் நல்ல சமாதி கிட்டுகிறது என்பது நினைவில் வைத்துக்கொள்ளத்தக்க ஒன்று...
Thursday, July 8, 2010
யோக மார்க்கம்
இந்த சுற்றில் முன் அதிகம் பேசாமல் விட்ட யோக மார்க்கத்தைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
ஞான சாதனங்களான கர்மா முதலானவைகளை உபதேசிக்கிற சாத்திரங்கள் தர்சனம் எனப்படும். அவை ஆறு இருக்கின்றன. சாங்க்யம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ - உத்தர மீமாம்சை என்பன அவை. சாங்க்யம் கபிலரால் செய்யப்பட்டது.
முதலில் யோக விஷயத்தை உபதேசம் செய்தவர் ஹிரண்யகர்பர். பதஞ்ஜலி அதை சூத்திர வடிவமாக்கினார். யோக சாஸ்திரத்தால் சித்த குற்றங்களையும் வியாகரண பாஷ்யத்தால் சொற் குற்றங்களையும் வைத்திய சாஸ்திரத்தால் சரீர தோஷங்களையும் போக்க உதவினார் என போற்றுகிறார்கள்.
இந்த பதஞ்சலி யோக சாஸ்திரத்துக்கு எட்டு வியாக்கியானங்கள் உண்டு.
யோகம் என்றால் யோக ஆசனங்கள்தான் நமக்கு உடனே நினைவுக்கு வருகிறது. ஆனால் யோகம் என்பதற்கு இணைதல் என்பதே பொருள். ஐக்கியம்; ஆன்மா பரமான்மாவுடன் ஐக்கியமாதல் எனலாம்.
இந்த நூல் முக்கியமாக ஞானம் பெற தீக்ஷை கிடைத்தவருக்கே உரித்தாகும். இன்று யோகம் உலகமெங்கும் பரவிவிட்டது. பல வேறு மாற்றங்களும் அடைந்துவிட்டது. பல போலிகளும் வந்தாகிவிட்டது.
பதஞ்ஜலி 195 சூத்திரங்களிலேயே ஒரு நம்பத்தகுந்த தத்துவமும் வழிமுறையும் சொல்லி இருக்கிறார். அவை இங்கு பதியப்படுகின்றன. சமஸ்கிருத மூலமும் தமிழில் சுக்குமி லகுதி ப்பிலி ரீதியிலும் எழுதப்பட்டுள்ளது. இதன் பொருளை எளிய முறையில் புரிய வைக்க முயன்று இருக்கிறேன். சூத்திர வடிவில் இருப்பதால் இதற்கு வியாக்கியானம் தேவைப்படுகிறது. நிச்சயமாக இதுதான் பொருள் என்று இல்லை. ஆழ்ந்து யோசிப்போருக்கு வேறு பொருள் கிட்டக்கூடும்.
இதில் ஒரு ருசி வந்து தகுந்த குருவை நாட அவர் முழுவதும் வேறு விதமாகக் கூட புரியவைக்க முடியலாம்....
Wednesday, July 7, 2010
71. மஹா பாபங்கள் அகல - காயத்ரி ஸ்துதி
71. மஹா பாபங்கள் அகல - காயத்ரி ஸ்துதி
ஸாவித்ரீ வேத மாதாச காயத்ரீ ச ஸரஸ்வதீ |
ஸாங்க்ரு2தீ ப்3ராஹ்மணீ ஸாத்4வீ ஸதா3ஸர்வார்த்த ஸாத4நீ ||
ஸஹஸ்ராக்ஷீதி நாமாநி ஜபாத் பாப ஹராணிச ||
ஆயிரம் முறை இந்த நாமங்களை ஜபம் செய்ய பாபங்கள் விலகும்.: ஸாவித்ரீ, வேத மாதா, காயத்ரீ, ஸரஸ்வதீ ,ஸாங்க்ரு2தீ, ப்3ராஹ்மணீ , ஸாத்4வீ , ஸதா3ஸர்வார்த்த ஸாத4நீ.
கருட புராணம்.
ஸ்லோகங்கள் நிறைவடைந்தன.
தர்மம் உற்பத்தி ஸ்தானம் ன்னா புரியலை. ....
// இப்படியாக தர்மமானது அர்த்தம் காமம் ஆகியவற்றுக்கு உற்பத்தி ஸ்தானம் ஆகும்.//
அதான் புரியலை. தர்மத்தைக் கடைப்பிடிக்கிறதுன்னா நாம காமத்தை விட்டு விலகித் தானே ஆகணும்? மனதில் ஆசைகளே இருக்கக் கூடாது இல்லையா? எதிர்பார்ப்பும், பற்றும், அனைத்திலும் ஆசைகளும், சம்பாதிக்கிறதில் ஆசை, அநுபவிப்பதில் ஆசை, கணவன், மனைவியின் காதல், குழந்தைகளிடம் பாசம், னு இருப்பது தானே காமம்?? அதைத் தானே விலக்கணும்? தர்மம் அதுக்கு உற்பத்தின்னா இன்னும் எனக்குச் சரியாப் புரியலை.
இப்படி ஒரு கேள்வி எழுந்து இருக்கிறது. இதே கேள்வி பலருக்கும் இருக்கக்கூடும் என்பதால் பதிவாகவே இடுகிறேன்.
நாம் தர்மத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
சாஸ்திரங்கள் ப்ராக்டிகலானவை. மனிதன் வாழ நான்கு புருஷார்த்தங்களை அடையச்சொல்லுகிறது. அவையே தர்ம அர்த்த காம மோக்ஷம் என்பவை. அறம் பொருள் இன்பம் வீடு என்றும் சொல்லலாம்.
தர்மம் நாம் எப்படி இருக்க வேண்டும் என்னவென்ன செய்ய வேண்டும் என்று சொல்லுகிறது. அர்த்தம் சம்பந்தப்பட்டது பொருள் ஈட்டுவதில். காமம் இயற்கையான உண்டாகும் உணர்வுகள். மோக்ஷம் இவ்வுலக வாழ்வையே நினைத்துக்கொண்டு இராமல் இறைவனைப்பற்றியும் இந்த பிறப்பு இறப்புகளில் இருந்து தப்பிப்பது எப்படி என்றும் விசாரிப்பது.
சாதாரணமாக மக்கள் வாழும் வாழ்க்கையில் கட்டுப்படுத்த வேண்டியது அர்த்தமும் காமமும். அவற்றின் ப்ரவாகத்தை தர்மமும் மோக்ஷமும் நதியின் கரைகள் போல இருந்து கட்டுப்படுத்தி திசை செலுத்துகின்றன. ஆசைகள் அற்று இருப்பது சாதாரணமான மனிதனின் இயல்பு அல்ல. ஆனால் ஆசையை ஒரு கட்டுக்குள் வைக்க தர்மம் உதவும். ஒரு பெண்ணை அடைய இச்சை உண்டாவது இயற்கை. ஆனால் அதை ஒரு திருமண பந்தம் என்ற கட்டுக்குள் செய் என்கிறது தர்மம். பொருள் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பது இயற்கை. அதை நியாயமாக செய் என்கிறது தர்மம்.
தர்மம் எல்லோரையும் சன்னியாச வாழ்கை வாழ சொல்லவே இல்லை. மக்களை நான்கு விதமாக பிரித்து மாணவன், இல்லறத்தான், வானப்ரஸ்தன், சன்னியாசி என்று அவரவருக்கு கடமை விதித்து இருக்கிறது. இல்லறத்தானுக்கு காலை எழுந்தது முதல் குளியலில் ஆரம்பித்து நித்ய கர்மாக்களை சொல்லி பூஜை முடித்த பின் சம்பாதிக்கப்போ என்று தெளிவாகவே சொல்கிறது. ஏன்? அவனுக்கு அதற்கு அவசியம் இருக்கிறது. அவனுக்கு மட்டுமில்லாமல் பிக்ஷை கேட்டு வரும் மாணவன், சன்யாசி இவர்களுக்கும் உணவிட வேண்டும். அதிதிகளுக்கு உணவிட வேண்டும். சம்பாதித்தால்தானே இதெல்லாம் முடியும்?
உலகம் தொடர்ந்து செயல்பட ப்ரஜைகள் உற்பத்தி ஆக வேண்டுமே? அதனால் காமம் அவசியமாகிறது. ஸ்ரீமத் பாகவதத்தை பார்த்தால் முதலில் படைக்கப்பட்டவர்கள் எல்லாரும் ஞானிகளாகி ப்ரஜைகளை உற்பத்தி செய்யாமல் போய் விடுகிறார்கள். பிரஜையை உற்பத்தி செய்வது க்ருஹஸ்தனின் தர்மமாக சொல்லப்படுகிறது. தர்மப்படி யாகங்கள் செய்யப்படலாம். அதிலும் இது வேண்டும் அது வேண்டும் என்ற காமமும் இருக்கிறது. ஸ்வர்க்கம் வேண்டுமென்ற காமத்தால் யாகங்கள் அனுஷ்டிக்கப்படும் அதே நேரம் அதனால் உலகத்துக்கும் நன்மை ஏற்படும். மேலும் மேலும் பொருள் சேர்த்தாலும் இவ்வளவு பாகம் தர்மத்துக்கு எனும் போது அது நன்மையே செய்யும்.
இப்படியாக தர்மம் அர்த்தத்தையும் காமத்தையும் தூண்டுவதுடன், உற்பத்தி ஸ்தானமாக இருப்பதுடன் அவற்றை கட்டுக்குள் வைத்து இருக்கவும் உதவுகிறது.
Tuesday, July 6, 2010
70. ஸேது தர்சனத்தில்:
பாரத ஸாவித்ரீ-2
நம் பெரியோர்கள் எந்த விஷயங்களை முக்கிய நோக்கங்களாக வைத்துக்கொண்டு ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று கருதினார்களோ, அவற்றை ஒருவன் காலையில் எழுந்ததும் ஸ்மரிப்பது அவன் கடமை என நூல்களில் சொல்லுவது வழக்கம். அந்த ஸ்லோகங்களை பிரதி தினம் படிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கின்றபடியால் இவற்றில் அடங்கியுள்ள கருத்துக்கள் நம் தேசத்தில் உள்ள எல்லா மக்களின் வாழ்க்கைக்கும் அடிப்படைத் தேவை என்பதில் ஐயமில்லை. இந்த நான்கு ஸ்லோகங்களின் கருத்துக்களைத்தான் வியாஸ பகவான் உலகத்தாருக்குச் செய்யும் முக்கிய உபதேசமாகத் தீர்மானித்திருக்கிறார். அவையாவன:
1. மாதாபித்ரு ஸஹஸ்ராணி புத்ர தா3ர ஸ2தாநி ச |
ஸம்ஸாரேஷ்வநு பூ4தாநி யாந்தி யாஸ்யந்தி சாபரே ||
இவ்வுலகில் ஒரு ஜீவன் எண்ணிறந்த பிறப்பு இறப்புக்களை அனுபவிக்கிற படியால் இந்த அனாதியான ஸம்ஸார வாழ்க்கையில் பல ஆயிரக்கணக்கான தாய் தந்தையர்களையும் பிள்ளை பெண்டிர்களையும் பார்த்து பழகி இருக்கிறான். இனி வரும் பல பிறப்புக்களிலும் இவர்களிடம் பழகப்போகிறான். ஆதலால் உலகம் அநித்யம்.
2. ஹர்ஷ ஸ்தா2ன ஸஹஸ்ராணி ப4ய ஸ்தா2ந ஸ2தாநிச |
தி3வஸே தி3வஸே மூட4மா விஸ2ந்தி ந பண்டிதம் ||
இந்த ஜீவனுக்கு ஸந்தோஷத்திற்கும் பயத்திற்கும் பல இடங்களில் பல காரணங்கள் ஏற்படுகின்றன. ஆனால் அவையெல்லாம் அறிவில்லாதவனைத்தான் ஆட்கொள்ளுமே தவிர விவேகமுள்ளவனை அணுகா.
3.ஊர்த்வ பாஹுர் விரௌம்யேஷ ந ச க: சிச் ச்2ருணோதி மே |
த4ர்மாத3ர்த2 : ச காம: ஸ கிமர்த்2ம் ந ஸேவ்யதே ||
இரு கைகளையும் உயரத்தூக்கிக்கொண்டு நான் இதைக்கத்துகிறேன். ஆனால் ஒருவனும் கேட்கிறான் இல்லை. அதாவது: - தர்மத்தில் இருந்துதான் அர்த்தமும் காமமும் உண்டாகின்றன. அப்படி இருக்க ஏன் தர்மம் அனுஷ்டிக்கப்படவில்லை?
4. ந ஜாது காமாந் ந ப4யாந் ந லோபா4த் த4ர்மம் த்யஜேஜ்ஜீவிதஸ்யாபி ஹேதோ: |
நித்யோ த4ர்மஸ் ஸுக2 து3: கே2த்வ நித்யே ஜீவோ நித்யோ ஹேதுரஸ்யத்வ நித்ய: ||
ஒரு பொழுதும் காமத்தினாலாவது பயத்தினாலாவது, உலோபத்தினாலாவது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தர்மத்தை விடக்கூடாது. தர்மம் எப்போதும் நிலையாக உள்ளது. சுகமும் துக்கமும் நிலையில்லாதவை. ஜீவன் நித்தியமாக உள்ளவன். ஆனால் உடல் நித்தியமில்லை.
இக்கருத்துக்களை பின்பற்றி மனிதன் தன் வாழ்க்கையை நடத்திக்கொண்டு வர வேண்டுமென்பது நம் பாரத தர்மத்தின் அடிப்படியான நோக்கமாகும்.Monday, July 5, 2010
69. காவேரி மஹிமை:
69. காவேரி மஹிமை:
த்ரிராத்ரம் ஜாஹ்நவீ தீரே ஸப்த ராத்ரந்து யாமுனே|
ஸத்3ய: புநாதி காவேரீ பாபம் ஆமரணாந்திகம்||
Sunday, July 4, 2010
பாரத ஸாவித்ரீ-1
பாரத ஸாவித்ரீ
சாதாரணமாக ஸாவித்ரீ என்ற பதம் ஸந்த்யோபாஸனத்தில் உள்ள ஸவித்ரு தேவதையை உத்தேசித்த முக்கியமான காயத்ரீ மஹாமந்திரத்தைக் குறிக்கிறது. அந்த மந்திரமில்லாமல் ஸந்த்யோபாஸனமே கிடையாதாகையால் லக்ஷணையாக ஸாவித்ரீ என்ற பதம் ஸந்த்யோபாஸனத்தையே குறிக்கலாம். காலையில் எழுந்திருந்து இந்த ஸ்லோகங்களை படிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறபடியால் இது ஸந்த்யோபாஸனத்திற்கு சமமாக ஆகின்றது. இந்த ஸ்லோகங்கள் பாரதத்தில் உள்ளபடியால் இதற்கு "பாரத ஸாவித்ரீ" என்று பொருத்தமாக பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என நாம் கருதலாம்.
பாரதத்திற்கு உரையாசிரியரான நீலகண்டரும் "காலை சந்த்யையில் பாரதம் படிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. பிரதி தினம் படிப்பதற்கு தகுதியானவையும் பாரத ஸார ஸங்கிரமாகவும் உள்ள இந்த நான்கு ஸ்லோகங்களையும் கட்டாயம் படிக்க வேண்டும்" என்று எழுதியுள்ளார். அந்த ஸ்லோகங்களை இனி வரிசையாக பார்க்கலாம்.
Saturday, July 3, 2010
68. முக்தி இடங்கள்:
68. முக்தி இடங்கள்:
த3ர்சனாத்3 அப்4ர ஸதஸி ஜநநாத் கமலாலயே |
காஶ்யாந்து மரணாத் முக்தி: ஸ்மரணாத் அருணாசலே||
Friday, July 2, 2010
67.ப்ரதக்ஷிணம் செய்யும் போது:
Thursday, July 1, 2010
66. சாப்பிட்டவுடன் ஜீர்ணமாக
66. சாப்பிட்டவுடன் ஜீர்ணமாக:
வாதாபி ரக்ஷோ ப4க்ஷஸ் த்வம் விந்த்3யபர்வத க3ர்வஹா|
ஸமுத்3ர தீர்த்த2 பாநாசு ஜீர்ணங்குரு ம்மாஶநம் ||
Subscribe to:
Posts (Atom)