Pages

Wednesday, July 14, 2010

யோகத்தில் உள்ளபோது...



  तदा दृष्टुः स्वरूपेऽवस्थानम् ।।3।।
ததா³ த்³ரு«ஷ்டு​: ஸ்வரூபே'வஸ்தா²நம் || 3||
அப்படி செய்யும் போது [சைதன்யமான (இயங்கு சக்தியாக) உள்ள புருஷனுக்கு] தன் சொந்த வடிவில் இருப்பு ஏற்படுகிறது.
போன சூத்திரம் சுலபமா இருந்தது. உடனே அடுத்தது டெக்னிகல் ஆயிடுத்து! அப்படி செய்யும் போது ....- புரியுது. சித்தத்தை அடக்கும்போது. சைதன்யம்? புருஷன்? சைதன்யம் என்பது இயக்கு சக்தி. எது நம்மை –உடம்பை, மனசை- இயக்குகிறதோ அது. புருஷன் என்பது இங்கே (யோக சாஸ்திரத்தில்) ஜீவாத்மாவை குறிக்குது. ஜீவாத்மாவை 'கண்ணைக்கட்டி', தான் வேற ஏதோ ன்னு நினைக்க வெச்சதே இந்த அந்தக்கரணம்தான். மனசு, சித்தமெல்லாமே அந்தக்கரணம்தான். அதனால அந்தக்கரணம் நிற்கும் போது, தான் சொந்த நிலையில் இருப்பது ஜீவனுக்கு தெரிஞ்சு போகும்.

  वृत्तिसारूप्यमितरत्र ।।4।।
வ்ரு«த்தி ஸாரூப்யமிதரத்ர || 4|| 

ஏனைய (யோகமில்லா) காலத்தில் [புருஷனுக்கு சாத்விகம், ராஜசம், தாமஸம் முதலிய] வ்ருத்திகளோடு ஒன்றாய் இருக்கும் தன்மை ஏற்படுகிறது.

சரி அப்ப ஜீவன் யோகத்திலே இல்லாத போது எப்படி இருக்கும்? ஏதோ எண்ணங்கள் ஓடிகிட்டே இருக்கு. அந்த எண்ணங்கள் சாத்விகமா இருக்கலாம்; ராஜசமா இருக்கலாம்; தாமசமா இருக்கலாம். எப்படி இருந்தாலும் அது கண்ணாடியில் அழுக்கு இருக்கிறாப்போல இருக்கு. இந்த அழுக்கை நீக்குவது ரொம்ப கடினமான வேலையே. நல்லாவே ஒட்டிகிட்டு இருக்கும்.

இந்த ராஜசம் தாமசம் சாத்விகம் எல்லாம் என்ன?

5 comments:

Geetha Sambasivam said...

இந்த ராஜசம் தாமசம் சாத்விகம் எல்லாம் என்ன?//

ஏற்கெனவே சொன்னது தானே இங்கேயும்?????????????

sury siva said...

//இந்த ராஜசம் தாமசம் சாத்விகம் எல்லாம் என்ன?//



பிரும்ம ஸூத்ரத்திற்கு ஒரு பாஷ்யம் எழுதுவதோ அல்லது ஒரு தெளிவுரை அல்லது பத உரை கூற துவங்குவது
ஒரு பகீரதப்ரயத்னம் என்று தான் சொல்லவேண்டும்.

ஏகாக்ர சித்தமுடன் தாங்கள் துவங்கி இருக்கும் கார்யம் ஸித்தி அடைய ஈஸ்வரனை ப்ரார்த்திக்கிறேன்.

விருத்திகள் தமஸ், ரஜோ, ஸாத்வீகம்
ஆகும். இந்த மாதிரி வார்த்தைகளுக்கு பொதுவான லெளகீக அர்த்தங்கள் இருப்பதால், இவைகளுக்கு மேல் விளக்கம் அளித்தால் நல்லது.

குறிப்பாக,
தமஸ் விருத்திகள். : கோப, தாப, பாவ எண்ணங்களுடன் அறியாமையும் கலந்தது.
ரஜோ விருத்திகள்: ஆக்கம், ஊக்கம், போராடி ஜெயிக்கவேண்டும் என்ற எண்ணம், அடக்கி ஆளவேண்டும் என்ற
எண்ணங்கள்
ஸாத்வீக விருத்திகள்: கல்வி, தியாகம், தெய்வீகம், ஸமத்வம் , சாந்தம் ஆகிய எண்ணங்களுடன் தன்னை இணைத்துக்கொள்தல்.

ஒரே மனிதன் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு விருத்திகளைத் தானாக எண்ணிக்கொண்டு அல்லது
அவைகளுடன் தன்னை இணைத்துக்கொண்டு, அதற்கேற்ப, சுக துக்கங்களை, த்ருப்தி நிலைகளை அவை தரும்
பலனை அடைகிறான்.

சுப்பு ரத்தினம்.
http://kandhanaithuthi.blogspot.com

திவாண்ணா said...

சூரி சார் வாங்கோ! தன்யனானேன்!
தங்கள் வாழ்த்து மிகுந்து உற்சாகம் அளிக்கிறது.

ரெடாரிகலா கேள்வியை போட்டுட்டேன்.நீங்க நல்லாவே அனலைஸ் பண்ணி இருக்கீங்க!

முன்னேயே இதை எல்லாம் பக்தி பதிவிலே பாத்தாச்சு.
http://anmikam4dumbme.blogspot.com/2008/04/blog-post_17.html
மேலும் கொஞ்சம் ஞான பதிவிலே
http://anmikam4dumbme.blogspot.com/2009/02/blog-post_18.html

நன்றி.

தக்குடு said...

@ Geetha pati - //ஏற்கெனவே சொன்னது தானே இங்கேயும்?????????????//

அதான் தெரியுமே!!னுதானே உங்க கிட்ட இருந்து வழக்கமா கமண்ட் வரும்...:)

Geetha Sambasivam said...

அன்றாடவாழ்க்கைக்கு இசைந்து சூரி சார் எழுதி இருப்பது பொருத்தமா இருக்கு. நன்றி.