स तु दीर्घकालानैरन्तर्य्यसत्कारसेवितो दृढभूमि ।।14।।
ஸ து தீ³ர்க⁴காலா நைரந்தர்ய்ய ஸத்கார ஸேவிதோ த்³ரு«ட⁴பூ⁴மி || 14||
அந்த பயிற்சியானது நீண்ட காலமும் இடைவிடாதும் ஶ்ரத்தை , பிரமசர்யம், தவம் இவற்றுடன் பல வழிகளிலும் செய்யப்பட வேண்டியது. அப்படி செய்யும் போது அது திடப்படுகிறது.
குருவிடமும் சாஸ்திரத்திடமும் விஶ்வாசத்துடனும், வரும் இடையூறுகளை பொருட்படுத்தாமலும் இடைவெளியில்லாமல் அப்பியாசிக்க வேண்டும். ஒரு காட்டுக்காளையை போன்றது சித்தம். காளையை வண்டியில் கட்டி சவாரி செய்ய விருப்பமுள்ளவன் காளையை அதன் விருப்பப்படி ஓட விடமாட்டான். வண்டியில் கட்டும்போது சண்டித்தனம் பண்ண இடம் தர மாட்டான். முயற்சியை கைவிடமாட்டான். முடியாதுன்னு தோணும்போது முன்னே செய்து வெற்றி அடைஞ்சவர்களை பாத்து நம்பிக்கை கொள்வான். மெள்ள மெள்ள அதை எப்படியும் வசப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன் அதை வழிக்கு கொண்டு வருவான்.
3 comments:
படிச்சாச்
முதலில் நியமம் உதவறது. ரெகுலரா நாமஸ்மரணம்,intergrity,உள்ளத்தூய்மை, விரதம் prayer,mindfulness,scriptures இப்படி பல! இது நிறையவே ஹெல்ப் பண்ணறது இல்லையா. மனசை நிக்க வைக்க ப்ரயத்தனம் பண்ணறதை விட source ஐ நோக்கி திசை திருப்பற வழி நிறைய அமைதியை தரது. கொஞ்சம் உள் நோக்கையும் தரது.எனக்கு சில சமயம் தோனறது தவம்னா காட்டுக்கு போய் மூச்ச பிடிச்சு இல்லை இடைவிடாத தெய்வ சிந்தனைனு. திட்டு வசவு சந்தோஷம் எல்லாத்தையும் தெய்வத்தோட ஷேர் பண்ணிக்கற்து.கர்மம், பக்தி மார்கம் சக மார்கத்துக்கு கொண்டு செல்கிறமாதிரி ப்ரமையோ என்னவோ, ஒரு எண்ணம். ஞானத்துக்கும் வழிகாட்டும் என்று நம்பிக்கை. குரு வெளிதோற்றம் இல்லை நமக்குள்ள இருக்கிற ஒன்று.காய்கறி கடைல ஆரஞ்சு பழத்தை பார்த்து பார்த்து எடுக்கும்போதும் காமென்ட் அடிச்சுட்டு போறார்!:)) கேட்கறவா கேட்போம் :)) நாம சந்திக்கற ஒவ்வொருத்தரின் மூலமாவும் கத்துக்க வைக்கறது. ஒவ்வொருத்தரும் ஒரு கண்ணாடி நம்மை ப்ரதிபலிக்க. fine tuned ஆ இருந்தா, humility இருந்தா "கேட்கிறோம், " க்ரஹிச்சுக்கறோம் சின்ன குழந்தையில் கூட குரு சொல்லிதருவதை பார்க்க ஆனந்தம். இப்ப இணையத்துலசிலரிடமிருந்தும் நிறைய கத்துக்கறேன் நன்றியோட இருக்க தெய்வம் வைக்கணும்.
ஆஹா! இப்படி சிந்தனையை தூண்டி விடுவதே பதிவுக்கு வெற்றி!
Post a Comment