प्रत्यक्षानुमानागमाः प्रमाणानि ।।7।।
ப்ரத்யக்ஷாநுமாநாக³மா: ப்ரமாணாநி || 7||
பிரமாணம் என்பதென்ன? பிரத்யக்ஷம் (நேரடி அனுபவம்), அனுமானம் (ஊகம்), ஆகமம் ஆகியன பிரமாணங்கள் ஆகும்.
(அனுபவத்தால் உண்டானதை மற்றதற்கு பொருத்தி பார்ப்பது ஆகமம்.)நம் கண் காது முதலான புலன்களாலே சிலதை அறிஞ்சு கொள்கிறோம். இது நேரடி அனுபவம். இது ஒரு பிரமாணம்.
முன் அனுபவத்தாலே சிலது தெரிஞ்சுக்கிறோம். நெருப்பை நேரடியா பார்த்து இது நெருப்புன்னு தெரிஞ்சு கொள்கிறோம். இது ப்ரத்யக்ஷம். முன் ஒரு முறை நெருப்பு இருக்கிற இடத்தில் புகை இருக்குன்னு பார்த்தோம். இப்ப புகையை மட்டும் எங்காவது பார்க்கும் போது "ஓஹோ! இங்கே நெருப்பு இருக்கு" ன்னு ஊகம் செய்கிறோம். இது ஒரு வகை. நெருப்பு என்கிற வார்த்தையை கேட்கும்போது நேரடியா பாக்கலைன்னாலும் இந்த நெருப்பையும் புகையையும் சம்பத்தப்படுத்தி நினைக்கிறது ஆகமம்.
இவை அத்தனையும் பிரமாணம்.
विपर्ययो मिथ्याज्ञानमेतद्रूपप्रतिष्ठम् ।।8।।
விபர்யயோ மித்²யாஜ்ஞாநமேதத்³ ரூப ப்ரதிஷ்ட²ம் || 8||
ஒரு வஸ்துவின் உண்மை சொருபத்தை வெளிப்படுத்தாத பொய்யான ஞானம் விபர்யயம்.
இது பின்னால் மாறிவிடக்கூடியது. (சிப்பியில் வெள்ளி காண்பது) ஒரு பொருளோட "உண்மை" நிலையை தெரிவிப்பது யதார்த்த ஞானம். இல்லாத ஒரு நிலையை இருப்பதா காட்டுவது மித்யா ஞானம். கடற்கரையிலே ஒரு சிப்பி கிடக்குது. அது வெய்யிலில் பளபளக்கிறது ன்னு பார்த்து ஓ! இது ஏதோ வெள்ளியிலே பண்ண பொருள் ன்னு நினைக்கிறோம். இது மித்யா ஞானம் அல்லது விபர்யயம். கிட்டே போய் பார்க்க அது சிப்பின்னு தெரியுது. அப்ப நம் கருத்தை மாத்திக்கிறோம். இப்படி மாறுவதே விபர்யயத்தோட முக்கிய லக்ஷணம்.
5 comments:
Ivlo visayam irukkaa!
great service! thanks
Rajesh
நன்றி ராஜேஷ், தொடர்ந்து வருவதற்கு!
உதாரணங்கள் எளிமையா இருக்கிறதாலோ என்னமோ இது புரிஞ்சது! இல்லைனா லேசில் ஏறாது மண்டையிலே!
இங்கே ஆகமம்னு பார்த்ததும் கோயில்களின் ஆகமக் கலை நினைவில் வந்தது. இது வேறே அது வேறே இல்லையா, இங்கே to learn ங்க்ற பொருளில் எடுத்துக்கணுமோ?
ஆனைக்கு பெரிய வலுவான மண்டைதான். ஆனா எல்லாம் சுலபமா புரிஞ்சுடுமே! :P
Post a Comment