Pages

Friday, July 16, 2010

ஐந்து மனோ வ்ருத்திகள்:



वृत्तयः पञ्चतय्यः क्लिष्टाक्लिष्टा ।।5।।
வ்ரு«த்தய: பஞ்சதய்ய: க்லிஷ்டாக்லிஷ்டா || 5|| 

தாமசமும் ராஜஸமும் சாத்விகமும் ஆன மனோ விருத்திகள் ஐந்து வகையாகும்.

மனசோட வளர்ச்சி- விரிவு - ஐந்து விதமாம். அவை சாத்விகமாகவோ ராஜசமாகவோ தாமசமாகவோ இருக்கலாம்.
 ஏதோ க்ளிஷ்டா ன்னு சொல்லி இருக்கே? மன பாதிப்பு. [மனக் கிலேசம் என்ற வார்த்தை இதை ஒட்டினதே.] ராஜச, தாமஸ மனோ வ்ருத்திகள் வீண் மன பாதிப்பை செய்வதால் அவை கிலிஷ்டா. இதனால் சுக, துக்கங்கள் உண்டாகும்.
சாத்விக மனோ வ்ருத்தி செய்கிற பாதிப்பு வீண் இல்லை. அதனால் அது அக்லிஷ்டா. இந்த வகை மன வளர்ச்சியால் தான் யார் என்கிறது மறந்து போனாலும் இது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.

प्रमाणविपर्ययविकल्पनिद्रास्मृतयः ।।6।।
ப்ரமாண விபர்யய விகல்ப நித்³ரா ஸ்ம்ரு«தய: || 6|| 

இவை (சித்த விருத்திகள்) பிரமாணம், விபர்யயம், விகல்பம், நித்திரை, ஸ்ம்ருதி ஆகியன.
இதெல்லாம் என்னன்னு அடுத்து வருகிறது.

11 comments:

Jayashree said...

ரஜ தமோ சத்வ -3; க்லிஷ்டா, அக்லிஷ்டாவோட சேத்து 5 ங்கறதா? புரியல்லையே. அது கொஞ்சம் சொல்லுங்கோளேன் please.

திவாண்ணா said...

இல்லை அக்கா! மொத்தம் 5 வ்ருத்திகள். அவற்றை ரஜோ தமோ சத்வ வ்ருத்திகள் ன்னு பிரிக்கலாம். இதில் ரஜோ வ்ருத்தியும் தமோ வ்ருத்தியும் க்லிஷ்டா. சத்வ வ்ருத்தி அக்லிஷ்டா.
அடுத்து லிஸ்ட் வரது. அப்புறமா ஒவ்வொண்ணைப்பத்தியும் வரும். அப்போ இன்னும் சரியா விளங்கும்.

திவாண்ணா said...

அக்கா பதிவை கொஞ்சம் திருத்தி எழுதி இருக்கேன். இப்படி சந்தேகங்களை தாராளமா கேளுங்க. அப்பதான் என் எழுத்தை இன்னும் திருத்திக்கொள்ள உதவும்.

Geetha Sambasivam said...

இந்த வகை மன வளர்ச்சியால் தான் யார் என்கிறது மறந்து போனாலும் இது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.//

தான் யார் என்பதை மறந்தால் மோக்ஷம்??? புரியலையே??? பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒண்ணாச் சேரும் ஐக்கிய பாவத்தைச் சொல்றீங்களோ?

திவாண்ணா said...

//தான் யார் என்பதை மறந்தால் மோக்ஷம்??? //
அப்படி சொல்லலையே!
சத்வ மனோ வ்ருத்தியானாலும் அது அஞ்ஞானம்தான். எந்த மனோ வ்ருத்தியானாலும் அது ஜீவனை அஞ்ஞானத்திலேதான் இருக்கப்பண்ணும். இந்த மனோ வ்ருத்திகள் நின்னா ஞானம் வந்திடும். அப்பதான் யார் என்கிறது புரியும்.அதுவே மோக்ஷம்.

ரஜோ தமோ மன வ்ருத்திகள் மோக்ஷத்துக்கு வழியை காட்டாது. சத்வ மனோ வ்ருத்தி ரஜோ தமோ வ்ருத்திகளை ஒழிச்சு பின்னால தானும் மெதுவா காணாம போய் மோக்ஷத்தை கொடுக்கும்.
சரிதானா?
http://anmikam4dumbme.blogspot.com/2009/07/blog-post_9663.html

http://anmikam4dumbme.blogspot.com/2010/04/26.html

Geetha Sambasivam said...

த்வ மனோ வ்ருத்தி ரஜோ தமோ வ்ருத்திகளை ஒழிச்சு பின்னால தானும் மெதுவா காணாம போய் மோக்ஷத்தை கொடுக்கும்.
சரிதானா?//
ம்ம்ம்ம் ஓகே

Geetha Sambasivam said...

பின்னுட பேட்டியிலேயே மொழிக்கான ஆப்ஷனும் வருதே?

Jayashree said...

அதாவது மனஸ் ல 3 குணம்
இதுல எல்லாமே உணர்ச்சிகளை உண்டாக்க கூடியது தானே?
ரஜஸ் தமோ சார்ந்த உணர்ச்சிகளை க்லிஷ்டா, அதாவது எனக்கு புரிஞ்சுக்றமாதிரி க்லேசம், சலனங்களை உண்டாக்க கூடிய உணர்ச்சிங்கறேளா? ஸாத்விக் நல்ல ஊணர்ச்சிகள் தூய்மையானவை சொல்லறேள் இல்லியா?
அதாவது, ஸாத்விக் வ்ருத்தியோட பாவனையை வளத்துண்டா, க்லிஷ்டா க்கள We can cleanse them ? right : So that helps in purification of mind . So aklishta is an effective tool in pursuit of divine.அததானே மோக்க்ஷத்துக்கு வழி வகுக்கறதுங்கறேள்?

என்னோட pea brain ல இப்படியும் தோனித்து Mr Dhiva. ஒரேமிக்க மத்த ரெண்டும் கெட்டதுதான் பண்ணனும்கறதில்லை. INTELLECT GUIDED ஆ அந்த க்லிஷ்ட உணர்ச்சிகளை புத்தி மூலமா ஆராய்ந்து மனஸை சத்வமா மாற உதவி, அப்படியும் மோக்ஷ்த்துக்கு வழி வகுக்கலாமே இல்லியா. எந்த ஒரு பாடமும் we don’t get to learn until we commit and experience .ஆனா ultimate ஆ மனஸ்ங்கறதும் wipe out ஆகணும். அப்படிபோறச்சே all these three qualities need to go as well whether good or bad - எல்லா வ்ருத்திகளும் போகணும். UNTIL THEN THEY ARE HELPFUL போலிருக்கு. Precisely மனஸ அப்படி எளிதா அடக்க முடியாது, நல்ல வழிக்கு கொண்டு வந்தா தானே அடங்கும். - சரியா?
சரி அடுத்த 3 என்ன அது எப்படி உதவும்னு சொல்லுங்கோ

திவாண்ணா said...

//அதாவது மனஸ் ல 3 குணம் // mmmஇப்போதைக்கு அப்படி வெச்சுக்கலாம்.

// இதுல எல்லாமே உணர்ச்சிகளை உண்டாக்க கூடியது தானே?//
ஆமாம்.
//ரஜஸ் தமோ சார்ந்த உணர்ச்சிகளை க்லிஷ்டா, அதாவது எனக்கு புரிஞ்சுக்றமாதிரி க்லேசம், சலனங்களை உண்டாக்க கூடிய உணர்ச்சிங்கறேளா? ஸாத்விக் நல்ல ஊணர்ச்சிகள் தூய்மையானவை சொல்லறேள் இல்லியா?//
அதேதான்.
//அதாவது, ஸாத்விக் வ்ருத்தியோட பாவனையை வளத்துண்டா, க்லிஷ்டா க்கள We can cleanse them ?//
at any given time one of the three will dominate. so by remaining saatvic- if you can- our actions will be mainly saatvic.

//right : So that helps in purification of mind . So aklishta is an effective tool in pursuit of divine.அததானே மோக்க்ஷத்துக்கு வழி வகுக்கறதுங்கறேள்? //
exactly.

//என்னோட pea brain ல இப்படியும் தோனித்து Mr Dhiva.//

dos not look like pea brain :-)) you caught the idea very well.

// ஒரேமிக்க மத்த ரெண்டும் கெட்டதுதான் பண்ணனும்கறதில்லை.//

நிச்சயமா! இப்ப உடல் உழைப்பால செய்ய வேண்டிய வேலைகளுக்கு ராஜ்சம், தாமசம் ரெண்டுமே தேவைப்படும். கட்டிட வேலை செய்யறவங்களை பாருங்க! இது ரெண்டும் இல்லைன்னா நாள் முழுக்க அப்படி வேலை செய்ய முடியாது!
// INTELLECT GUIDED ஆ அந்த க்லிஷ்ட உணர்ச்சிகளை புத்தி மூலமா ஆராய்ந்து மனஸை சத்வமா மாற உதவி, அப்படியும் மோக்ஷ்த்துக்கு வழி வகுக்கலாமே இல்லியா. எந்த ஒரு பாடமும் we don’t get to learn until we commit and experience .//

ஆமாம். இல்லைன்னா அது வெறும் intellectual gymnastics ஆ தான் இருக்கும்.
//ஆனா ultimate ஆ மனஸ்ங்கறதும் wipe out ஆகணும். அப்படிபோறச்சே all these three qualities need to go as well whether good or bad - எல்லா வ்ருத்திகளும் போகணும்.//

ஆமாம். அது அல்டிமேட்.

// UNTIL THEN THEY ARE HELPFUL போலிருக்கு.//
not necessarily. but they have their uses.
// Precisely மனஸ அப்படி எளிதா அடக்க முடியாது, நல்ல வழிக்கு கொண்டு வந்தா தானே அடங்கும். - சரியா?//
வந்தா, தானே...ஆமாம்.ரொம்ப கஷ்டம்.
//சரி அடுத்த 3 என்ன அது எப்படி உதவும்னு சொல்லுங்கோ//
அடுத்த பதிவிலே!

Geetha Sambasivam said...

Precisely மனஸ அப்படி எளிதா அடக்க முடியாது, நல்ல வழிக்கு கொண்டு வந்தா தானே அடங்கும். - சரியா?//

அது சரி, மனசை வழிக்குக் கொண்டு வரணும்னு நினைச்சாலும் எங்கே அடங்கறது? குதிரை மாதிரி திமிறிண்டு ஓடறதே? :(

திவாண்ணா said...

//அது சரி, மனசை வழிக்குக் கொண்டு வரணும்னு நினைச்சாலும் எங்கே அடங்கறது? குதிரை மாதிரி திமிறிண்டு ஓடறதே? :( //

விக்கிரமாதித்யன் கதை மாதிரிதான். திருப்பி திருப்பி முயற்சி பண்ணிகிட்டே இருக்கணும். அப்புறம் ஒரு நாள் அது அலுத்துப்போய் விட மாட்டாங்க போலிருக்கே ன்னு முணகிண்டு வழிக்கு வந்திடும்!