दृष्टानुश्रविकविषयवितृष्णस्य वशीकारसंज्ञा वैराग्यम् ।।15।।
த்³ரு«ஷ்டாநு ஶ்ரவிக விஷய வித்ரு«ஷ்ணஸ்ய வஶீகார ஸம்°ஜ்ஞா வைராக்³யம் || 15||
ஸ்த்ரீ, அன்னம், பானம், ஐஸ்வர்யம், முதலான பார்க்கக்கூடியதிலும்; வேதம் சொன்ன சொர்க்கம், பிரகிருதி, லயம், போன்ற பார்க்க முடியாத விஷயங்களிலும் ஆசையில்லாத சித்தம் "இவை எல்லாம் என்னை சேர்ந்தவை; ஆனால் நான் இவற்றை சேர்ந்தவனில்லை"ன்னு நம்மை அலைக்கழிக்கும் விஷயங்களை விலக்கும் புத்தி (உபேக்ஷை) வசீகார வைராக்கியம் (பற்றற்ற நிலை) ஆகும்.
இந்த வைராக்கியமே பல வகையானது. எது சாரமானது, எதில் சாரமில்லைன்னு குரு மூலமும், சாஸ்திரங்கள் மூலமும் தெரிந்து, அவற்றை விலக்க முயற்சி எடுப்பது யதமான வைராக்கியம். அப்படி முயற்சி செய்து "இதெல்லாம் விலக்கிவிட்டோம்; இதெல்லாம் இன்னும் விலக்கனும்" ன்னு அறிகிறது வியதிரேக வைராக்யம். இப்படியே போகும்போது நமக்கு 'இது நல்லது, இது கெட்டது' ன்னு ஒரு அபிப்ராயம் இருக்கும் இல்லையா? அதையும் விலக்குவது ஏகேந்திரிய வைராக்கியம். அதாவது நல்லது மேலே விருப்பமும், கெட்டது மேலே வெறுப்பும் கூட இல்லாம இருக்கிறது.
இந்த வைராக்கியங்கள் கூட போதாதாம். இவற்றால் ஞானம்ன்னு நினைச்சுகிற போலி குற்றமுள்ள - ஞானம் வரக்கூடுமாம். அதனால் சூத்திரம் சொல்லுவது நாலாவது வகையான வசீகார வைராக்கியம். அது என்னன்னு முதல்லேயே பார்த்தாச்சு இல்லையா?
No comments:
Post a Comment