अथ योगानुशासनम् ।।1।।
அத² யோகா³நுஶாஸநம் || 1||
[யோக சாத்திரத்தை பதஞ்சலி விளக்குகிறார்.] யோக சாஸ்திரம் தொடங்கப்படும்.
யோகம் என்பதென்ன?
योगश्चित्तवृत्तिनिरोधः ।।2।।
யோக³ஶ்சித்த வ்ரு«த்தி நிரோத⁴: || 2||
சித்தத்தின் விருத்தியை (வளர்ச்சியை) அடக்குதல் யோகம்.
சூத்திரங்களில் இதான் பிரச்சினை. சுலபமா சொல்லிவிட்டு போய் விட்டார்! இப்போது சித்த விருத்தி என்றால் என்ன? அடக்குவது என்றால் என்ன என்றெல்லாம் ஆராய வேண்டும். ஆராய்ந்து மிகச்சரியான விடை கண்டு பிடித்துவிட்டால் சாஸ்திரமே படித்ததாகும்! போகட்டும், நாம் இங்கே
மேலோட்டமாகத்தான் பார்த்துக்கொண்டு போகிறோம்.
சித்தம் என்பதென்ன? வேறு பதிவில் இதை பார்த்தோம். அந்தக்கரணத்தின் ஒரு பகுதி. எளிமையாக சொல்ல மனதின் வேறு வடிவம் எனலாம். எதையாவது யோசிக்க ஆரம்பித்து தொடர்ச்சியாக அதைப்பத்தியே யோசித்துக்கொண்டு போனால் அது சித்தம் ஆகும். சப்ஜெக்டை விட்டு வேறு வழியில் போவது இல்லை. சாதாரணமாக நாம் எதையாவது யோசிக்க ஆரம்பிக்கிறோம். சற்று நேரத்திலேயே வேறு எண்ணம் கிளைத்து வேறு எதையோ யோசித்துக்கொண்டு இருக்கிறோம். இதை சரியாக அறிய ஒரு சின்ன சோதனை செய்து பாருங்கள். இதை படிக்க ஆரம்பிக்கு முன் எதைப்பற்றி நினைத்துக்கொண்டு இருந்தீர்கள்? அதற்கு முன்? அதற்கு முன்? இப்படியே ஆராய்ந்தால் 5 நிமிடங்கள் முன் யோசிக்க ஆரம்பித்ததும் இப்போது யோசிப்பதும் இடையில் யோசித்தவையும் பலவாக இருக்கும். இப்படி பல வழியிலும் ஓடுவது மனசு.
மனம் போகிற போக்கில் விடாமல் மனசை கட்டுப்படுத்தி குவித்து சிதறாமல் ஒரே வழியில் ஓடுவது சித்தம். இப்படி சித்தம் தொடர்ந்து ஓடுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை கட்டுப்படுத்தி கடைசியில் நிறுத்திவிட்டால் அது யோகம்.
6 comments:
श्री गुरुब्यो नाम:அற்புதம் !!!
தாங்கள் அவ்வப்பொழுது Splendid பதிவுகள் போடுறேள்(மற்றவை எல்லாம் ஸரி இல்லை எனச் சொல்லவில்லை. எனக்கு relative ஆகச் சொன்னேன்). இது அந்த வகையில் ஒன்று. மிக்க ஆர்வத்துடன் இருக்கிறேன். இதில் ஒரு விண்ணப்பம்; keywords -கெல்லாம் கொஞ்சம் தாது சொல்லி இட்டேள் என்றால் இன்னும் ரசிக்கும் படியாக இருக்கும் என நினைக்கிறேன். சமஸ்கிருதத்தின் அழகும் தெரிய வரும். மற்றபடி இப்பணி மகத்தானது.
பச்சை எழுத்திலே என்ன எழுதி இருக்கீங்கன்னு என்னோட சித்தம் அதிலேயே ஓடிண்டு இருந்தது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பச்சை தெரியவே இல்லை, கறுப்பு, நீலம், சிவப்புக் கலரில் போட்டிருக்கலாம், இல்லாட்டியும் வெள்ளையே பரவாயில்லை. :((((((((( நல்லவேளையாக் குழுமத்திலே படிக்க முடியும்!
வாங்க விஜயராகவன்! தாது சொல்லும் அளவு சம்ஸ்க்ருத ஞானம் போதாது. பார்க்கலாம்.
இப்ப பச்சைய பிரச்சினைய சொல்லிட்டீங்களா?
:-))
சரிதான்! டெம்ப்லேட் மாத்தினப்பறம் பச்சைலே போடக்கூடாதுன்னு நினைவு இருக்கிறதில்லை. வயசு ஆகலைன்னாலும் ....கொஞ்சம் மறதி!
வயசு ஆகலைன்னாலும் ....கொஞ்சம் மறதி!//
grrrrrrrrrrrrrrrrr//
id, password ketkuthu, athuku thaniya grrrrrrrr
ப்ளாகர் அப்பப்ப கேக்குது. செட்டிங்கில் ஒண்னும் இல்லை. அதோட சொந்த முயற்சி! நான் ஒண்ணும் பண்ண முடியாது.
Post a Comment