Pages

Saturday, July 24, 2010

வைராக்கியம்



अभ्यासवैराग्याभ्यां तन्निरोधः ।।12।।
அப்⁴யாஸவைராக்³யாப்⁴யாம்° தந்நிரோத⁴​: || 12||

இந்த விருத்திகளை அடக்கி தன் சுய நிலையில் நிற்பது பயிற்சியாலும், பற்றின்மையாலும் இயலும்.


யோகம் என்கிறது சித்தத்தை நிறுத்துவதுன்னு சொல்லியாச்சில்ல? அத எப்படி நிறுத்தறது என்பதே கேள்வி.
வைராக்கியம் என்கிறது பற்றின்மை. தப்பா பிரயோகத்திலே வந்துடுத்து. அதை திடம் (determination) என்கிற அர்த்தத்திலே பயன்படுத்தறோம். உலக சம்சாரங்களில பற்றை விட்டுவிட்டு தொடர்ந்து அப்பியாசம் - பயிற்சி செய்ய சித்தம் நின்று யோகம் உண்டாகும். அதெப்படி பற்று விடறதுன்னா – புலன்கள் எது பின்னால ஓடுதோ அதிலே இருக்கிற குற்றங்களை- தோஷங்களை பார்க்க ஆரம்பிக்கணும். ஆமாம்; துரியோதனப் பார்வை வேணும். அல்லது குணங்களை விமர்சிக்கணும். இப்படி செய்வதை பழக சித்தத்திற்கு வெளியே செல்லும் நாட்டம் குறைந்து போகும். இது விருத்தி நிரோதம் ஆகும்.
நமக்கு சக்கரை வியாதி இருக்கு. ரொம்ப பிடிச்ச மை.பா வை பார்கிறோமா? இதை இப்ப சாப்பிடலாம், ஆனா அப்புறம் சர்க்கரை அதிகமாகி யார் அவஸ்தை படுகிறதுன்னு எண்ணம் வரணும்
ஒத்தனுக்கு சோறு சில நாட்கள் கிடைக்கலை. காட்டு வழியிலே போகும் போது அங்க இலை போட்டு நல்ல சாப்பாட்டு போட்டு வெச்சு இருக்கு. சாப்பிட ஆசைதான். அப்ப இன்னொருத்தன் வந்து சொல்கிறான், "ஏம்பா, ஆளில்லாத வனத்தில இப்படி சாப்பாடு போட்டு வெச்சு இருக்குன்னா ஏதோ சூது இருக்குன்னு புரிஞ்சுக்க வேணாமா? இதை கேட்டு உணர்ந்த சாப்பிட உட்கார்ந்த ஆசாமி ஒடிப்போயிடறான். பசியாக இருந்தாலும் இப்படி அறிவு வந்துவிட்டா மனசு திரும்பிவிடும். இதப்போல விஷயத்தில் குற்றங்களை காண்பதால் ஏற்படுவது வைராக்கியம். இல்லாவிடில் ரஜோ விருத்தி அடங்கியதால் தமோ விருத்தி மேலோங்கும். சித்தமும் லயமாகிவிடும். இது நித்திரையாகும்.


2 comments:

Geetha Sambasivam said...

வைராக்கியம் என்கிறது பற்றின்மை. தப்பா பிரயோகத்திலே வந்துடுத்து. அதை திடம் (determination) என்கிற அர்த்தத்திலே பயன்படுத்தறோம்//

ரொம்ப நாட்களா அகராதியிலே பார்க்கிறதுக்கும், சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கேனு இதைக் கேட்கணும்னு நினைச்சது. இப்போத் தெளிவாயிடுச்சு, நன்றி.

Geetha Sambasivam said...

இதப்போல விஷயத்தில் குற்றங்களை காண்பதால் ஏற்படுவது வைராக்கியம். இல்லாவிடில் ரஜோ விருத்தி அடங்கியதால் தமோ விருத்தி மேலோங்கும். சித்தமும் லயமாகிவிடும். இது நித்திரையாகும்//

இதான் புரியலை. ரஜோ விருத்தி அடங்கி தமோ விருத்தி மேலோங்குவது நல்லதா? இல்லாட்டி சமாதிக்குள்ளே செல்ல இது ஆரம்ப கட்ட நிலையோ???