Pages

Thursday, July 29, 2010

ஸம்ப்ரக்ஞாத ஸமாதி.



वितर्कविचारानन्दास्मितारूपानुगमात् संप्रज्ञातः ।।17।।

விதர்க விசாராநந்தா³ ஸ்மிதாரூபாநு க³மாத் ஸம்°ப்ரஜ்ஞாத: || 17||

விதர்கம் (பருப்பொருளை காணல்), விசாரம் (ஸூக்ஷ்ம வடிவை சிந்தித்தல்) ,ஆனந்தம் (ரஜோ, தமோ சம்பந்தம் சிறிது இருக்கும் போது இந்திரியங்களால் அறியப்படும் ஆனந்தம்), அஸ்மிதை (சித்தம் மட்டுமே உள்ளதென அறிதல்) இவை சொரூபத்துடன் சேர்ந்து இருப்பதால் உண்டாவது ஸம்ப்ரக்ஞாத ஸமாதி.

மற்ற விஷயங்களின் கலப்பில்லாமல் சித்தத்தை ஒரு விஷயத்தில் வைப்பது பாவனை ஆகும்.
பாவனை ஒரு பருப்பொருளில் இருக்கலாம். இது விதர்க்கம். ஒரு லிங்கம் (குறி), தெய்வ வடிவம், ஜ்யோதி இப்படி. இதுக்கு ஒரு உருவம் இருக்கும். ஒரு சப்தம்- சொல்- அதை குறிக்கும். இந்த பாவனையோட அடைகிறது ஸவிதர்க்கம்.
அல்லது பாவனை பருப் பொருளில் இல்லாம இருக்கலாம். இதுக்கு முன்னோ பின்னோ ஒரு தோற்றம் இராது. இதை எந்த சொல்லும் குறிக்காது. இந்த பாவனையோட அடைகிறது நிர்விதர்க்கம்.
பாவனை கண்ணுக்கு தெரியாத ஸூக்ஷ்மமான பொருளில் இருக்கலாம். ஸூக்ஷ்ம வஸ்துவை சாக்ஷாத்கரிப்பது விசாரம் ஆகும். தன் மாத்திரை (ஆகாசம் முதலான பஞ்சபூதங்கள் ஸ்தூலமாக உண்டாகும் முன் இருக்கிற ஸூக்ஷ்ம நிலை), அந்தக்கரணம் இவற்றோட ஸூக்ஷ்ம வஸ்துவை விஷயமா எடுத்து கொண்டு பாவனை செய்யலாம். இது ஸவிசாரம். இதோட தேசம், காலம் சேரலைன்னா அது நிர்விசாரம்.

2 comments:

Geetha Sambasivam said...

ஸூக்ஷ்ம வஸ்துவை சாக்ஷாத்கரிப்பது விசாரம் ஆகும். தன் மாத்திரை (ஆகாசம் முதலான பஞ்சபூதங்கள் ஸ்தூலமாக உண்டாகும் முன் இருக்கிற ஸூக்ஷ்ம நிலை), அந்தக்கரணம் இவற்றோட ஸூக்ஷ்ம வஸ்துவை விஷயமா எடுத்து கொண்டு பாவனை செய்யலாம். இது ஸவிசாரம். இதோட தேசம், காலம் சேரலைன்னா அது நிர்விசாரம்.//

புரியலையே??? :(((( சுக்ஷ்ம வஸ்துவை சாக்ஷாத்கரிப்பதும் விசாரம், அப்புறமா தன்மாத்திரை, அந்தக்கரணம் இவற்றோடயும் சூக்ஷ்ம வஸ்துவை எடுத்துக்கலாம்னும் சொல்றீங்க? அப்போ அது ஸவிசாரம்?? என்ன வித்தியாசம் ஏற்படும்?

அப்புறம் இந்த தேசம், காலம் என்பது இங்கே எதைக் குறிக்கும்? "தான்" என்பதையே மறந்த அவதூத நிலையா?

திவாண்ணா said...

விசாரத்தில் சப் க்ளாசிபிகேஷன் ஸவிசாரமும் நிர்விசாரமும்.
இருக்கும் இடம், காலத்தைத்தான் தேசம் காலம்ன்னு சொல்கிறது.
பின்னாலே ஒரு டேபிள் எல்லாத்தையும் சேர்த்து வரும்.