Thursday, July 8, 2010
யோக மார்க்கம்
இந்த சுற்றில் முன் அதிகம் பேசாமல் விட்ட யோக மார்க்கத்தைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
ஞான சாதனங்களான கர்மா முதலானவைகளை உபதேசிக்கிற சாத்திரங்கள் தர்சனம் எனப்படும். அவை ஆறு இருக்கின்றன. சாங்க்யம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ - உத்தர மீமாம்சை என்பன அவை. சாங்க்யம் கபிலரால் செய்யப்பட்டது.
முதலில் யோக விஷயத்தை உபதேசம் செய்தவர் ஹிரண்யகர்பர். பதஞ்ஜலி அதை சூத்திர வடிவமாக்கினார். யோக சாஸ்திரத்தால் சித்த குற்றங்களையும் வியாகரண பாஷ்யத்தால் சொற் குற்றங்களையும் வைத்திய சாஸ்திரத்தால் சரீர தோஷங்களையும் போக்க உதவினார் என போற்றுகிறார்கள்.
இந்த பதஞ்சலி யோக சாஸ்திரத்துக்கு எட்டு வியாக்கியானங்கள் உண்டு.
யோகம் என்றால் யோக ஆசனங்கள்தான் நமக்கு உடனே நினைவுக்கு வருகிறது. ஆனால் யோகம் என்பதற்கு இணைதல் என்பதே பொருள். ஐக்கியம்; ஆன்மா பரமான்மாவுடன் ஐக்கியமாதல் எனலாம்.
இந்த நூல் முக்கியமாக ஞானம் பெற தீக்ஷை கிடைத்தவருக்கே உரித்தாகும். இன்று யோகம் உலகமெங்கும் பரவிவிட்டது. பல வேறு மாற்றங்களும் அடைந்துவிட்டது. பல போலிகளும் வந்தாகிவிட்டது.
பதஞ்ஜலி 195 சூத்திரங்களிலேயே ஒரு நம்பத்தகுந்த தத்துவமும் வழிமுறையும் சொல்லி இருக்கிறார். அவை இங்கு பதியப்படுகின்றன. சமஸ்கிருத மூலமும் தமிழில் சுக்குமி லகுதி ப்பிலி ரீதியிலும் எழுதப்பட்டுள்ளது. இதன் பொருளை எளிய முறையில் புரிய வைக்க முயன்று இருக்கிறேன். சூத்திர வடிவில் இருப்பதால் இதற்கு வியாக்கியானம் தேவைப்படுகிறது. நிச்சயமாக இதுதான் பொருள் என்று இல்லை. ஆழ்ந்து யோசிப்போருக்கு வேறு பொருள் கிட்டக்கூடும்.
இதில் ஒரு ருசி வந்து தகுந்த குருவை நாட அவர் முழுவதும் வேறு விதமாகக் கூட புரியவைக்க முடியலாம்....
Labels:
ஆறாம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
முதலில் யோக விஷயத்தை உபதேசம் செய்தவர் ஹிரண்யகர்பர்.//
mmmm?????மஹாவிஷ்ணு?? ஈசன் தான் உபதேசித்தார்னு கேள்விப் பட்டேன். ஆனால் எதிலும் படிக்கலை. சூத்திரம் பண்ணினது பதஞ்சலிங்கற வரைதான் தெரியும்.
//யோகம் என்றால் யோக ஆசனங்கள்தான் நமக்கு உடனே நினைவுக்கு வருகிறது. ஆனால் யோகம் என்பதற்கு இணைதல் என்பதே பொருள்//
ஆமாம், ஆனால் சொன்னால் யாருமே புரிஞ்சுக்கறதில்லை, அப்புறமாச் சொல்றதையே விட்டுட்டேன்! :))))))))))
கொஞ்சம் படிச்ச, தெரிஞ்ச, ஓரளவுக்குப் புரிஞ்சுக்க முடிஞ்ச விஷயம்னாலும் நீங்க கடைசிலே சொல்லி இருக்கிற வழி என்னனு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன். ஆழமாப் படிச்சதில்லை. ஆவலோடு காத்திருக்கேன். போகப் போகப் புரியுதானும் பார்க்கணுமே! :(
கடலங்குடி வெளியீட்டை ஒட்டி இந்த பதிவுகள் எழுதப்பட்டன.
வழி எல்லாம் நான் சொல்லலை! பதஞ்சலிதான் சொல்லி இருக்கார்.ம்ம்ம் ஆக்சுவலி அவர் சில விஷயங்களை சொல்லி இருக்கார். வழின்னு அதை எடுத்துக்க முடியாது. அதை தகுந்த குரு மட்டுமே காட்டணும்.
புரியும் புரியும் புரியாம என்னா? :-))
mmmm?????மஹாவிஷ்ணு?? ஈசன் தான் உபதேசித்தார்னு கேள்விப் பட்டேன். //
இதுக்கு பதில் சொல்லலையே??
grrrrr user name, password ketkuthe?? :P
முதலில் யோக விஷயத்தை உபதேசம் செய்தவர் ஹிரண்யகர்பர்.//
mmmm?????மஹாவிஷ்ணு?? ஈசன் தான் உபதேசித்தார்னு கேள்விப் பட்டேன். ஆனால் எதிலும் படிக்கலை. //
கடலங்குடி புத்தகத்திலே "ஹிரண்யகர்பர்" இப்படித்தான் போட்டு இருக்கு.
நல்லதுங்க திவாய்யா, பலருக்கும் பலனுள்ளதாக இவை அமையும், மிக்க நன்றிகள்.
வாங்க ஜீவா! உற்சாகப்படுத்தியதுக்கு நன்றி!
அப்புறம் இந்த ஐயா எல்லாம் போட்டா ரொம்ப அன்னியமா உணருகிறேன். தயை செய்து தவிர்த்துடுங்க! திவா ன்னே கூப்பிடலாம்.(வயசிலே என்னைவிட சின்னவர் ன்னு நினைக்கிறேன். அதனால கீ அக்காவை இன்னும் கடுப்படிக்கணும்ன்னா திவாண்ணா ன்னு பல பேர் கூப்பிடறா மாதிரி கூப்பிடலாம். :-)
அதனால கீ அக்காவை இன்னும் கடுப்படிக்கணும்ன்னா திவாண்ணா ன்னு பல பேர் கூப்பிடறா மாதிரி கூப்பிடலாம். :-)//
grrrrrrrrrrrrrrrrrr
Post a Comment