अभावप्रत्ययालम्बना वृत्तिर्निद्रा ।।10।।
அபா⁴வ ப்ரத்யயாலம்ப³நா வ்ரு«த்திர் நித்³ரா || 10||
\
முன் கூறிய விருத்திகள் இல்லாததற்கு காரணமான தமோ குணத்தை விஷயமாக உடைய விருத்தி நித்திரை ஆகும்.இது ரஜோ சத்வ குணங்களால் உண்டாகும் விருத்திகளை அழிக்கும்.
மூன்று குணங்களும் எப்போதும் இருந்தாலும் ஒரு குணம் மேலோங்கி மற்றதை அழிக்கக்கூடும். இப்படி தமோ குணம் மேலோங்கி மற்றதை அழிக்கலாம்.
விழிப்பு நிலையும் இல்லாம, கனவு நிலையும் இல்லாம தூங்கும்போது தமோ குணமே மேல் நிற்கும். இதை சுசுப்தி என்பர். கனவு நிலயில் நாம் பல செயல்களை செய்யலாம்; இல்லை சாந்தமாகவும் இருக்கலாம். அதனால கனவு நிலையில் ரஜோ சத்வ விருத்திகள் இருக்கும். சுசுப்தி என்கிறது ஆழ் உறக்கம். இதுவும் ஸமாதியும் ஒன்று இல்லை. ஸமாதியில் இந்த தமோ குண விருத்தி இராது.
4 comments:
ஆழ்ந்த உறக்கத்திலே அதாவது கனவுகளே இல்லாத உறக்கத்திலே தமோகுணம் மட்டும் இருக்கும். ஆனால் நாம கனவு காணும்போது பலசெயல்களைச் செய்வதால் அப்போ ராஜஸமும், சத்வமும் இருக்கும்ங்கறீங்க இல்லையா? அப்போ சமாதி நிலையிலே தமோகுணம் இல்லாமல் சத்வகுணம் மட்டும் தானே இருக்கணும்? எந்தச் செயலும் இல்லாமல் அனைத்தும் அழிந்து, தான் என்ற உணர்வு கூட இருக்காதில்லையா?
சமாதி நிலையை சாத்வீக மனோ வ்ருத்தி இதுனு எடுத்துக்கலாமா? மனமே அழிஞ்சு போய் உண்மையைக் கண்டறிந்த பேராநந்த உணர்வில் இருக்குமா?
:-)) சமாதி பத்தி மெதுவா பார்க்கலாம். ஆமாம் சத்வமே அதிகம்.
சமாதி பத்தி மெதுவா பார்க்கலாம். //
:P
Post a Comment