ஜீவனின்
சரித்திரம்.
”நீயும்
வருகிறாயா ?”
என்றான்
ஜீவா.
பரமா
பதில் ஒன்றும் சொல்லவில்லை.
”ஆமாம்.
நாம்
வரைந்த சித்திரம்தான்.
ஆனாலும்
எவ்வளவு அழகாக இருக்கிறது,
நான் கீழே
போய் அதை இன்னும் அனுபவிக்கப்போகிறேன்.”
நிச்சலனமாய்
இருந்த பரமாவை பார்த்துவிட்டு
ஜீவா கீழே இறங்கினான்.
“என்னை
மறந்துவிடாதே;
நினைவில்
வைத்திரு.
சமயம்
பார்த்து கை கொடுக்க வேண்டி
இருக்குமோ என்னவோ!
” என்றவாறு
இறங்கிப்போனான் ஜீவா.
ஜீவாவை
பார்த்து “உன்னுடனேதான்
இருப்பேன்;
ஆனால் நீ
என்னை நினைவில் வைக்க வேண்டுமே!””
என்று
முனகிய பரமாவின் வார்த்தைகளை
உள்வாங்காமலே சென்றுவிட்டான்.
மானஸஸரஸ்ஸில்
சுற்றித்திரிந்த இரண்டு
ஹம்ஸங்களில் ஒன்று பிரிந்து
சென்றது.
--
’ஹும்!
நான்
வசிக்கத்தகுந்த ஊராக தேடி
அலைகிறேன்,
ஒன்று
கூட உவப்பாக இல்லை.
இப்போது
ஹிமாலயத்தின் தெற்கு மலைச்சரிவில்
அலைகிறேன்.
எவ்வளவு
நாள்தான் அலைவது?
ஆஹா!
அதோ
தூரத்தில் ஒரு கோட்டை தெரிகிறதே!
அருகில்
சென்று பார்க்கலாம்!’
கொஞ்சம்
நெருங்கியபின் ஜீவாவுக்கு
அந்த கோட்டை முழுதும் புலனாகியது.
“லக்ஷணமாக
இருக்கிறது” என்று நினைத்தான்..
’எவ்வளவு
நல்ல சாலைகள்.
சோலைகள்
அற்புதம். பல
மாடிக்கட்டிடங்கள்;
அவற்றின்
ஜன்னல்கள்… தங்கம்,
வெள்ளி,
இரும்பு
இவற்றால் அலங்கரித்து
இருக்கிறார்கள்.
வீடுகளில்
பல நவரத்தினங்கள் பதித்து
இருக்கிறார்கள்.
ம்ம்ம்ம்
அசுரர்களின் போகவதி என்று
பெயர் பெற்ற நகரம் இப்படித்தான்
இருக்குமோ?
இந்த ஒரு
கோட்டைக்குள் எத்தனை சபா
மண்டபங்கள்,
நாற்சந்திகள்,
வீதிகள்,
விளையாட்டுக்கூடங்கள்,
கடைத்தெருக்கள்,
சத்திரங்கள்,
வெற்றித்தூண்கள்….
பலவித
மரங்கள் வேறு,
வரிசை
வரிசையாய்..
எப்படி
சாத்தியமாயிற்று?
ஜீவா
அந்த கோட்டைக்குள் புகுந்தான்.
புற நகரிலேயே
ஒரு அருமையான பூஞ்சோலை இருந்தது.
தெய்வீகமான
மரங்கள், செடி
கொடிகள்,
பறவைகளின்
இனிய கானம் தத்திச்செல்லும்
தடாகங்கள்.
அட!
புலி,
சிங்கம்
போன்ற காட்டெருமைகள்
இருக்கின்றனவே?
ஆனால்
அவை சாதுவாக இருக்கின்றன.
பயமில்லை.
குயில்கள்
கொஞ்சும் இந்த சோலைகளுக்கு
வழிப்போக்கர்கள் தாமாகவே
வருவர்.
சந்தேகமில்லை.
ஜீவா
பிரமித்து நின்றான்.
உவமையில்லா
சௌந்தரியம்.
அழகிய
மூக்கு,
முத்துப்பற்கள்,
கன்னங்கள்,
அழகிய
வாய். காதுகள்.
அவளது
முகத்தின் சமச்சீரான அமைப்பை
பார்த்து ஜீவா வியந்தான்.
கரிய உடல்
அழகில்லை என்று யார் சொன்னார்கள்?
மஞ்சள்
பட்டு எவ்வளவு பொருத்தமாக
இருக்கிறது.
தங்க நிற
மேகலை, கால்களில்
கிங்கிணி நாதம் எழுப்பும்
கொலுசுக்கள்….
மதமடைந்த
பெண் யானை என்று புலவர்கள்
எழுதுவது இவளைப்பற்றித்தான்
போலும் என்று நினைத்தான்
ஜீவா.’
No comments:
Post a Comment