Pages

Tuesday, February 9, 2016

கிறுக்கல்கள்! - 87



நிஷ்காம்ய கர்மம் பற்றி மாஸ்டரிடம் கேட்டார்கள்.
அது அதுவா? அது எந்த பிரதிபலனும் - காசோ, ஏதேனும் லாபமோ, பாராட்டோ- எதிர்பார்க்காம அந்த வேலையை நேசிப்பதாலேயே வேலை செய்வது.
ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு மர வெட்டியை தன் ஆராய்ச்சிக்காக அமர்த்திக்கொண்டார். தன் தோட்டத்துக்கு அழைத்துப்போய் ஒரு மரத்துண்டை காட்டினார். இதை இந்த கோடரியால வெட்டற மாதிரி பண்ணணும். ஆனா கூரான பகுதியை பயன்படுத்தக்கூடாது. வெட்டின விறகு கிடைக்காட்டா பிரச்சினை இல்லை. மணிக்கு நூறு டாலர்.

என்னாடா இது. இந்த வேலைக்கு இவ்வளோ கூலியா என்று தோன்றினாலும் மரவெட்டி ஒத்துக்கொண்டார்.

இரண்டு மணி நேரத்துல அவர் வந்து சொன்னார் “ ஐயா! மிடில. நா போறேன்”
ஏம்பா? நல்ல கூலியாச்சே?”
ஆமா. இல்லைன்னு சொல்லலை. ஆனா நா மரம் வெட்டறப்ப அது துண்டு துண்டா சிதறணும்!”

No comments: