“செயல் ஞானத்துக்கு கொண்டுப்போகுமா?”
“கொண்டு
போகும். ஆனா
செயல் அதுக்காகவே செய்யப்படணும்.
அதுல லாபம்
ஏதும் இருக்கக்கூடாது”
ஒரு
முறை மாஸ்டர் தன் நண்பருடைய
மகனுடன் புட் பால் மேட்ச்
பார்க்கப்போனார். நண்பர்
புட்பால் ப்ளேயர். ஆட்டம்
ஒரு பயிற்சி ஆட்டம் மட்டுமே.
நண்பரின்
ஆட்டம் அன்று பிரமாதமாக
அமைந்தது. மிகுந்த
எதிர்ப்பை சமாளித்து அருமையான
கோல் அடித்த போது ஸ்டேடியமே
எழுந்து நின்று கை தட்டியது.
ஆனால்
பையன் அசுவாரசியத்துடன்
இருந்தான்.
ஏன்பா,
எல்லாரும்
உங்க அப்பா அடிச்ச கோலை
பாராட்டறாங்க, நீ
ஏன் சுவாரசியம் இல்லாம இருக்க?
ஹும்!
இன்னைக்கு
செவ்வாக்கிழமை. இது
ப்ராக்டிஸ் மேட்ச்.
வெள்ளிக்கிழமைதான்
நிஜ மேட்ச். கோல்
வேண்டியது அன்னைக்குத்தான்!
என்ன
செய்யறது? கோலுக்காக
கோல் அடிக்கற செயல் இல்லாம
வேற செயல்களுக்குத்தான்
மதிப்பு இருக்கு!
No comments:
Post a Comment