சமீபத்தில்
மனீஷா பஞ்சகம் பற்றி பேச்சு
இருந்தது இல்லையா?
அதைத்தொடர்ந்து
வலையில் தேடினேன்.
முன்னே
ஏதோ அஞ்சல் குழுமத்தில்
அடிபட்ட நினைவு.
போய்
பார்க்க,
ஆமாம்,
கனடா
நாட்டு குழு ஒன்றில் பதிவு
இருந்ததாக பகிரப்பட்டு
இருந்தது.
எப்பொருள்
குறள் நினைவுக்கு வரவே கொஞ்சம்
பொருளை சரி பார்க்கும்படி
பையரிடம் சொல்லி இருந்தேன்.
அப்போதைக்கு
படு பிஸியாக இருந்ததால்
நேற்றுதான் அந்த வேலை முடிந்தது.
மற்றவருடையதை
சரி செய்வதற்கு பர்மிஷன்
கிடையாதே என்று சொல்லி தானே
தன் நடையில் பொருள் எழுதிவிட்டார்.
மேலும்
நான் எதற்காக இதை கேட்கிறேண்
என்றுதெரிய வந்ததும் தானே
அதற்கும் எழுதிவிட்டார்.
மகன்
தந்தைக்கு.....
இனி
கட்டுரை சில பதிவுகளாக வரும்.
ॐ
॥ मनीषापञ्चकम् ॥
ஶ்ரீ ஆதி சங்கரர் வர்ண விபாகம் தேவையில்லை என்று கூறியதாக சிலர்
கூறுகின்றனர். ஆனால் உண்மையில் அவர் சொன்னது என்ன என்பதைக் கவனிக்க
வேண்டும். ஞான நிலையை அடைந்தவனை கௌரவிக்க வேண்டும் என்ற விஷயத்தில் அவனது உடல் எத்தகைய பிறப்புடையது என்பதைக் கவனிக்கவேண்டியதில்லை என்றே கூறியுள்ளார். அன்றியும் வாழ்க்கை நடைமுறையில் எந்த குலத்தில் பிறந்தவரானாலும் எந்த குலத்தின் ஸ்வதர்மத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று அவர் கூறவில்லை. (அப்படியிருந்தால் “ஸ்வ”தர்மம் என்ற சொல்லுக்கு என்ன பொருள் இருக்கும்?)
கதை எப்படியிருக்கிறது என்றால், ஆசார்யர் காசியில் வாசம் செய்கையில் விச்வநாதர் சண்டாள வடிவில் அவர் எதிரில் வருகிறார். அப்பொழுது ஆசாரம் கருதி ஆசார்யர் விலகிச் செல் என்று கூறுகிறார். சண்டாள வடிவினரான ஈசனோ அதற்கு கீழ்கண்டவாறு மறுமொழி பேசுகிறார்.
अन्नमयादन्नमयमथवा
चैतन्यमेव चैतन्यात् ।
यतिवर दूरीकर्तुं वाञ्छसि
किं ब्रूहि गच्छ गच्छेति ॥ १ ॥
“சிறந்த துறவியே, செல் செல் என்று சொல்வதால் (எனது) அன்னமயமான உடலை
(உங்களது) அன்னமயமான உடலிலிருந்து விலகும்படிக் கூறுகிறீர்களா? அல்லது
(இந்த உடலில் உள்ள) சைதந்யத்தை (உங்கள் உடலில் உள்ள) சைதந்யத்திலிருந்து
விலக்க விரும்புகிறீர்களா?”

No comments:
Post a Comment