Pages

Monday, August 14, 2017

மனீஷா பஞ்சகம் - 6








या तिर्यङ्नरदेवताभिरहमित्यन्तः स्फुटा गृह्यते
यद्भासा हृदयाक्षदेहविषया भान्ति स्वतोऽचेतनाः ।
तां भास्यैः पिहितार्कमण्डलनिभां स्फूर्तिं सदा भावय-
न्योगी निर्वृतमानसो हि गुरुरित्येषा मनीषा मम ॥ ४ ॥

யா திர்யங்னரதே³வதாபிரஹமித்யந்த: ஸ்பு²டா க்³ருʼஹ்யதே
யத்³பாஸா ஹ்ருʼ³யாக்ஷதே³ஹவிஷயா பாந்தி ஸ்வதோ(அ)சேதனா: |
தாம்ʼ பாஸ்யை: பிஹிதார்கமண்ட³லனிபாம்ʼ ஸ்பூ²ர்திம்ʼ ஸதா³ பாவய-
ந்யோகீ³ நிர்வ்ருʼதமானஸோ ஹி கு³ருரித்யேஷா மனீஷா மம ||  4 ||

விலங்குகள், மனிதர்கள், தேவர்கள் (முதலிய) அனைவரும் “தான்” என்று
(
உடலுக்கும் மனதிற்கும்) உள்ளே தெளிவாக உணர்கிறார்கள். சுய ப்ரகாசமற்றதான
மனது, இந்த்ரியங்கள், உடல், (வெளி) விஷயங்கள் ஆகியவை இதன் ப்ரகாசத்தால்
தான் தெரிகின்றன. ஆனால் தன்னால் தெரியும் (மேகத்தால்) ஸூர்ய மண்டலம்
எப்படி மறைக்கப்படுகிறதோ, அவ்வாறே இந்த உணர்ச்சியானது தன்னாலேயே
தெரியப்படுத்தப்பட்ட இவற்றால் மறைக்கப்படுகிறது. அந்த உணர்ச்சியையே
எப்பொழுதும் த்யானித்திருக்கும் யோகியானவரே நிம்மதியடைந்த உள்ளத்தினராவார். (அத்தகையவரே) குரு என்பது எனது தீர்மானம்.

No comments: