Pages

Wednesday, August 16, 2017

மனீஷா பஞ்சகம் - 8





இப்படி ஆசார்யர் கூறி வணங்க ஈசன் சண்டாள உருவம் மறைந்து கைலாஸபதியான ரூபத்தில் காட்சியளிக்க ஆசார்யர் கூறுகிறார் -



दासस्तेऽहं देहदृष्ट्याऽस्मि शंभो
जातस्तेंऽशो जीवदृष्ट्या त्रिदृष्टे
सर्वस्याऽऽत्मन्नात्मदृष्ट्या त्वमेवे-
त्येवं मे धीर्निश्चिता सर्वशास्त्रैः

தா³ஸஸ்தே(அ)ஹம்ʼ தே³ஹத்³ருʼஷ்ட்யா(அ)ஸ்மி ஸ²ம்போ
ஜாதஸ்தேம்ʼ(அ)ஸோ² ஜீவத்³ருʼஷ்ட்யா த்ரித்³ருʼஷ்டே |
ஸர்வஸ்யா(அ)(அ)த்மன்னாத்மத்³ருʼஷ்ட்யா த்வமேவே-
த்யேவம்ʼ மே தீர்னிஸ்²சிதா ஸர்வஸா²ஸ்த்ரை: ||

(
அனைத்து நன்மைகளுக்கும் இருப்பிடமான) சம்போ, உடல் ரீதியில் (நானும் ஒரு
மனிதன் என்று பார்த்தால்) நான் உனது தாசன். முக்கண்ணனே, ஜீவன் என்ற
ரீதியில் (தீயின் தீப்பொறி போல் என்னிடம் உள்ள சைதன்யமானது உனது பரந்த
சைதன்யத்தின் ஒரு பகுதி என்று கருதினால்) நான் உனது அம்சமாக ஆகிவிடுகிறேன். அனைத்திற்கும் (உள்ளிருப்பதால் அஃதனைத்திற்கும்) தன்
சொரூபமானவனே, (அவ்வாறு) என் ஸ்வரூபமாக(வும் நீயேதான் இருக்கிறாய் என்று) ஆராய்ந்தால் (நான்) நீயே தான். ஸகல சாஸ்த்ரங்களின்படியும் நான் அடைந்த தீர்மானமான எண்ணம் இதுவே.

॥ इति श्रीमच्छङ्करभगवतः कृतौ मनीषापञ्चकं सम्पूर्णम् ॥

No comments: