Pages

Wednesday, August 9, 2017

மனீஷா பஞ்சகம் -3






जागृत्स्वप्नसुषुप्तिषु स्फुटतरा या संविदुज्जृम्भते
या ब्रह्मादिपिपीलिकान्ततनुषु प्रोता जगत्साक्षिणी ।
सैवाहं न च दृश्यवस्त्विति दृढप्रज्ञापि यस्यास्ति चे-
च्चाण्डालोऽस्तु स तु द्विजोऽस्तु गुरुरित्येषा मनीषा मम ॥ १ ॥



ஜாக்³ருʼத்ஸ்வப்னஸுஷுப்திஷு ஸ்பு²டதரா யா ஸம்ʼவிது³ஜ்ஜ்ருʼம்பதே
யா ப்³ரஹ்மாதி³பிபீலிகாந்ததனுஷு ப்ரோதா ஜக³த்ஸாக்ஷிணீ |
ஸைவாஹம்ʼ ந ச த்³ருʼஸ்²யவஸ்த்விதி த்³ருʼப்ரஜ்ஞாபி யஸ்யாஸ்தி சே-
ச்சாண்டா³லோ(அ)ஸ்து ஸ து த்³விஜோ(அ)ஸ்து கு³ருரித்யேஷா மனீஷா மம ||  1 ||
|

விழிப்பு, கனவு, ஆழ் உறக்கம் (ஆகிய மூன்று நிலைகளிலும்) மிகவும் தெளிவாக
(
உறக்கத்திலும் நான் உறங்குகிறேன் என்ற ஸூக்ஷ்ம உணர்ச்சி இருப்பதால்)
எந்த ஒரு அறிவு வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறதோ, (உலகைப் படைத்த முதல்
ஜீவரான) நான்முகன் முதல் (மிகச்சிறிய) எறும்பு வரையிலான உடல்களில்
(
அல்லது அதை விட சிறிய கிருமிகளின் உடல்களிலும் கூட) (எந்த அறிவு) உலகம்
(
அனைத்திற்கும்) ஸாக்ஷியாக ஊடுருவியுள்ளதோ, அந்த சைதந்யமே தான்,
அன்றியும் அதனால் (மாயையால்) காணப்படும் இந்த உடல் முதலிய பலவேறு
வஸ்துக்கள் நான் அல்ல என்ற விவேகம் யாருக்கு த்ருடமாக இருக்கிறதோ
அப்படிப்பட்டவர் (உடற்பிறப்பின்படி) சண்டாளராகட்டும், அல்லது அவர்
ப்ராஹ்மணராகட்டும், அவர் (வணங்கத்தக்க) குருவாக (தகுந்தவர்) என்ற இது
எனது தீர்மானம்.

No comments: