Pages

Monday, August 28, 2017

வேதம் - 5




எது புலன்களுக்கு புலப்படாதோ நம் செயல்திறனுக்கு அப்பாற்பட்டு இருக்கிறதோ அந்த ஒலி திரளுக்கு மந்திரம் என்று பெயர் வைத்து இருக்கிறோம். ரசவாதத்திலே பதார்த்தம் என்கிறார்கள். பிரமாணம், நியதி அல்லது கிரமம் என்பர். எந்த எந்த பொருளை சேர்க்கணும்? என்ன அளவு சேர்க்கணும்? எந்த வரிசையில் எந்த சூழ்நிலையில் சேர்க்கணும்? இதுக்கு எல்லாம் ஒரு விதி இருக்கும். அந்த முறையில் சேர்க்கும் போது பல புதிய பொருட்கள் உருவாகும். அது போல சேர்க்க வேண்டிய ஒலிகள் - பதங்கள்; அவற்றை சேர்க்க வேண்டிய முறை அதாவது ஆனுபூதி கிரமம் என்னும் வரிசை; அதை சொல்ல வேண்டிய முறை ஸ்வரம் என்னும் ஒலிக்குறிகள் - இவை மூன்றும் சேர்ந்ததுக்கே மந்திரம் என்று பெயர்

 ஒருவர் எதை வேணுமானாலும் சொல்லலாம். அவருடைய தனிப்பட்ட தன்மையில் பக்தியினாலேயோ அல்லது அதிகாரத்தினாலேயோ தன் கருணை/ அன்பினாலேயோ பலவற்றை சொல்லலாம். ஆனால் என்ன நடக்கும் என்பது அந்த சொல்லுடைய ஆற்றலால இல்லை. சொல்பவருடைய ஆற்றலால நடக்கும். ராஜா சொன்னா நடக்கறதுன்னா அது அதிகாரத்தோட சக்தி. பெரியவங்ககிட்ட இருக்கறது அன்போட, கருணையோட சக்தி. எல்லாருக்கும் தக்கபடி இறங்கி வந்து கனிவோட பேசறது ஞானியோட கருணை என்கிற சக்தி. இப்படி இல்லாம வேதத்துடைய சக்தி வித்தியாசமானது

 ஒலிக்கூட்டத்தில எது முன்னே எது பின்னே வர வேண்டும் என்கிற கிரமப்படி இருக்கிற இந்த வேதம் அழியாது. மற்ற ஒலிகள் அழியலாம். அக்னி வாயு வருணன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டுதான் இருக்கோம். அதெல்லாம் அழிந்தாலும் அழியும்; ஆனால் இஷேத்வா ஊர்ஜேத்வா என்பது வேத தொடரானால் அது எத்தனை காலமானாலும் அப்படியேத்தான் இருக்கும். யுகம் முடிந்து பிரளயம் வந்து திருப்பி வேதம் வெளிப்படும் போதும் அதேதான் வரும். இதை ஆநுபூதி நித்யத்வம் என்கிறார்கள்.

No comments: