நேத்து
சீக்கிரமே படுக்கப்போனேன். பேரனும் பேத்தியும் தாத்தா கதை சொல்லுன்னு வந்தாங்க.
ரைட்ன்னு ஒரு கதை சொல்லியாச்சு. அப்புறம் என்ன சொல்லலாம்ன்னு யோசிச்சு கும்பகர்ணன்
பத்தி கதை சொல்ல ஆரம்பிச்சேன். கதை கொஞ்ச தூரம் போச்சு. ராவணன் கும்பகர்ணனை
எழுப்பச்சொன்னான். எல்லாரும் பயந்தாங்க. ஏன் தெரியுமா?
அவனை லேசில
எழுப்ப முடியாது ன்னு ஆரம்பிச்சு பேத்தி சம்ஸ்க்ருத ஸ்லோகம் ராமாணயத்திலேந்து கோட்
பண்ணா. பேரன் அவன் என்ன வரம் கேட்கப் பாத்தான் என்ன கேட்டான்னு தெளிவா சொன்னான்.
நா ஞே ன்னு முழிச்சிண்டு இருந்தேன். நானே சொல்லட்டுமான்னு பேத்தி மீதி கதையை
சொல்லி முடிச்சா. வெரி குட் அதான் சொல்ல வந்தேன்னு சொல்லிட்டு சுப ராத்திரி
சொல்லிட்டேன்.
சின்ன
குழந்தைகளா இருக்கறப்பவே ஆன்மீகத்தோட வளத்துட்டா நல்லது. அப்புறம் வளையறது கஷ்டம்.
ஒரு வேளை அவங்க பெரியவங்க ஆனா பிறகு சிந்தனை வேற மாதிரி போனாலும் பிரச்சினை இல்லை.
ஆனா பின்னால் ஆன்மீக சிந்தனையே தொடருமானா தே அல்ரெடி ஹாவ் எ ப்ளையிங் ஸ்டார்ட்!
சீக்கிரமாவே பயபக்தி / மூட பக்தியிலேந்து அடுத்த ஸ்டேஜ் போயிடலாம்.
பசங்க
சாதாரணமா எதையுமே நம்மை இமிடேட் பண்ணித்தான் கத்துப்பாங்க.
நாம தினசரி
பூஜை செய்யறப்பவோ இல்லை வேற மாதிரி சாமி கும்பிடறோமோ அப்பா அவங்களையும் கூட
வெச்சுண்டா அவங்களும் சொல்லாமலே செய்வாங்க. பூஜை செய்யறதானா சின்ன சின்ன வேலைகளை
அவங்களோட சேந்து செய்யலாம். பூ பரிக்கப்போலாமா? சாமி படத்தை எல்லாம் துடைக்கலாமா?
பழைய பூ எல்லாம் எடுத்துடலாமா? லாம் லாம்! செய்யலாம். தானா கூட உற்சாகமா
செய்வாங்க. அபிஷேகம் நான் நான் செய்யறேன்னு முன் வருவாங்க. கூடிய வரை செய்ய
விடனும். ஆரம்பத்திலேயே இதெல்லாம் உனக்கு வேண்டாம்ன்னு சொன்னா அப்பறமா வேணும்ன்னு
சொன்னாக்கூட வராது. சின்ன வயசிலேயே சாமி நல்ல புத்தி கொடுன்னு சொல்லிக்கொடுத்து
வளத்தா பின்னால சாமி கூட வியாபாரம் பேச மாட்டாங்க. (ஆமா, இதுதான் சின்ன
பசங்களுக்காக காயத்ரின்னு தெரியுமில்ல? ரைட்!)
No comments:
Post a Comment