Pages

Tuesday, August 22, 2017

வேதம் - 2





வேதம்தான் நமக்கு எளிதா புலப்படாத அறிவுக்கு திறவுகோல். அடிப்படையிலே இந்த ஐம்பெரும் பூதங்களை நாம் கண்கூடா கண்டு கொண்டு இருக்கோம். அறிவியல் விஞ்ஞானிகள் இவற்றை ஆராய்ந்து பல வியக்கக்கூடிய தகவல்களை உட்பொருளை அவ்வப்போது வெளியிட்டுக்கொண்டு இருக்காங்க . மாக்ஸ் பிளான்க் மிக பெரிய விஞ்ஞானி. அவர் சொன்னார் : இந்த உலகை ஆராய ஆராய இறைவனுடைய எண்ணிப்பார்க்க முடியாத அறிவையும் ஆற்றலையும் இன்னும் நன்றாக அறிந்தேன். ஒவ்வொரு அறிவியல் ஆய்வும் இறைவனுடைய இந்த ஆச்சரியப்படக்கூடிய ஆற்றலை இன்னும் விளக்குவதாகத்தான், அதுக்கான சான்றாத்தான் இருக்கணும்.

மாறா அவனிடமிருந்து எது தனியாக விலகி போறதோ. விலக்கிக்கொண்டு போகிறதோ, அவனை தொலைவாக்கறதோ அல்லது தன்னிச்சையா செயல்பட தூண்டறதோ, எல்லாம் தானாக வந்ததுன்னு சொல்கிறதோ அதுக்கு அஞ்ஞானம்ன்னு பேர். அது விஞ்ஞானம் இல்லை
 
இறைவனுடைய பெருமைகளை இன்னும் விளக்கறதே விஞ்ஞானம்.. பிரபஞ்சத்தை பார்க்கிறோம். அதுல இன்னும் ஆயிரமாயிரம் அண்டங்கள் இருக்குன்னு விஞ்ஞானிகள் கண்டு பிடிச்சு நமக்கு சொல்றாங்க. அப்ப நமக்கு இறையின் சக்தி, படைப்புத்தன்மை இன்னும் கொஞ்சம் விளங்கறது

விஞ்ஞானமும் நல்ல நெறி சார்ந்தவர்களால உணரப்பட்டு இருந்தால் இப்படி நெறி சார்ந்த விஞ்ஞானிகளால விளக்கப்பட்டாலும் விஞ்ஞானம் இறைவனின் பெருமைகளை இன்னும் விளக்குமே ஒழிய அவனை அறிய வைக்க முடியாது. அது அதுக்கு ஒரு உபாயமா ஆக முடியாது
 
அது இறைவனுடைய படைப்புகளையும் இந்த உலகையும் இவற்றோட இயல்பையும் நோக்கங்களையும் இன்னும் விரிவா ஆழமா எடுத்துக்காட்டும. அதனால அவன்மேல வைத்திருக்கிற மதிப்பையும் அன்பையும் அறிஞ்சுக்க இருக்கிற ஈடுபாட்டையும் ஆழப்படுத்தி அதிகமாக்குமே ஒழிய அவனை காட்டித்தராது. அவன் இருக்கான்னு சொல்ல இந்த உலகத்தோட இருப்பே போதும். ஆனா அவனை இன்னார்ன்னு அறிய உணர அவனோட இயைந்து போக தேவையான மார்க்கங்கள் வேதத்தில் மட்டுமே இருக்கு.. வேதங்களோட முக்கிய நோக்கமே அதுதான். அதுக்கு இன்னும் பல நோக்கங்கள் இருந்தாலும் அதோட பிரதான நோக்கம் வேற. எல்லாருக்கும் தாயா தந்தையா வழிகாட்டியாவும் எல்லாமாயும் இருக்கற, எல்லாவற்றையும் தோற்றுவிக்கவும் ஒடுக்கவும் செய்கிற இறைவனை காட்டிக் கொடுத்து அவனை அடையச்செய்கிறதே அதோட பிரதான நோக்கம் .

No comments: