Pages

Friday, August 18, 2017

மனீஷா பஞ்சகம் -10

ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கிறது. அதை மற்றவர் மனது புண்படாமல் வெளிப்படுத்துவது அவரவர் சுதந்திரம்.
ஜாதி இல்லை ஜாதி இல்லை என்று சில பலர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் அனேகமாக எதிர்ப்பது ஜாதியை இல்லை. அதன் பெயரால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைத்தான்; ஒருவர் ஒரு ஜாதியை சேர்ந்தவர் என்பதற்காகவே அவரை பற்றி இப்படி இப்படி என்று முடிவு கட்டுவதையே எதிர்க்கிறார்கள்; அதன் பெயரால் ஒருவரை ஒடுக்குவதையே எதிர்கிறார்கள்.
இப்படி இல்லாமல் எல்லாம் ஒண்ணுன்னு பாட்டு பாடறது எப்படி சரியா இருக்கும்? இயற்கையில் யாருமே இன்னொருவர் போல இல்லை. ஒருவர் உடல் வலிமை மிக்கவரா இருக்கார். பலர் அப்படி இல்லை. சிலர் புத்திசாலியா இருக்கார். பலர் அப்படி இல்லை. இந்த புத்திசாலித்தனத்துலேயே பல வெரைடியும் இருக்கும்.
ஆயிரத்தெட்டு காரணிகளை பார்த்தா ஒருவர் கூட இன்னொருவர் மாதிரி இல்லைன்னு புரியும்.
சமூகத்தை பொருத்த வரை யார் எப்படி திறமையா பங்களிக்க முடியுமோ அப்படி முடிஞ்ச வரை அளிக்கணும். எல்லாரும் வக்கீலாக வேண்டிய தேவை இல்லை. எல்லாரும் ஐடி எஞ்சினீர் ஆக தேவை இல்லை. எல்லாரும் டாக்டர் ஆக வேண்டிய தேவை இல்லை.
சமூக முன்னேற்றம் சரியான வழியில நடக்கலை. செருப்பு தைக்கறவர் இப்ப மேம்பட்ட டெக்னாலஜில பெரிய செருப்பு கடை வெச்சு இருக்கணும். ஏன் பேட்டா ன்னு ஒரு நிறுவனம் வந்து பலருக்கு வேலை இல்லாம ஆக்கணும்? இதே போலத்தான் பல துறைகளும். ப்ரொடக்‌ஷன் பை மாஸ் இல்லாம மாஸ் ப்ரொடக்‌ஷன் வந்துடுத்து.
சமூகத்தை பொருத்த வரை யார் எப்படி திறமையா பங்களிக்க முடியுமோ அப்படி முடிஞ்ச வரை அளிக்கணும்ன்னு சொன்ன மாதிரியே அரசுகள் யார் யாருக்கு என்ன தேவையோ அதை அடிப்படை லெவல்ல அளிக்கணும். ஒரு வேளையாவது வயிறு நிறைய உணவு, கிழியாத சேலை வேட்டி, நனையாத படிக்கு மேலே ஒரு கூரை தவிர யாரும் எதையும் எதிர்பார்க்கக்கூடாது. அதுக்கு மேல அவரவர் சாமர்த்தியத்துல சம்பாதிச்சுக்கட்டும்.
ஜாதி என்கிறது போகவே போகாது. இப்போ இருக்கற வடிவத்தில இல்லாட்டாலும் வேறு ஏதேனும் ஒரு வடிவில இருந்து கொண்டுதான் இருக்கும்.
நிதர்சனத்தை ஒத்துக்கொண்டு இந்த சாதிகள் மோதிக்காம இருக்க என்ன செய்யலாம்ன்னு யோசிச்சா மட்டும் போதும். ஆனா இது பலரோட பிசினஸ்ஸா இருக்கிறதால அது இப்போதைக்கு நடக்கும்ன்னு தோணலை. சாதி இல்லைன்னு முழங்குகிற அரசியல்வாதிகளேதான் சண்டை சச்சரவை தூண்டுறவங்களாகவும் இருக்காங்க. அவங்களேதான் ஒரு பக்கம் சாதி இல்லைன்னு சொல்லிக்கொண்டே இன்னொரு பக்கம் இன்னின்ன சாதிக்கு ஒதுக்கீடுன்னு கூவிகிட்டே இருக்காங்க.
இதையே பிடிச்சுண்டு பொலம்ப நான் தயாரா இல்லை.
ஜாதி இல்லைன்னு சொல்லறது அவரவர் விருப்பம்; கருத்து சுதந்திரம்.
சங்கரர் அப்படி சொல்லலை.
அப்படி சொன்னதா பெரிய பெரிய மனிதர்கள் பிரசாரம் பண்ணி கேட்டு இருக்கேன். அவங்களுக்கு தெரியலைன்னு சொல்ல முடியாது. அப்போதைக்கு அது அவங்களுக்கு சௌகரியமா இருந்திருக்கலாம்.
அப்படி சொல்லறவங்க எல்லாரும் கோட் பண்ணது இந்த மனீஷா பஞ்சகத்தைத்தான். அதைப்பத்தி நாம வலையில தேடினாலும் அதிகம் கிடைக்காது. "கர்மத்தை செய்; பலனை எதிர்பாராதே" ன்னு பகவத் கீதையில பகவான் க்ருஷ்ணர் சொன்னதா மிஸ் கோட் உலவறா மாதிரிதான் இதுவும்.
தொடரை படிச்சவங்களுக்கு புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.
ஜாதி இல்லைன்னு சொல்லிக்கறது உங்க சுதந்திரம்; ஆனா அதுக்கு சங்கரரை ஆதாரமா இழுக்காதீங்க. அவ்ளோதான் என் வேண்டுகோள்.

No comments: