Pages

Wednesday, August 30, 2017

வேதம் - 6




சரி, இப்போ மந்திரம் என்பதோட பொருளை பார்க்கலாம். மந்தாரம் த்ராயதே இதி மந்த்ரஹ. எவனொருவன் உள்ளே மனனம் செய்கிறானோ, மனத்தால் நினைக்கிறானோ அவனை காக்கக்கூடியது மந்த்ரம். இப்போ இந்த ஒலி ஆற்றலை பார்த்தால், நிறைய வித்தியாசங்கள் உண்டு

 மூன்று மந்திர ஜாதிகள் உண்டு
 
முக்கியமாக மந்த்ரம் என்று சொன்னாலே வேத மந்திரங்கள்தான். நியதியால் மந்த்ரத்துவத்தை பெற்று இருப்பது, நியதி என்பது கயிற்றின் மேலே எண்ணெய் கிண்ணத்தை கையில் வைத்துக்கொண்டு நடப்பது போல. இப்போது வைத்துக் கொள்ளலாம் அப்போது வைத்துக் கொள்ளலாம் என்று எல்லாம் சமாதானங்கள் இல்லாமல் இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற விதியில் இயங்குவது. சொன்ன சொல் காக்கக்கூடிய தன்மை பெற்றது, - யஸ்ய ஸ்மரண மாத்ரேண - நினைத்த மாத்திரத்திலேயே காப்பது- பகவானின் திரு நாமங்கள் முக்தி தரும் என்பர். அது போல.

கதியால இயங்குவன உண்டு. கதி விசேஷம் என்றால் அனுஷ்டானங்களில், உபாசனைகளில் வரும் மந்திரங்கள். எத்தனயோ உபாசன விதிகளை பார்க்கலாம். ஆகமங்களில் உள்ள விதானங்கள், தந்திர சாஸ்த்திரங்களில் வருவன. அவற்றிலேயும் அமுக்கியமான மந்த்ரத்துவம் உண்டு.இப்படி
வேதத்தில் வழங்கப்படுகின்றவனாய் உள்ள இறைவனை பல வித வடிவங்களிலே வழிபடுவது இரண்டாம் வகை.
 
மூன்றாவதாக தொல் காப்பியர் சொன்னபடி 'நிறை மொழி மாந்தர் ஆணையிற்கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப' என்பது போல, நல்ல நெறியாளர்களாக பண்பாளர்களாக இறைவனிடம் நிறைந்த அன்பு பூண்டவர் வாயில் இருந்து வருவன எல்லாமே மந்திரம்தான்.
வேத வேத்யனாய் வேதமே வடிவானவனாய், வேதாந்தம் அறிந்து இருக்கும் ஞானிகள் தவ பெரியோர் இறைவனது திருவடிகளிலே தவிர வேறு ஒரு பொருளிலேயும் பற்றில்லாமல் இருக்கும் பெரியோர்கள் அவர்களுடைய அனுஷ்டானங்களும் வாய் மொழிகளும் மந்திரங்களை ஒத்தவை

ஆனால் சாஸ்த்திர வழக்கின் படி முக்கியமாக மந்திரம் என்பது வேதம் மட்டுமே.  

No comments: